இடுகைகள்

2004 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

புதிய தமிழ்மணம்

படம்
உற்சாகத்துடன் சாதிக்கும் நபர்களை பார்க்கும் போதெல்லாம் ஒரு உத்வேகம் பிறக்கும் எனக்கு. வலைப்பதிவுகளை தொகுத்து காண்பிக்கும் இணையச்செயலி ஒன்றினை செய்திட வெகுநாளாக ஆவல் கொண்டிருந்தேன். சொல்லுக்கும் செயலுக்கும் உள்ள நீண்ட இடைவெளியை நான் மெல்ல ஊர்ந்து கடக்கும் முன்னே காசி தமிழ் மணம் வீசத் தொடங்கினார். நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக இனிதே வளர்ந்துவரும் இந்த தளத்துக்கு நான் ஏதாகிலும் செய்ய முடியுமா என்று யோசித்துப் பார்த்தேன். நேரமின்மையாலும் என்னை விட வேகமான/திறமையான வரைகலையாளர்கள் இருப்பதாலும் என்னுடைய ஆர்வம் என்னை முழுநேர Developer ஆக இருக்க தூண்டுவதாலும் இப்போதெல்லாம் நான் கணினி வரைகலைப் பணிகளை ஒதுக்கிவிடுகிறேன். காசி ஏற்கனவே திறம்பட தளத்தை இயக்கிவருவதால் வேறு வழியின்றி என்னுடைய பங்களிப்பாக சற்று மேம்படுத்தப்பட்ட கீழ்கண்ட வடிவமைப்பை அமைத்திருக்கிறேன். உங்களின் கருத்துக்களைக் கேட்டு வேண்டிய மாற்றங்கள் செய்தபின் காசியிடம் ஒப்படைத்து விடுவேன். எனவே படம் பார்த்து கருத்து(கதை அல்ல!) சொல்லுங்கள் :)

உங்கள் திஸ்கி வலைப்பதிவு தமிழ்மணம் வீசவேண்டுமா?

ஏதோ ஒரு காரணத்தால் உங்கள் வலைப்பதிவை திஸ்கியிலேயே (Tscii) அமைத்து விட்டீர்கள். தமிழ்மணம் உங்கள் பதிவையும் மற்றவர்களுக்கு அறிவிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள், ஆனால் தமிழ்மணமோ உங்கள் பதிவை, புரியாத ஆங்கில எழுத்துக்களாக காட்டுகிறதே என்று வருத்தப்படுகிறீர்கள். இதோ உங்களுக்கான தீர்வு உதாரணத்துக்கு இராமகி ஐயாவுடைய வளவு வலைப்பதிவை எடுத்துக்கொள்வோம். இப்பதிவிற்கான Atom ஊட்டின் முகவரி http://valavu.blogspot.com/atom.xml இந்த ஊட்டை அப்படியே தமிழ்மணம் தளத்தில் இட்டால் மேற்கண்ட பிரச்சனை வரும் என்னுடைய திஸ்கி -> யுனிகோடு மாற்றியை அலுவலக தளத்தில் நிறுவியுள்ளேன் அதைக் கீழ்கண்டவாறு பயன்படுத்தி ஊட்டை யுனிகோடு தமிழாக மாற்றிக் கொள்ளலாம் http://dann.sytes.net:8080/converter/tscii2unicode/?rss=http://valavu.blogspot.com/atom.xml கிடைக்கும் புதிய முகவரியோடு தமிழ் மணம் தளத்தில் பதிவு செய்துகொண்டால் உங்கள் வலைப்பதிவும் தமிழ் மணம் வீசத்தொடங்கும் உங்கள் வலைப்பதிவு UTF-8 Encodingஐ உபயோகிக்காவிட்டால் கூட "&utf=false" சேர்த்துக்கொள்ளுங்கள் இப்படி http://dann.

எண்ணும் எழுத்தும்

இரண்டுமே கண்ணெனத் தகும்தான் ஆனால் சில சமயம் எழுத்துக்களுக்கு பதில் எண்களாக மடலில் வந்தால் என்ன செய்வது? கீழ்க்கண்ட உதாரணத்தைப் பாருங்கள் &#2963;&#2992;&#3007;&#2992;&#3009; &#2958;&#2979;&#3021;&#2979;&#2969;&#3021;&#2965;&#2995;&#3021; இப்படி HTML encode செய்யப்பட்டு எண்களாக காட்சியளிக்கும் எழுத்துக்களை எப்படி நமக்கு புரியக்கூடிய எழுத்துக்களாக மாற்றுவது? சுலபமான வழி இருக்கிறது. HTML encodingகுக்கு HTML தான் தீர்வு முதலில் notepadஐ திறந்து <pre> என்று உள்ளிடவும் பின்னர் மடலிலுள்ள எண்களை ஒத்தி ஒட்டவும் பின்னர் </pre> என்று முடித்து HTML கோப்பாக சேமிக்கவும் (அதாவது .txtக்கு பதிலாக .htm அல்லது .html என்று கோப்பின் பெயர் முடியும் வண்ணம் சேமிக்கவும்) எடுத்துக்காட்டு <pre> &#2963;&#2992;&#3007;&#2992;&#3009; &#2958;&#2979;&#3021;&#2979;&#2969;&#3021;&#2965;&#2995;&#3021; </pre> பின்னர் இரட்டைச் சொடுக்கலில் கோப்பை உங்களின் இணைய உலாவியில் திறக்கவும். இப்போ

அ.பு.பயிற்சி-4: பேரழிவிற்குப் பின்...

