அறிவியற் புனைகதைப் பயிற்சி
வரப்போகும் போட்டியில் கலக்கப்போகும் அனைவருக்கும் என் வரவேற்பும் வாழ்த்துக்களும். அறிவியற் புனைகதைகளைப் பொருத்தவரை முழுக்கதையும் மனதுக்குள் உருவாகியபின் நிறைவைத்தரும் கதைகளை மட்டுமே எழுதுவது என்று ஒரு கொள்கை வைத்திருந்தேன். அதன்படித்தான் எழுதியும் வந்தேன். ஒரு கதை தன்னைத்தானே எழுதிக்கொண்டு போகவேண்டும் என்று அனுபவஸ்தர்கள் சொல்லும்போது என்னால் வியப்பில் ஆழ மட்டுமே முடிந்தது. முடிவை யோசிக்காமல் துவக்கப்படும் கதைகள் சுவாரஸ்யம் அளிக்குமா? நிறைவான உணர்வு தருமா? என்கிற சந்தேகம் தொடர்ந்தது.
சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம என்பார்கள். நான் அறிவியல் புனைகதை எழுத பயிற்சியாக சில ஆரம்பங்களை மட்டும் எழுதிப் பார்த்தேன். அவற்றை எழுதத் துவங்கும்போது முடிவைப் பற்றி துளியும் சிந்திக்காமல் எழுதினேன். பின்னர் படித்தபோது சுவாரஸ்யமாய் அவற்றை தொடர பல யோசனைகள் கிடைத்தன. மரத்தடியில் அவைகளை இட்டு மற்றவர்களை தொடரச்சொன்னேன், சுவாரஸ்யமான பல இழைகள் உருவாயின. அதை இங்கேயும் தொடர விருப்பம். நான் சில ஆரம்பங்ளை இடுகிறேன் அவற்றை நீங்கள் (ஆம்! நீங்களேதான்) தொடருங்கள். நான் உணர்ந்த சில உண்மைகளை நீங்களும் கண்டுணர்வீர்கள்.
இந்தப்பயிற்சி எனக்கும் உங்களும் மிகுந்த பயனளிக்கும் என்று நம்புகிறேன். உங்களின் ஆர்வத்தை பின்னூட்டாக தெரியப்படுத்தினால் ஊக்கம் பெறுவேன்.
விரைவில் முதல் கதையின் ஆரம்பத்தோடு உங்களை சந்திக்கிறேன்.

கருத்துகள்
நானும் சில மாதங்களாகவே அறிவியல் புனைகதைகள் பற்றி மனதுக்குள் அசை போட்டுக் கொண்டிருக்கிறேன்.
இரு கதைகள் தயாராக இருந்தாலும் அதை எழுத்தாக்கும் அளவுக்கு தைரியம் இன்னும் வரவில்லை.
உங்கள் ஆரம்பங்கள் சில வேளைகளில் எனக்கு உதவலாம்.
நன்றி. தொடருங்கள்.
நட்புடன்
சந்திரவதனா