சுனாமி அரங்க உரையாடல்கள்-4
ஜனவரி 12, 2005 புதன் அன்று சுனாமி மீட்பு உதவி அரங்கத்தில் நடந்த உரையாடல்கள்
இர.அருள்குமரன்(11:16:51am):
சந்திப்பதில் உள்ள சிக்கல்கள்
----------------------
அரங்கு இருபத்தி நான்கு மணி நேரமும் திறந்திருக்கும்.
ஒரு நிமிட இடைவெளிக்குள் அரங்குக்குள் கிட்டத்தட்ட நான்குபேர் நுழைந்து யாருமில்லை என்று
வெளியேறிவிடுவது அடிக்கடி நடக்கிறது. பலமுறை முயன்று பார்த்தேன் யாருமே இல்லை என்று பலரும்
அலுப்படைகிறார்கள்.
சிறிது நேரம் அரங்கினுள் காத்திருங்கள் என்று சொன்னால் அதிலும் சிக்கல், கணினியில் ஒன்றுக்கும் மேற்பட்ட
சாளரங்களை திறந்துவிடுவதால் மற்ற நபர்கள் வந்து அழைப்பதே நமக்கு தெரிவதில்லை. இப்படியும் சந்திப்புகள்
நிகழாமல் போகின்றன
யார் எப்போது வருவார்கள்? யாருக்கும் தெரிவதில்லை.
சில எளிய தீர்வுகள்
---------------
ஒவ்வொருமுறை உள்ளே வந்து வெளியேறும் போதும் நீங்கள் வந்த நேரத்தை (இந்திய நேரப்படி) மறக்காமல்
குறிப்பிடுங்கள். இன்ன நேரத்தில் நீங்கள் வருகிறீர்கள் என்பதை மற்றவர்கள் உணர்ந்து அந்த நேரத்திற்கு வர
முயற்சிக்க ஏதுவாக இருக்கும்
அடுத்து நீங்கள் வர இருக்கும் நேரத்தையும்