அழிந்துவிட்ட உலகில் எஞ்சிவிட்ட என்னைப் போன்றவர்களுக்கு உயிரைப்பாதுகாப்பது தவிர வேறு எந்தப்பணியும் இருக்கவில்லை. ஆனால் அதைவிடச் சிரமமான பணி வேறெதுவும் இருக்கமுடியாது. நாட்களை என் கைகளில் கிழித்துக்கொண்ட கோடுகளைக் கொண்டுதான் அளக்கிறேன். கதிரியக்கத்தால் கருகி நிற்கும் தாவர வகைகளைத் தவிர வேறு ஒரு உயிரினத்தைக் கண்ணால் கண்டு இன்றோடு இருபத்தோரு நாட்களாகின்றன. நெடுந்தொலைவு நடந்து, அலைந்து திரிந்துதான் கதிரியக்கத்தால் ஒளிவீசாத சில பச்சை மரங்களைக் கண்டுபிடிக்க முடிகிறது. மிகுந்த சிரமத்துடன் அவற்றின் தண்டின் நடுப்பகுதியை மட்டுமே என் உணவாக்கிக்கொள்கிறேன், ஆனாலும் கதிரியக்கத்தின் பாதிப்புகள் என்னுள் ஆரம்பமாகிவிட்டதை உணரமுடிந்தது. நீர் நிலைகளும் பாழடைந்திருந்தன. அனேகமாக நீர் வழியாகத்தான் என் உடல் பாதிப்படையத் தொடங்கியிருக்கவேண்டும். காற்றும் தன் பணியை செவ்வனே செய்துவருகிறது. மொட்டையடிக்கப்பட்ட வனாந்திரங்களின் வழியே என் தேடல் தொடர்கிறது. தூரத்தில் எங்கேனும் புகை கசிவதைப்பார்த்தால் உடனே ஏதேனும் ஆழ்நிலக்குடியிருப்போ பதுங்குகுழிகளோ கண்ணில் படுமா என்று அருகில் சென்று பார்க்கிறேன் அங்கே பதுக்கப்பட்டிர

அ.பு.பயிற்சி-3: மரபணு

அந்த ஆய்வுக்கூடத்தின் கூண்டுக்குள்ளே மலங்க மலங்க விழித்துகொண்டிருந்தது நான்கே மாதமான அந்தக் குழந்தை. கூண்டுக்கு வெளியே நின்றவர்கள் அதைச் சுட்டி எதேனும் பேசியபோதெல்லாம் கெக்கெ பிக்கே என்று சிரித்து மயக்க முயன்றது. அவர்கள் அதையெல்லாம் கண்டுகொள்ளும் நிலையில் இல்லை. மிகத்தீவிரமான ஆலோசனையில் இருந்தார்கள். தலைமை விஞ்ஞானி டேவிட்சன் எரிச்சல் நிறைந்த குரலில் முழங்கினார். "மனித குலத்துக்கு எவ்வளவு முக்கியமான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கிறோம், நமக்கு ஆதரவும் நிதி உதவியும் செய்யாவிட்டால் போகட்டும், இப்படி படிப்படியாக தடைகளை கொண்டு வராமல் இருந்தாலே போதுமே! ஊர்வனவற்றிக்கு இருக்கும் விஷேச குணத்தை பாருங்கள்! நாம் சாமானியமாக கருதும் பல்லி இழந்துவிட்ட வாலை மீண்டும் புதுப்பித்துக் கொள்கிறது, இப்படி அழிந்துபோன உறுப்பை மீண்டும் வளர்த்துக்கொள்ள அவற்றின் மரபணு அமைப்பே காரணம். இதே மாதிரியான மரபணு மாற்றத்தை மனிதனுக்கும் ஏற்படுத்தும் இந்த ஆராய்ச்சி மட்டும் வெற்றி பெற்றால் விபத்தில் கை, கால்களை இழப்போர் கவலை இன்றி ஓய்வெடுக்கலாம், கொஞ்ச காலத்தில் மீண்டும் கைகால் முளைத்துவிடும். இப்படியெல்லாம் எடுத்துச்சொல்

அ.பு.பயிற்சி-2: நுண்ணுணர்வு

என் பெயர் அனந்த ராமன், ராமன் பெயரில் மட்டுமே. குஷாலாக என் பக்கத்தில் அமர்ந்திருக்கும் இந்த குட்டி எனக்கு ரயில் பயணத்தில் வழித்துணை மட்டுமே. மதராஸிலிருந்து டெல்லிக்கு போக நாற்பத்தைந்து நிமிடம் ஆகிறதே, அவ்வளவு நேரம் சும்மா இருக்க முடியுமோ! இறுக்கமான அணைப்பு, அழுத்தமான முத்தம், சில தடவல்கள் அவ்வளவுதான். ஊர் வந்துவிட்டால் நான் வேறு அவள் வேறு. இப்போதெல்லாம் பரவாயில்லை, இந்த அதிவேக ரயில் சேவை வருவதற்கு முன்பெல்லாம் டெல்லி போக இரண்டரை மணி நேரம் ஆகும், அவசரம் என்றால் விமானமோ ஹெலிபேடோ பிடித்து போக வேண்டியதுதான். எனக்கு அந்தப் பயணமே பிடிப்பதில்லை. மின் காந்தங்களின் உதவியால் காற்றில் மிதப்பது போல பறக்கும் இந்த நவீன ரயிலை தான் தான் புழக்கத்துக்கு கொண்டு வந்தது என்று சொல்லியே ரயில்வே மந்திரி இரண்டாம் முறையாக பதவியை தக்கவைத்துக் கொண்டிருக்கிறார். உண்மையில் இந்த சாதனையில் எனக்கும் பங்குண்டு. ஆளில்லாமல் இயங்கும் இந்த ரயில்வண்டியினை இயக்கும் ஆணைத்தொடர்களில் சிலவற்றை நானும் எழுதியிருக்கிறேன். தொடர்ச்சியாக யோசிக்கவிடாமல் தொடைமீது கையை பட்டுப்பட்டென்று போடுகிறாள், எனக்கு ஜிவ்வென்று ஆகிவிடுகிறது. இ

