இடுகைகள்

நவம்பர், 2004 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

புதிய தமிழ்மணம்

படம்
உற்சாகத்துடன் சாதிக்கும் நபர்களை பார்க்கும் போதெல்லாம் ஒரு உத்வேகம் பிறக்கும் எனக்கு. வலைப்பதிவுகளை தொகுத்து காண்பிக்கும் இணையச்செயலி ஒன்றினை செய்திட வெகுநாளாக ஆவல் கொண்டிருந்தேன். சொல்லுக்கும் செயலுக்கும் உள்ள நீண்ட இடைவெளியை நான் மெல்ல ஊர்ந்து கடக்கும் முன்னே காசி தமிழ் மணம் வீசத் தொடங்கினார். நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக இனிதே வளர்ந்துவரும் இந்த தளத்துக்கு நான் ஏதாகிலும் செய்ய முடியுமா என்று யோசித்துப் பார்த்தேன். நேரமின்மையாலும் என்னை விட வேகமான/திறமையான வரைகலையாளர்கள் இருப்பதாலும் என்னுடைய ஆர்வம் என்னை முழுநேர Developer ஆக இருக்க தூண்டுவதாலும் இப்போதெல்லாம் நான் கணினி வரைகலைப் பணிகளை ஒதுக்கிவிடுகிறேன். காசி ஏற்கனவே திறம்பட தளத்தை இயக்கிவருவதால் வேறு வழியின்றி என்னுடைய பங்களிப்பாக சற்று மேம்படுத்தப்பட்ட கீழ்கண்ட வடிவமைப்பை அமைத்திருக்கிறேன். உங்களின் கருத்துக்களைக் கேட்டு வேண்டிய மாற்றங்கள் செய்தபின் காசியிடம் ஒப்படைத்து விடுவேன். எனவே படம் பார்த்து கருத்து(கதை அல்ல!) சொல்லுங்கள் :)