இடுகைகள்

தேர்ந்தெடுக்கப்பட்ட பதிவுகள்

டிஜிட்டல் மினிமலிசம்: ஃபோன்ல இருந்து கொஞ்சம் பிரேக் எடுத்து லைஃப்ல ஃபோகஸ் பண்ணுங்க!

படம்
இன்றைய டிஜிட்டல் யுகத்துல நம்ம எல்லாரும் ஃபோன்லயே மூழ்கி இருக்கோம். எல்லா நேரமும் நோட்டிஃபிகேஷன்ஸ், சோஷியல் மீடியா, யூடியூப்னு நம் கவனத்தை ஈர்க்க போட்டி நடக்குது. இதனால நம்ம மனநலம், வேலை செய்யற திறமை எல்லாம் பாதிக்கப்படுது. "டிஜிட்டல் மினிமலிசம்" புத்தகத்துல கால் நியூ போர்ட் (Cal Newport) ஃபோன்ல இருந்து கொஞ்சம் பிரேக் எடுத்து, நம்ம வாழ்க்கையில ஃபோகஸ் பண்ணுறதுக்கு ஒரு வழி சொல்றார். டிஜிட்டல் மினிமலிசம்னா என்ன ? டிஜிட்டல் மினிமலிசம்னா ஃபோனை முழுக்க விட்டுடறது இல்ல, அதை நல்லா யூஸ் பண்ணுறது. எந்தெந்த அப்ளிகேஷன்ஸ் நமக்கு உண்மையிலயே தேவை, அது நமக்கு மதிப்பு கொடுக்குதா, இல்ல நம் நேரத்தையும் கவனத்தையும் வீணாக்குதான்னு யோசிக்கனும். டிஜிட்டல் மினிமலிசம் எப்படி செய்றது ? ஃபோன்ல இருந்து 30 நாள் பிரேக் எடுங்க :  ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப் எல்லாம் யூஸ் பண்ணாம 30 நாள் இருங்க. அப்புறம், உங்களுக்கு உண்மையிலயே தேவைப்பட்டா மட்டும் மீண்டும் இன்ஸ்டால் பண்ணுங்க. தனியா நேரம் செலவழிங்க :  ஃபோன் பார்க்காம தனியா இருக்கறது நல்லது. இது உங்க யோசனைகளை தெளிவாக்கவும், புது விஷ

12. எங்கே செல்லும் இந்தப் பாதை

படம்
AI அணுகுமுறையும் சாத்தியங்களும் நேற்று கடந்து வந்த பாதையை நிகழ்காலம் வழி நீட்டினால் கிடைப்பதே எதிர்காலத்தின் பாதை! எனவே கடந்து வந்த பாதையை ஒரு முறை பார்த்துவிடலாம். அலன் டியூரிங், ஜான் மக்கார்தி போன்றவர்களின் மனதில் தோன்றிய ஒரு சிந்தனைதான் அனைத்திற்கும் வித்திட்டது. 1950களில், "இயந்திரங்களால் சிந்திக்க முடியுமா?" என்று அவர்கள் கேட்க, செயற்கை நுண்ணறிவை உருவாக்கும் முயற்சி துவங்கியது. தொடக்க காலகட்டத்தில் மிகுந்த உற்சாகமும் தைரியமான கணிப்புகளும் இருந்தன. மனித அறிவை எட்டிப்பிடிப்பது விரைவிலேயே நடக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்பினர். ஆனால், விளைவுகள் எதிர்பார்ப்புக்கு நிகராக இல்லை என்பதால், "AI Winter" என்று அழைக்கப்படும் ஒரு கடினமான சவாலை அவர்கள் எதிர்கொண்டனர். ஆனால், அந்த கனவு உயிர் பிழைத்தது. ஒவ்வொரு தசாப்தத்திலும், அடுத்தடுத்து வந்த சிறிய முன்னேற்றங்கள் செயற்கை நுண்ணறிவை உயிர்ப்போடு வைத்தன. மனித விதிமுறைகளைப் பின்பற்றி முடிவெடுக்கும் நிபுணர் முறைமைகள் வந்தன.  நரம்பியல் வலையமைப்புகள் மனித மூளையைப் போல செயல்படலாம் என முயன்றன. வேகமான கணினி வல்லமையும் பெரிய தரவ