அ.பு.பயிற்சி-1: அதிர்வுகள்

இந்த உலகம் அழகானது, அதே நேரத்தில் அசிங்கமானதும் கூட என்கிறார்கள். நான் இனிமேல்தான் பார்க்கவேண்டும், இன்னும் சற்று நேரத்தில் கட்டு அவிழ்க்கப் போகிறார்கள். இதோ டாக்டர் கூட வந்துவிட்டார். "மாலினி, சற்று நேரத்தில் உன் கண் கட்டை அவிழ்க்கப் போகிறேன். உன் விழிகளை மெல்லத்திறந்து ஒளியை உள்ளே கசியவிடு. சற்று உறுத்தலாக இருக்கும், பிறகு சரியாகிவிடும். அதிக உறுத்தல் இருந்தால் சொல்" பாட்டி பக்கத்தில் இருக்கிறார், எதிர்வீட்டுப் பெண்ணும் வந்திருப்பதை ஒலியால் உணர்கிறேன். கட்டு நீங்கியதும் என் விழித்திரையை மெல்ல விலக்கினேன். இத்தனைநாள் நான் பார்த்த இருட்டை புரட்டிப்போட்டாற்போல ஒளி, என் கண்ணே பொசுங்கிவிடும்போல, சூரீர் என்று ஒரு வலி. தாங்கமுடியாமல் போகவே விழியை மூடிக்கொண்டேன். "எல்லாருக்கும் முதல் முறையே வெற்றி கிடைத்துவிடுவதில்லை, இருபது வருடமாக இருட்டையே உணர்ந்திருந்த மூளை இந்த தகவல்களை வாங்கி உணர சற்று காலம் தேவைப்படுகிறது, சில மருந்துகள் தருகிறேன் மீண்டும் நாளை முயற்சிப்போம்" டாக்டர் அகன்று விட்டார், நடையொலி மெல்லத்தேய்ந்து அடங்கிவிட்டது. நான் நர்சின் உதவியுடன் படுக்கை

அறிவியற் புனைகதைப் பயிற்சி

வரப்போகும் போட்டியில் கலக்கப்போகும் அனைவருக்கும் என் வரவேற்பும் வாழ்த்துக்களும். அறிவியற் புனைகதைகளைப் பொருத்தவரை முழுக்கதையும் மனதுக்குள் உருவாகியபின் நிறைவைத்தரும் கதைகளை மட்டுமே எழுதுவது என்று ஒரு கொள்கை வைத்திருந்தேன். அதன்படித்தான் எழுதியும் வந்தேன். ஒரு கதை தன்னைத்தானே எழுதிக்கொண்டு போகவேண்டும் என்று அனுபவஸ்தர்கள் சொல்லும்போது என்னால் வியப்பில் ஆழ மட்டுமே முடிந்தது. முடிவை யோசிக்காமல் துவக்கப்படும் கதைகள் சுவாரஸ்யம் அளிக்குமா? நிறைவான உணர்வு தருமா? என்கிற சந்தேகம் தொடர்ந்தது. சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம என்பார்கள். நான் அறிவியல் புனைகதை எழுத பயிற்சியாக சில ஆரம்பங்களை மட்டும் எழுதிப் பார்த்தேன். அவற்றை எழுதத் துவங்கும்போது முடிவைப் பற்றி துளியும் சிந்திக்காமல் எழுதினேன். பின்னர் படித்தபோது சுவாரஸ்யமாய் அவற்றை தொடர பல யோசனைகள் கிடைத்தன. மரத்தடியில் அவைகளை இட்டு மற்றவர்களை தொடரச்சொன்னேன், சுவாரஸ்யமான பல இழைகள் உருவாயின. அதை இங்கேயும் தொடர விருப்பம். நான் சில ஆரம்பங்ளை இடுகிறேன் அவற்றை நீங்கள் (ஆம்! நீங்களேதான்) தொடருங்கள். நான் உணர்ந்த சில உண்மைகளை நீங்களும்

அறிவியற் புனைகதைகள்

எல்லா கண்டுபிடிப்புக்களும் கற்பனையாலும், இயற்கையைப் பற்றிய புரிதலாலுமே நிகழ்கின்றன. அறிவியல் புனைகதைகள் கண்டுபிடிப்புக்கு வெகு அருகாமையில் இருப்பதாக உணர்கிறேன். இரண்டுமே கற்பனையில்தான் துவங்குகின்றன. இப்போது அறிவியற் புனைகதைகளுக்கு சற்று வரவேற்பான சூழ்நிலை நிலவுகிறது. திண்ணையும் மரத்தடியும் இணைந்து நடத்தும் அறிவியல் புனைகதைப் போட்டி ஒரு புதிய அத்தியாயத்தை துவக்கும் என்று நம்பலாம். எனக்கு புனைகதைகள் படிக்கவும், எழுதவும் மிகவும் பிடிக்கும். வலைப்பூவில் பெயரிலி சொன்னது போல என்னுடைய முதல் அறிவியற் புனைகதையின் இரண்டாம் பதிப்பை இன்று வெளியிடுவதில் பெரிதும் மகிழ்கிறேன். என்னுடைய பாதுகாவல் சிறுகதையின் இரண்டாம் பதிப்பை இங்கே படிக்கலாம்.

