ஆறுமாதக் குழந்தையின் அழுகுரல்
ஒர் உண்மைச் சம்பவம் ஏற்படுத்திய பாதிப்பின் பிரதிபலிப்பு. அதிகாலையில் அந்த இந்தோனேசிய பெண்மணி கண்ணீரும் கலவரமுமாய் காவல் நிலையத்தில் நுழைந்தாள். அவளுடைய ஆறுமாத இந்தியக் குழந்தை அஞ்சலியைக் காணவில்லை. முந்திய தினம்தான் தன் கணவன் ஜலீலைப் பார்க்க மகளுடன் சிங்கை வந்திருந்தாள். வழக்கம் போலவே கணவனின் நண்பரான சூசைநாதனின் இல்லத்தில்தான் தங்கினாள். காலையில் எழுந்து பார்த்தால் குழந்தையை காணவில்லை. காவல்துறை விசாரணை தொடங்கிற்று.தாயின் கூற்றுப்படி முந்திய தினம் இரவு நடந்ததானது, "குழந்தையை பக்கத்தில் படுக்க வைத்திருந்தேன், நள்ளிரவில் ஏதோ அரவம் கேட்டதால் விழிகளை மெல்லத் திறந்தேன். முகத்துக்கு மிக அருகில் சூசைநாதன் குனிந்திருந்தார். எனக்கு என்ன செய்வதென்றே தோன்றவில்லை. உறக்கத்தை தொடர்பவள் போல கிடந்தேன். அவர் அஞ்சலியை எடுத்துக் கொண்டு தன் படுக்கையறையில் நுழைந்துவிட்டார். மீண்டும் சற்று நேரத்தில் திரும்பிவந்து குழந்தையை பக்கத்தில் கிடத்திவிடுவார் என்று காத்திருந்து அப்படியே சோபாவில் உறங்கிவிட்டேன். காலை ஆறு மணியளவில் விழித்துப் பார்க்கும்போது குழந்தை அருகில் இல்லை. சூசைநாதனின் அறைக்கதவை அறைந்து தட்