ஒரு AI தொடர் எழுத

படம்
முதலில் ஏ.ஐ. பற்றிய சிறு குறிப்புகளாகத்தான் எழுத உத்தேசம். அப்படி எழுதவும் தொடங்கிவிட்டேன். பிறகுதான் எடுத்துக் கொண்ட பொறுப்பு மெல்ல உறைத்தது! தெளிவான திட்டமிடலும் பெரும் உழைப்பும் கோரும் வேலை அது! தீவிர எழுத்தை விட்டு நான் விலகி கிட்டத்தட்ட 20 வருடங்கள் ஆகின்றது. நண்பர்கள் பலருக்கு நான் முன்னொரு காலத்தில் அறிவியல் புனைகதைகள் எழுதியவன் என்பதே புதிய தகவலாக இருக்கக் கூடும்! பேசுவதிலேயே கூட ஆர்வம் பெரிதும் மங்கிவிட்டது! பெரும்பாலும் ஓரிரு வரிகளிலேயே முடித்துக்கொள்ளுவேன். அதற்காக கூட்டத்தை விட்டு விலகுவது இல்லை, கேட்பதே பெரும் நிறைவு! உறவினர்கள்களால் என் அமைதியை ஏற்க முடியவில்லை! ஓயாமல் நான் பேசுவதை கேட்டு வளர்ந்தவர்கள் பலர்! தம்பியொருவன் என் வாழ்க்கையை இரு கூறாக பிறித்துச் சொன்னான், "first half செம, second half ரொம்பத் தொய்வு". சுய புராணம் ஒரு பக்கம் இருக்கட்டும்! எனக்கு மிகவும் ஆர்வமூட்டிய துறை இது! என்னை மிகவும் மிரட்டிய, வெருண்டு ஓடச்செய்த துறையும் இதுதான். அல்ஜீப்ரா (Algebra), டிரிக்னாமெட்ரி (Trigonometry) இதெல்லாம் கணித பாடத்தில் ஏன் வைத்துத் தொலைக்கிறார்கள். இதையெல்லாம்

பெண்ணியம்!

படம்
  “ நீங்க செய்தது பெண்கள் , தங்களுக்கு நெருக்கமானவங்க கிட்ட செய்றமாதிரி இருக்கு ”, என்றார் தோழி . நேற்று என் கோபம் பற்றிய பதிவுக்குத்தான் இப்படி ஒரு எதிர்வினை ! நான் யோசித்திராத கோணம் , உண்மை தான் ! என் மனைவிடம் கூட கண்டிருக்கிறேன் . முதன்முதலில் அவளின் தகிக்கும் கோபத்தை நான் உணர்ந்தது அவள் பிறந்தநாளை மறந்த போது ! மேகமூட்டமான வானத்தைப் போல இருண்டிருக்கும் முகத்தை நீங்கள் காணத் தவறினால் மின்னலும் இடியும் கூடத் தொடரலாம் ! முழு சந்திரமுகியைக் காண விரும்பினால் இதேதும் புரியாத அப்பாவி போல உங்களால் தாங்கமுடிந்த எல்லை வரை போய் பார்க்கலாம் ! ஒரு எச்சரிக்கை . மழை விட்டாலும் தூவானம் விடாத கதையாக நீங்கள் சரணாகதி தத்துவத்தைப் பின்பற்ற ஆரம்பித்துவிட்டாலும் வாதை தொடரும் . மறதி எனும் வியாதி அவர்களை இவ்விடயத்தில் ஒரு போதும் அண்டாது ! தொடரும் மணவாழ்க்கை உங்களுக்கு பல பாடங்களை அடித்து சொல்லித்தந்து தேற்றி விடும் . நிற்க !  நான் ஏன் இப்படி நடந்து கொண்டேன் என்று யோசிக்கும் போது பெண்களின் மனநிலையைப