கனவுலகம்-7

இதுவரை அவன் கணினி வரைகலை எப்படி இருக்கும்/இயங்கும் என்று யூகித்திருந்தானோ அப்படியே இருந்தது. ஆச்சயம் தாளவில்லை அவனுக்கு, தன்னம்பிக்கை நிறைய வளர்ந்த நாள் அது. அப்போது கணினிவரைகலைத்தொழில் ஒரு சிலரின் பிடியிலிருந்தது அவர்கள் யாருக்கும் கற்றுத்தருவதை, போட்டியை உருவாக்குவதாக நினைக்கிறார்கள் என்று உணர்ந்துகொண்டான். பின்னர் பயிலகத்தில் விரிவுரையாளர்களுக்கு நடந்த ஆட்டோ கேட் (Auto CAD) பயிற்சிப்பட்டறையில் பார்வையாளனாக அனுமதி பெற்று கலந்துகொண்டான். நுணுக்கங்கள் விளங்கின, கலை கைவந்தது. பெயிண்ட் நிறுவனத்தில் பணியைத்தொடர்ந்துகொண்டிருந்தான், ஆனால் அதில் அவனுக்கு ஆத்ம திருப்தி கிடைக்கவில்லை. கணினி வரைகலையை (Computer Graphics) பகுதி நேரத்தொழிலாக கைக்கொள்ள முனைந்தான். அப்போது மிகுந்த வாக்குசாதுரியம் உள்ள ஒருவனை எதேச்சையாக சந்தித்தான், இருவரும் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் ஈர்க்கவே, சேர்ந்து தொழில் தொடங்க முடிவு செய்தனர். அவனுடைய தந்தையும் அவன் வேலையை விட அனுமதிதார். வெளிவேலைகளையும் நிர்வாகத்தையும் அவனுடைய பங்காளி செய்வதாகவும், கணினிவரைகலைப்பணிகளையும், வகுப்புக்களையும் அவன் செய்வதாகவும் முடிவா

கனவுலகம்-6

தன் சிந்தனைக்கும் உண்மைக்கும் இடையே இருந்த இடைவெளியை உணரத்துவங்கினான் அவன். புதிதாக சேர்ந்திருந்த வேதியல் தொழிற்சாலையில் வாழ்வியல் பாடம் படிக்கத்துவங்கினான், சுகாதாரமற்ற வேலையிடமும், சுயநலம்பிடித்த புறம்பேசும் மனிதர்கள் நிறைந்த அந்தச்சூழலும் அவனுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. வேலையில் ஆர்வமும் அவனுக்கு இல்லை அதனால் நல்ல பேரும் அவனுக்கு கிடைக்கவில்லை. ஆயினும் தோல்வியடைந்தவனாக தந்தையின் முன் நிற்க அவனுக்கு விருப்பமில்லாததால் எப்படியோ தாக்குப்பிடித்தான். நாளுக்குநாள் அவனுடைய பொறுமை நலிந்துகொண்டே வந்தது. கிட்டத்தட்ட பொறுமையை முற்றாக இழந்துவிட்ட ஒரு நாள் அவனுக்கு பெயிண்ட் தயாரிக்கும் ஒரு நிறுவனத்திடமிருந்து நேர்காணலுக்கான அழைப்பு வந்தது. சிறப்பாக அவன் கேள்விகளுக்கு பதில் சொன்னதால் வேலையும் கிடைத்தது. அங்கே மனிதர்களைப்பொருத்தவரை ஆரோக்கியமான சூழல் நிலவியது. மாதவனிடம் அவன் பேசிக்கொண்டிருந்தபோது அதைக்கேட்டுக்கொண்டிருந்தவர் வேறுயாருமல்ல கணித விரிவுரையாளராக பணியாற்றிய அவனுடைய தந்தைதான். அவர் கேட்டதோடு நில்லாமல் தன் சகாக்களிடம் வெறும் கணினியை மட்டும் வைத்துக்கொண்டு கற்றுக்கொள்ள முடியுமா என்

கனவுலகம்-5

அந்த ஆச்சரியம் ஏற்பட அவனுக்கு நண்பனும் எதிரியுமாக(?!) ஏற்கனவே அறிமுகமாயிருந்த மாதவனும் ஒரு காரணம். அவர்கள் எப்போதும் ஒன்றாகவே இருந்தார்கள், எதிரெதிராக விவாதித்தபடி. இவன் சொல்லும் எந்த கருத்துக்கும் எதிர் கருத்தோடு தயாராக இருப்பான் மாதவன். மணிக்கணக்காக நீண்டு செல்லும் இத்தகைய விவாதங்கள் இவன் தன் கருத்துக்களை வலுப்படுத்திக்கொள்ள உதவின. பாடதிட்டத்தில் இல்லாதபோதும் தன்னுடைய சொந்த முயற்சியாலும் ஆர்வத்தாலும் கணினிகளை தருவித்திருந்த பயிலக முதல்வர் திரு.இராமன், அவற்றை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்த விழைந்தார். ஐந்து நபர் குழுக்களாக பிரிக்கப்பட்டிருந்த வகுப்பினரிடையே இரு குழுக்களுக்கு மட்டுமே கணினி பயில தகுதி அடிப்படையில் வாய்ப்பு. மாதவன் படிப்பாளியாக இருந்ததால் அவனோடு சேர்த்து இணைபிரியாத இவனுக்கும் வாய்ப்பு கிடைத்தது. மின்னியியல் போலின்றி கணினியில் கைமேல் பலன் உடனடியாக, அவன் மின்னியியலை விட்டுவிட்டு மின்னியியலின் வளர்ச்சியால் விளைந்த கணினியை பற்றிக்கொண்டான். மாதவன் வெகுதொலைவிலிருந்து பேருந்தில் வருவதால் வகுப்பை தவறவிடாமல் இருக்க சீக்கிரமே வந்துவிடுவான். முதல்வரும் சீக்கிரமே வந்துவிடு

