கனவுலகம்-7
இதுவரை அவன் கணினி வரைகலை எப்படி இருக்கும்/இயங்கும் என்று யூகித்திருந்தானோ அப்படியே இருந்தது. ஆச்சயம் தாளவில்லை அவனுக்கு, தன்னம்பிக்கை நிறைய வளர்ந்த நாள் அது.
அப்போது கணினிவரைகலைத்தொழில் ஒரு சிலரின் பிடியிலிருந்தது அவர்கள் யாருக்கும் கற்றுத்தருவதை, போட்டியை உருவாக்குவதாக நினைக்கிறார்கள் என்று உணர்ந்துகொண்டான்.
பின்னர் பயிலகத்தில் விரிவுரையாளர்களுக்கு நடந்த ஆட்டோ கேட் (Auto CAD) பயிற்சிப்பட்டறையில் பார்வையாளனாக அனுமதி பெற்று கலந்துகொண்டான். நுணுக்கங்கள் விளங்கின, கலை கைவந்தது.
பெயிண்ட் நிறுவனத்தில் பணியைத்தொடர்ந்துகொண்டிருந்தான், ஆனால் அதில் அவனுக்கு ஆத்ம திருப்தி கிடைக்கவில்லை. கணினி வரைகலையை (Computer Graphics) பகுதி நேரத்தொழிலாக கைக்கொள்ள முனைந்தான்.
அப்போது மிகுந்த வாக்குசாதுரியம் உள்ள ஒருவனை எதேச்சையாக சந்தித்தான், இருவரும் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் ஈர்க்கவே, சேர்ந்து தொழில் தொடங்க முடிவு செய்தனர். அவனுடைய தந்தையும் அவன் வேலையை விட அனுமதிதார்.
வெளிவேலைகளையும் நிர்வாகத்தையும் அவனுடைய பங்காளி செய்வதாகவும், கணினிவரைகலைப்பணிகளையும், வகுப்புக்களையும் அவன் செய்வதாகவும் முடிவா