சிங்கையிருந்து சென்னைக்கு-3
ஒரு பயண அனுபவம் (தொடர்கிறது)
முக்கிய அறிவிப்புகள் கணீரென ஒலிக்கவேண்டாமா? தேய்ந்துபோன கிராமஃபோன் தட்டின் முனகல் போல ஒலித்த விமான ஓட்டியின் குரல், "விமானத்தில் * ஹைடிராலிக் சிஸ்டம் * பழுதுபட்டிருப்பதால் நாம் மீண்டும் பேங்காக்குக்கு திரும்புகின்றோம்", என்றது.
விமான சிப்பந்திகள் இங்குமங்குமாக நடக்கத்துவங்கினர். விமானத்தில் லேசான பதட்டம் நிலவியது
பிரச்சனையின் முழு ஆழம் தெரியாத போதும் நடுக்கடலில் விழவேண்டியதிருக்குமோ என்கிற கவலை எல்லாம் எனக்கு ஏனோ வரவில்லை. என் கவலை வேறு, ஒருமணி நேரத்துக்குமேலே பயணம் செய்தபின் மீண்டும் பாங்காக் திரும்புகிறோம் எனவே பாங்காக் செல்லவே ஒரு மணி நேரமாகும் பிறகு மீண்டும் கிளம்பி சென்னை வரவேண்டும். குறைந்தது மூன்று மணிநேர தாமதம். அங்கே சென்னையில் என்னை வரவேற்க இம்முறை அலுவல் காரணமாக தந்தை வரப்போவதில்லை, எனது தாயோ அல்லது என் மாமியாரோ வரக்கூடும். அவர்கள் வெறுமே காத்துக்கொண்டிருப்பார்கள், விசாரித்து அறியமாட்டார்கள். இதனால் அவர்களுக்கும் நிறைமாத கர்பிணியான என் மனைவிக்கும் ஏற்படக்கூடிய அநாவசிய பதட்டம் குறித்துத்தான் நான் கவலைப்பட்டேன்.
பின்சீட்டில் அம