கனவுலகம்-4

வால்வுகள் முற்றாக வழக்கொழிந்துவிடவில்லை. இன்றைய தொலைக்காட்சியில் பிம்பத்தை காண்பிப்பதும் picture tube ஒரு வால்வு தான். சாதிக்கும் வெறி மட்டும் போதுமா? அதற்குரிய பொறுமை வேண்டாமா. அவனிடம் இல்லாதது அதுதான், செய்யத்துவங்கிய செயலின் பலன் உடனடியாக கிட்டவேண்டும் என்று விரும்பினான். மின்னியியலில்(electronics) அது செல்லுபடியாகவில்லை. சிறு வானோலி ஒன்று அமைக்கும் முயற்சியில் அவனுக்கு தோல்விதான். அந்த தோல்வி அவனை மீண்டும் மீண்டும் முயற்சிக்க தூண்டி தன்னுடைய துறையாக அவனை மின்னியியலை தேர்ந்தெடுக்க வைத்தது இந்த வாய்ப்பை அவன் பத்தாவது படிக்கும்போது அவனுடைய தந்தை சரியாக பயன்படுத்திக்கொண்டார். "நீ மட்டும் இறுதித்தேர்வில் 400க்கு மேல் மதிப்பெண் (மொத்த மதிப்பெண் 500) எடுத்தால் உன்னை மின்னியியல் படிக்கவைக்கிறேன்", என்று உறுதியளித்தார். அதே நேரம் தலைமையாசிரியரும், "நீ 400க்கு மேலே மார்க் எடுப்பியா? உன்னாலே முடியாதுடா! சான்சே இல்லை", என்று அடிக்கடி உசுப்பிவிட்டார். அவனுடைய கவனம் முழுவதும் படிப்பின் பக்கம் திரும்பியது. நன்றாக தேர்வு எழுதி முடித்தபின் விடுமுறையில் ரேடியோ டிர

கனவுலகம்-3

"வால்வுகள்" எனும் அப்புத்தகம் மின்னியலிலிருந்து மின்னணுவியல்(electronics) கிளர்த்தெழுந்த வரலாறை விவரித்தது. மின்விளக்கு கண்டுபிடிக்கப்பட்டபின் தொடர்ந்த ஆராய்ச்சி வால்வுகளின் கண்டுப்பிடிப்புக்கு அடிகோலியது. ஒரு சிறு வேறுபாடிருந்தால் அதை பெரிதுபடுத்துவதென்பது மனித குலத்துக்கு புதிதன்று. அதனால் தீமை மட்டுமே விளையும் என கண்டிருந்தார்கள் வால்வுகளை பயன்படுத்தி சிறு மின் அதிர்வுகளை பெரிதுபடுத்த முடிந்தது. அதைக்கொண்டு சிறிய ஓசைகளை பெரிதுபடுத்தும் ஒலிப்பெருக்கிகள், வானோலி போன்றவை ஏற்படுத்தப்பட்டன. பரிட்சை நேரத்தில் பக்கத்து வீட்டில் அலறும் ஒலிப்பெருக்கிகளால் பாதிக்கப்பட்டோர் அவைகளால் விளைவது தீமையே என்று அப்போதைக்கு சொன்னாலும் நன்மைகளை உணராமல் இல்லை வால்வுகளின் நிகழ்ந்த ஒவ்வொரு கண்டுபிடிப்பும் நேரில் பார்ப்பது போல வெகு அழகாக விவரிக்கப்பட்டிருந்தது. அவன் ஆவலோடு மொத்த புத்தகத்தையும் சீக்கிரமே படித்து முடித்துவிட்டான். "இப்படி ஒவ்வொரு கண்டுபிடிப்பும் நிகழ்ந்தவிதம் உள்பட விவரிக்கப்படும்போது எவ்வளவு ஆர்வத்தை தூண்டுவதாக அமைகிறது. நம் அறிவியல் பாடங்கள் ஏன் இத்தனை ஈர்ப்

கனவுலகம்-2

எந்தப்பள்ளியில் அவன் படிப்பு கெடும் என்று சொல்லப்பட்டதோ அந்த அரசுப்பள்ளியில்தான் அவனுடைய படிப்பு பலப்பட்டது. அவன் இதுவரை படித்த பள்ளியின் பெருமைகளும், அவனின் தோற்றமும், சிறந்த படிப்பாளி எனும் பிம்பத்தை சகமாணவர்களிடையே ஏற்படுத்தியது. முதல் இரு நிலைகளில் உள்ள மாணவர்கள் தங்கள் இடத்துக்கு ஏதும் ஊறு நேர்ந்துவிடுமோ என்று அனாவசியமாக பயந்தனர். அங்கே அவனை கண்டிக்கவும் தண்டிக்கவும் ஆள் இல்லை. மாறாக அவன் நன்றாக படிப்பான் என நம்பினர், அந்த நம்பிக்கையை வார்த்தைகளிலும் வெளிப்படுத்தினர். இறுக்கமற்ற இந்த புதிய சூழலும் தன் மீது வைக்கப்பட்ட நம்பிக்கையும் அவனை மாற்றின. நம்பிக்கையை மீண்டும் ஒரு முறை உடைக்க அவன் தயாரில்லை அந்த வலியை உணர்ந்திருந்ததால் தன்னை தகுதியானவனாய் மாற்றிக்கொள்ள முற்பட்டான். அறிவியல் ஆசிரியைக்கு அவனை மிகவும் பிடித்துவிட்டது, அதனால் அறிவியல் பாடத்தை முதல் நாளே படித்துவிட்டு கேள்விகளுக்கு தயாராக வகுப்புக்கு செல்வான். ராக்கெட் பற்றிய பாடம் என்றால் ஊதுபத்தி அட்டையில் ஒரு ராக்கெட் மாதிரி செய்து வகுப்புக்கு எடுத்துச்செல்வான். இப்படியே அறிவியல் மெல்ல புரிபடவும் ஆர்வமூட்டவும் ஆரம்பித

