Men Are from Mars, Women Are from Venus
செவ்வாயிலிருந்து ஆண்களும் சுக்கிரனில் இருந்து பெண்களும் Summary for each chapter from Men Are from Mars, Women Are from Venus book by John Grey 1. அறிமுகம் ஆணும் பெண்ணும் ஒருவருக்கு மற்றவர் வேற்று கிரகவாசி என்று எண்ணும் அளவுக்கு உணர்வு ரீதியாக வேறுபட்டவர்கள். இந்த வேறுபாட்டை புரிந்துகொள்வதும் அதை மதித்து நடப்பதும் அவர்களது உறவை வளர்க்கும். 2. மதிப்பீடு ஆண் பெண் சரி செய்பவர்கள். குடும்ப மேம்பாட்டுத் தலைவி. ஆண் ஆண் பொதுவாக தன் வேலையை தானே பார்த்துக்கொள்ள விரும்புகிறான். அழைக்காமல் வழங்கப்படும் உதவியை, தன் செயல் திறன்மீது வைக்கப் பட்ட சவாலாக எடுத்துக்கொள்கிறான். தன் செயலும் திறனும் மதிக்கப்பட வேண்டும், பாராட்டப்பட வேண்டும் என்று விரும்புகிறான். அதனால் அது சம்பந்தப்பட்ட அலட்சியத்தையும் கேலியையும் வெறுக்கிறான். நம்பகமான பலன்களை தராததால் ஆண் உணர்வு அடிப்படையில் முடிவு எடுப்பதை தவிர்க்கிறான். பெண் பெண் ஒத்துழைப்பை விரும்புகிறாள், தனியே செயல்படுவதை முடிந்தவரை தவிர்ப்பாள். அவளுக்கு தனியே வேலை செய்வது, குழுவாக கலந்து செயல்படுவது போன்ற சிறப்புகள் அற்றது.