அ.பு.பயிற்சி-3: மரபணு
அந்த ஆய்வுக்கூடத்தின் கூண்டுக்குள்ளே மலங்க மலங்க விழித்துகொண்டிருந்தது நான்கே மாதமான அந்தக் குழந்தை. கூண்டுக்கு வெளியே நின்றவர்கள் அதைச் சுட்டி எதேனும் பேசியபோதெல்லாம் கெக்கெ பிக்கே என்று சிரித்து மயக்க முயன்றது. அவர்கள் அதையெல்லாம் கண்டுகொள்ளும் நிலையில் இல்லை. மிகத்தீவிரமான ஆலோசனையில் இருந்தார்கள். தலைமை விஞ்ஞானி டேவிட்சன் எரிச்சல் நிறைந்த குரலில் முழங்கினார்.
"மனித குலத்துக்கு எவ்வளவு முக்கியமான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கிறோம், நமக்கு ஆதரவும் நிதி உதவியும் செய்யாவிட்டால் போகட்டும், இப்படி படிப்படியாக தடைகளை கொண்டு வராமல் இருந்தாலே போதுமே! ஊர்வனவற்றிக்கு இருக்கும் விஷேச குணத்தை பாருங்கள்! நாம் சாமானியமாக கருதும் பல்லி இழந்துவிட்ட வாலை மீண்டும் புதுப்பித்துக் கொள்கிறது, இப்படி அழிந்துபோன உறுப்பை மீண்டும் வளர்த்துக்கொள்ள அவற்றின் மரபணு அமைப்பே காரணம். இதே மாதிரியான மரபணு மாற்றத்தை மனிதனுக்கும் ஏற்படுத்தும் இந்த ஆராய்ச்சி மட்டும் வெற்றி பெற்றால் விபத்தில் கை, கால்களை இழப்போர் கவலை இன்றி ஓய்வெடுக்கலாம், கொஞ்ச காலத்தில் மீண்டும் கைகால் முளைத்துவிடும். இப்படியெல்லாம் எடுத்துச்சொல்