கனவுலகம்-1

கோபம் கோபமாக வந்தது அந்த சிறுவனுக்கு "தூர்தர்ஷனுக்கு ஒரு சோப்பு பிடிச்சிருந்தா அதை மட்டும் வாங்கிக்க சொல்லலாமே! அதை விட்டுட்டு ஆயிரம் சோப்பைக்காட்டி இது இப்டி சிறந்தது, அது அப்டி சிறந்ததுன்னு மாத்தி மாத்தி சொல்லி ஏன் குழப்பறாங்க?", விளம்பரத்தின் விளக்கம் புரியாதவன் தந்தையிடம் கேட்டான். தந்தை மென்மையாக சிரித்தார். காலப்போக்கில் அவனே புரிந்துகொள்வான் என நினைத்தவர், பதிலேதும் கூற வில்லை. ஆனாலும் அவனுக்கு அவரே வழிகாட்டி, jungle book படத்துக்கு அழைத்துச்சொன்ற போது, கார்ட்டூன் படங்கள் தாள்களின் வினாடிக்கு 24 படங்களாக அசைவு மாற்றங்களை வரைந்து தயாரிக்கப்படுகிறது என்று விளக்கினார். "அம்மாடி! இந்தனை படம் வரைந்தால், வரைபவருக்கு கை வலிக்காதா", என்று அப்போது அவன் நினைத்துக்கொண்டான். ஆர்வமுடன் அவனை star wars படங்களுக்கு அழைத்துச்சென்றார். கதையேதும் புரியாதபோதும், கண்கள் மின்ன, லேசர் கத்திகளின் வீச்சையும் ரோபாட்களையும், வினோத ஜந்துக்களையும் வியப்போடு பார்த்தான். அவை அவன் கற்பனையிலும் தொடர்ந்தன. ஐந்தாம் வகுப்பு பள்ளி அறை, பக்கத்தில் அமர்ந்திருந்த வகுப்புதோழி பெருமை ப

பிரசவத்தில் கணவனின் பங்கு

மனைவியின் பிரசவத்தில் கணவன் உடனிருப்பது அவர்களின் உறவுப்பிணைப்புக்கு மேலும் வலுச்சேர்க்கும் என்று நான் நினைக்கிறேன். ஒரு உண்மைக்கதை: சிங்கையிலே வெளிநாட்டவர்களுக்கு பிரசவ செலவு மிக அதிகம். (அதிகமில்லை ஜெண்டில்மன் உன் சொத்துமொத்தமும் எழுதிவைத்துவிடு அது போதும்!) இதனால் ஏழாம் மாதமே மனைவியை தாயகத்துக்கு அனுப்பவேண்டிய கட்டாயம் அவனுக்கு ஏற்பட்டது, ஏனென்றால் விமானத்தில் அதன்பின் அனுமதிக்கமாட்டார்கள். ஓர் ஒற்றை அறை குடியிருப்பில்... "என்னங்க, உங்களை விட்டுபோக மனசே இல்லீங்க. கட்டாயம் பிரசவநேரத்தில நீங்க கூட இருக்கணும், இங்க வேலை அதனால வரமுடியலைன்னு சாக்குபோக்கு சொல்லக்கூடாது!" "எனக்கு பழசெல்லாம் ஞாபகம் வருது, ஹும்! மறுபடி அமைதி, தனிமை, விரக்தி. ஆனா குழந்தைபிறந்த பிறகு உன் முகத்தில் வரப்போகிற மகிழ்ச்சியை பாக்கிறதுக்காக இதெயெல்லாம் பொறுத்துக்கத்தான் வேணும். எல்லாத்துக்கும் கம்யூட்டர்ன்னா சமயத்தில எனக்கே வெறுப்பாத்தான் இருக்கு, இனி உன்னையும் கொஞ்சகாலம் அதுவழியாத்தான் பாக்கணும். கவலைப்படாதே பிரசவ சமயம் கட்டாயம் நான் கூட இருப்பேன். டாக்டரை பாத்து எப்ப பிரசவமாகும்னு

