இடுகைகள்

2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பெண்ணியம்!

படம்
  “ நீங்க செய்தது பெண்கள் , தங்களுக்கு நெருக்கமானவங்க கிட்ட செய்றமாதிரி இருக்கு ”, என்றார் தோழி . நேற்று என் கோபம் பற்றிய பதிவுக்குத்தான் இப்படி ஒரு எதிர்வினை ! நான் யோசித்திராத கோணம் , உண்மை தான் ! என் மனைவிடம் கூட கண்டிருக்கிறேன் . முதன்முதலில் அவளின் தகிக்கும் கோபத்தை நான் உணர்ந்தது அவள் பிறந்தநாளை மறந்த போது ! மேகமூட்டமான வானத்தைப் போல இருண்டிருக்கும் முகத்தை நீங்கள் காணத் தவறினால் மின்னலும் இடியும் கூடத் தொடரலாம் ! முழு சந்திரமுகியைக் காண விரும்பினால் இதேதும் புரியாத அப்பாவி போல உங்களால் தாங்கமுடிந்த எல்லை வரை போய் பார்க்கலாம் ! ஒரு எச்சரிக்கை . மழை விட்டாலும் தூவானம் விடாத கதையாக நீங்கள் சரணாகதி தத்துவத்தைப் பின்பற்ற ஆரம்பித்துவிட்டாலும் வாதை தொடரும் . மறதி எனும் வியாதி அவர்களை இவ்விடயத்தில் ஒரு போதும் அண்டாது ! தொடரும் மணவாழ்க்கை உங்களுக்கு பல பாடங்களை அடித்து சொல்லித்தந்து தேற்றி விடும் . நிற்க !  நான் ஏன் இப்படி நடந்து கொண்டேன் என்று யோசிக்கும் போது பெண்களின் மனநிலையைப