உஷார்

பயந்தபடியே நடந்துவிடுமோ என்று அஞ்சுகிறேன். இப்படி நடக்கலாம் என்று முன்னமே யூகித்ததுதான். நடந்தது என்ன? - நேரடி ரிபோர்ட் தொலைக்காட்சி தொடர் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் ரகசிய சந்திப்பில் காரசாரமான வாக்குவாதம். விஷயம் இதுதான், படாதபாடுபட்டு சாட்டிலைட் சானல்களில் ஸ்லாட் வாங்கி கைக்காசு போட்டு நாம் தொடர் எடுத்தால் கதாசிரியர்கள்/டைரக்டர்கள் நம்மிடமே பிலிம் காட்டுகிறார்கள் என்று தயாரிப்பாளர்கள் குமுறல். பனிப்போரைவிட்டு பானிப்பட் போருக்கே ஆயுத்தமாக திடீர் முடிவு. தயாரிப்பாளர் கூட்டத்துக்கு பதிலடி - டைரக்டர்களின் கிண்டல் தொடர்களை இயக்குவது என்பது சிறுபிள்ளை விளையாட்டல்ல. பஞ்சத்தில் அடிபட்டவர்கள் மட்டுமே இங்கே தயாரிப்பாளர்களாக உலவுகிறார்கள். அவர்களின் குறைந்த பட்ச பட்செட்டில் நாலே நாலு நடிகைகளையும் அரை லிட்டர் கிளிசரினையும் வைத்து தமிழ் நாட்டையே அழவைத்து மெகா சீரியலை சக்ஸஸ் பண்ணக்கூடிய எங்களையா அவர்கள் பகைத்துக்கொள்ள துணிந்துவிட்டார்கள். இது விரல் சூப்பும் குழந்தை, தன் தாயிடமே கா விடுவதுபோல உள்ளது. நாங்கள் இல்லாவிட்டால் அவர்கள் இல்லவே இல்லை என்று டைரக்டர்கள் சங்க கூட்டத்தில்

வாலிப வயதும் பாலியலும்-2

நான் நினைக்கிறேன், மரத்தின் வேர் மண்ணில் இருப்பதுபோல் எல்லா பிரச்சனைகளுக்கும் ஆணிவேர் மனதினில் புதைந்திருக்கிறது. பாலியல் பிரச்சனைகளிலும் முதலில் அடிபடுவதும், அதிகம் காயப்படுவதும், ஆறாத்தழும்புகள் அடைவதும் மனதுதான், எனவே உளவியல் ரீதியாக இப்பிரச்சனையை அணுகுவது பலன் தரும். ஆரம்பம் எங்கே இருக்கிறது? பாகுபாடு பல பிரச்சனைகளுக்கு ஆரம்பம், இதற்கும்தான். நீ ஆண், நீ பெண், நீ இன்னது செய்யலாம், இன்னது செய்யக்கூடாது என்று வரையறுக்கும்போது நாம் சில தவறுகள் செய்துவிடுகிறோம். சில உதாரணங்கள் "அடேய் ராமு! விளையாட்டுல அடிபட்றது சகஜம், அதுக்காக ஏன் பொட்டச்சி மாதிரி அழறே!" "பொண் குழந்தையா லட்சணமா கூடத்தில மாலுவோட விளையாடவேண்டியதுதானே? அந்த தடியன்களோட என்னடி பேச்சு?" இந்தியாவின் சமூக அமைப்பில், பொதுவாக சிறுவர்களும் சிறுமிகளும் கலந்துபழக வாய்ப்புகள் குறைவு. இத்தகைய சூழலில் சகோதரி, அம்மா தவிர பிற பெண்களுடன் பழகாத சிறுவன் இளைஞனாகி உள்ளுக்குள் மாற்றங்கள் அடையும்போது எதிர்ப்படும் பெண்களை வெறும் உடலாக மட்டுமே பார்க்க வாய்ப்புக்கள் அதிகம். பொத்தி பொத்தி வளர்க்கப்பட்ட பெண்

வாலிப வயதும் பாலியலும்-1

ஏற்கனவே பாலியல் வன்முறை பற்றி ஒரு கதை எழுதவேண்டும் என்று வெகுகாலமாக நினைத்திருந்தேன். இப்போது வரிசையாக என்னைத்தூண்டும் வண்ணம் சம்பவங்கள் நடந்துவருகின்றன. தற்காலப்பெண்பாற்கவிஞர்கள் தங்கள் பாலுறுப்புப்பற்றி எழுதுவது பற்றிய இழையில் மதுரபாரதி, யோனி என்கிற வார்த்தையை பயன்படுத்தாமல் எழுத இயலாத இந்த ஆங்கிலக் கதை யைப்பற்றி குறிப்பிட்டார், பின்னர் உள்ளூர் தொலைக்காட்சியில் "பதின்ம வயதினரின் பாலியல் பிரச்சனைகளை பெற்றோர்கள் சமாளிக்கும் விதம்" எனும் பயிற்சிப்பட்டறை குறித்த விளம்பரம் பார்த்தேன். இரண்டு நாட்களில் வெவ்வேறு சமூகக்கூடங்களில் நடைபெற்ற அந்நிகழ்சியின் முதல் நாள் ஏற்கனவே கடந்துவிட்டது. இரண்டாம் நாளான ஞாயிறு அன்று நான் நேரில் கண்டதும் கேட்டதும் உணர்ந்ததும் கீழே தொகுத்திருக்கிறேன். முதலில் உள்ளூர் தொலைக்காட்சியில் வெளியான 'குரு பார்வை' எனும் தொடரிலிருந்து பட்டறைக்கு தொடர்புடைய காட்சித்தொகுப்பு திரையிடப்பட்டது. அந்ததொடரை நான் ஏற்கனவே சிலவாரங்கள் பார்த்திருக்கிறேன், ஆசிரியர் மாணவர் உறவில் எழக்கூடிய சிக்கல்களை வெகு அழகாக படம்பிடித்திருக்கிறார்கள். கட்டுப்பாடற்ற பதின்ம

சிங்கையிருந்து சென்னைக்கு-3

ஒரு பயண அனுபவம் (தொடர்கிறது) முக்கிய அறிவிப்புகள் கணீரென ஒலிக்கவேண்டாமா? தேய்ந்துபோன கிராமஃபோன் தட்டின் முனகல் போல ஒலித்த விமான ஓட்டியின் குரல், "விமானத்தில் * ஹைடிராலிக் சிஸ்டம் * பழுதுபட்டிருப்பதால் நாம் மீண்டும் பேங்காக்குக்கு திரும்புகின்றோம்", என்றது. விமான சிப்பந்திகள் இங்குமங்குமாக நடக்கத்துவங்கினர். விமானத்தில் லேசான பதட்டம் நிலவியது பிரச்சனையின் முழு ஆழம் தெரியாத போதும் நடுக்கடலில் விழவேண்டியதிருக்குமோ என்கிற கவலை எல்லாம் எனக்கு ஏனோ வரவில்லை. என் கவலை வேறு, ஒருமணி நேரத்துக்குமேலே பயணம் செய்தபின் மீண்டும் பாங்காக் திரும்புகிறோம் எனவே பாங்காக் செல்லவே ஒரு மணி நேரமாகும் பிறகு மீண்டும் கிளம்பி சென்னை வரவேண்டும். குறைந்தது மூன்று மணிநேர தாமதம். அங்கே சென்னையில் என்னை வரவேற்க இம்முறை அலுவல் காரணமாக தந்தை வரப்போவதில்லை, எனது தாயோ அல்லது என் மாமியாரோ வரக்கூடும். அவர்கள் வெறுமே காத்துக்கொண்டிருப்பார்கள், விசாரித்து அறியமாட்டார்கள். இதனால் அவர்களுக்கும் நிறைமாத கர்பிணியான என் மனைவிக்கும் ஏற்படக்கூடிய அநாவசிய பதட்டம் குறித்துத்தான் நான் கவலைப்பட்டேன். பின்சீட்டில் அம

சிங்கையிருந்து சென்னைக்கு-2

ஒரு பயண அனுபவம் (தொடர்கிறது) எனக்கு அருகில் அமர்ந்திருந்தவர்களை கவனித்தேன், ஜன்னலை ஒட்டி நான், எனது பக்கத்து இருக்கையில் ஒரு முஸ்லிம் பெண்மணி, மத்திய இருக்கையில் ஒரு சீக்கியர் எல்லாரும் அவர் அவர் வேலையை மட்டும் பார்த்தபடி. மனிதர்கள் ஒவ்வொருவரும் தங்களை தனித்தீவாக உணர்ந்து சுற்றியிருக்கும் மற்றவர்களோடு ஒட்டாமல் இருக்கும் சூழலைப்பற்றி நினைத்துக்கொண்டேன். இயந்திர வாழ்க்கையில் பெரும்பாலோர் அப்படித்தான் ஆகிவிடுகிறார்கள். உதட்டளவில் சிரித்து உள்ளத்துக்கு திரையிட்டு பட்டும்படாமல் பழகுவர். இந்தத்திரை எப்போது விலகும் என்று நினைத்துக்கொண்டிருந்தபோது, இப்படித்தான் என்று காண்பிப்பது போல முன்வரிசையில் ஒரு வாண்டு (வயது 2 அல்லது 3 இருக்கலாம்) இருக்கையில் எழுந்து நின்றபடி எங்கள் பக்கம் திரும்பி தன் பிரசங்கத்தை ஆரம்பித்தது, தனக்கு மட்டுமே புரியக்கூடிய மொழியில் உலக வாஞ்சை அத்தனையும் குழைத்து, தனக்கென அணிதிரண்ட கூட்டத்தைக்கண்ட தானைத்தலைவனென முழங்கிக்கொண்டிருந்தது. மிகவும் தீவிரமான பாவனைகளுடன் முக்கிய உரையாற்றிக்கொண்டிருக்கும் அந்த சிறுவனின் பக்கம் அனைவரின் கவனமும் திரும்பியது. உள்ளத்திலிருந்து வ

சிங்கையிருந்து சென்னைக்கு-1

ஒரு பயண அனுபவம் ஒரு மாதம் சிங்கையில் இருக்கமாட்டேன் என்பதால் முடிக்கவேண்டிய அலுவலகப்பணிகள் நெருக்கின. மறுநாள் காலை நான்கு மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பவேண்டும் நள்ளிரவு 1 மணிக்குத்தான் வேலைகளை முடிக்க முடிந்தது. வழக்கமாக பெட்டியில் மடிப்பு கலையாமல் அடுக்கி வைத்துக்கொள்ளும் நான் களைப்புதாளாமல் குப்பைக்கூடையில் அள்ளிகொட்டுவதுபோல கொட்டி மூடி உறங்கச்சென்றேன். ஒரு வழியாக எழுந்து குளித்து கிளம்பி வாடகைக்காரில் அமர்ந்தாயிற்று, சிலுசிலு என வீசும் காலைத்தென்றலை அனுபவித்தபடி யோசனையில் மூழ்கினேன். காலை நேர விமானப்பயணம் எப்போதும் எனக்கு ஆர்வமூட்டும் விஷயம். பஞ்சுப்பொதிகளென தோன்றும் மேகங்களை நான் என் சிறுவயது கனவுகளில் கண்டதுண்டு, மெல்ல கதவிடுக்கு வழியே கசிந்து என் கட்டிலடியே அவை நுழையும். முதல் முறையே அவற்றை நனவில் கண்டபோது வியப்புத்தாளாமல் மனதுக்குள் கூவினேன். கனவில் கண்ட உருவம் போல அச்சு அசலாக அடர் புகையாக விமானத்தின் மேலும் கீழும் பக்கவாட்டிலும் பரவிப்படர்ந்திருந்தது. அன்று முதல் இன்று வரை மேகங்களையும் சூரியன் அவற்றினூடே விளைவிக்கும் வண்ண மாற்றங்களையும் ரசிக்கத்தவறுவதில்லை. வழக்கமாக நேரே ச