இடுகைகள்

ஜூலை, 2004 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பிரசவத்தில் கணவனின் பங்கு

மனைவியின் பிரசவத்தில் கணவன் உடனிருப்பது அவர்களின் உறவுப்பிணைப்புக்கு மேலும் வலுச்சேர்க்கும் என்று நான் நினைக்கிறேன். ஒரு உண்மைக்கதை: சிங்கையிலே வெளிநாட்டவர்களுக்கு பிரசவ செலவு மிக அதிகம். (அதிகமில்லை ஜெண்டில்மன் உன் சொத்துமொத்தமும் எழுதிவைத்துவிடு அது போதும்!) இதனால் ஏழாம் மாதமே மனைவியை தாயகத்துக்கு அனுப்பவேண்டிய கட்டாயம் அவனுக்கு ஏற்பட்டது, ஏனென்றால் விமானத்தில் அதன்பின் அனுமதிக்கமாட்டார்கள். ஓர் ஒற்றை அறை குடியிருப்பில்... "என்னங்க, உங்களை விட்டுபோக மனசே இல்லீங்க. கட்டாயம் பிரசவநேரத்தில நீங்க கூட இருக்கணும், இங்க வேலை அதனால வரமுடியலைன்னு சாக்குபோக்கு சொல்லக்கூடாது!" "எனக்கு பழசெல்லாம் ஞாபகம் வருது, ஹும்! மறுபடி அமைதி, தனிமை, விரக்தி. ஆனா குழந்தைபிறந்த பிறகு உன் முகத்தில் வரப்போகிற மகிழ்ச்சியை பாக்கிறதுக்காக இதெயெல்லாம் பொறுத்துக்கத்தான் வேணும். எல்லாத்துக்கும் கம்யூட்டர்ன்னா சமயத்தில எனக்கே வெறுப்பாத்தான் இருக்கு, இனி உன்னையும் கொஞ்சகாலம் அதுவழியாத்தான் பாக்கணும். கவலைப்படாதே பிரசவ சமயம் கட்டாயம் நான் கூட இருப்பேன். டாக்டரை பாத்து எப்ப பிரசவமாகும்னு

உஷார்

பயந்தபடியே நடந்துவிடுமோ என்று அஞ்சுகிறேன். இப்படி நடக்கலாம் என்று முன்னமே யூகித்ததுதான். நடந்தது என்ன? - நேரடி ரிபோர்ட் தொலைக்காட்சி தொடர் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் ரகசிய சந்திப்பில் காரசாரமான வாக்குவாதம். விஷயம் இதுதான், படாதபாடுபட்டு சாட்டிலைட் சானல்களில் ஸ்லாட் வாங்கி கைக்காசு போட்டு நாம் தொடர் எடுத்தால் கதாசிரியர்கள்/டைரக்டர்கள் நம்மிடமே பிலிம் காட்டுகிறார்கள் என்று தயாரிப்பாளர்கள் குமுறல். பனிப்போரைவிட்டு பானிப்பட் போருக்கே ஆயுத்தமாக திடீர் முடிவு. தயாரிப்பாளர் கூட்டத்துக்கு பதிலடி - டைரக்டர்களின் கிண்டல் தொடர்களை இயக்குவது என்பது சிறுபிள்ளை விளையாட்டல்ல. பஞ்சத்தில் அடிபட்டவர்கள் மட்டுமே இங்கே தயாரிப்பாளர்களாக உலவுகிறார்கள். அவர்களின் குறைந்த பட்ச பட்செட்டில் நாலே நாலு நடிகைகளையும் அரை லிட்டர் கிளிசரினையும் வைத்து தமிழ் நாட்டையே அழவைத்து மெகா சீரியலை சக்ஸஸ் பண்ணக்கூடிய எங்களையா அவர்கள் பகைத்துக்கொள்ள துணிந்துவிட்டார்கள். இது விரல் சூப்பும் குழந்தை, தன் தாயிடமே கா விடுவதுபோல உள்ளது. நாங்கள் இல்லாவிட்டால் அவர்கள் இல்லவே இல்லை என்று டைரக்டர்கள் சங்க கூட்டத்தில்

வாலிப வயதும் பாலியலும்-2

நான் நினைக்கிறேன், மரத்தின் வேர் மண்ணில் இருப்பதுபோல் எல்லா பிரச்சனைகளுக்கும் ஆணிவேர் மனதினில் புதைந்திருக்கிறது. பாலியல் பிரச்சனைகளிலும் முதலில் அடிபடுவதும், அதிகம் காயப்படுவதும், ஆறாத்தழும்புகள் அடைவதும் மனதுதான், எனவே உளவியல் ரீதியாக இப்பிரச்சனையை அணுகுவது பலன் தரும். ஆரம்பம் எங்கே இருக்கிறது? பாகுபாடு பல பிரச்சனைகளுக்கு ஆரம்பம், இதற்கும்தான். நீ ஆண், நீ பெண், நீ இன்னது செய்யலாம், இன்னது செய்யக்கூடாது என்று வரையறுக்கும்போது நாம் சில தவறுகள் செய்துவிடுகிறோம். சில உதாரணங்கள் "அடேய் ராமு! விளையாட்டுல அடிபட்றது சகஜம், அதுக்காக ஏன் பொட்டச்சி மாதிரி அழறே!" "பொண் குழந்தையா லட்சணமா கூடத்தில மாலுவோட விளையாடவேண்டியதுதானே? அந்த தடியன்களோட என்னடி பேச்சு?" இந்தியாவின் சமூக அமைப்பில், பொதுவாக சிறுவர்களும் சிறுமிகளும் கலந்துபழக வாய்ப்புகள் குறைவு. இத்தகைய சூழலில் சகோதரி, அம்மா தவிர பிற பெண்களுடன் பழகாத சிறுவன் இளைஞனாகி உள்ளுக்குள் மாற்றங்கள் அடையும்போது எதிர்ப்படும் பெண்களை வெறும் உடலாக மட்டுமே பார்க்க வாய்ப்புக்கள் அதிகம். பொத்தி பொத்தி வளர்க்கப்பட்ட பெண்

வாலிப வயதும் பாலியலும்-1

ஏற்கனவே பாலியல் வன்முறை பற்றி ஒரு கதை எழுதவேண்டும் என்று வெகுகாலமாக நினைத்திருந்தேன். இப்போது வரிசையாக என்னைத்தூண்டும் வண்ணம் சம்பவங்கள் நடந்துவருகின்றன. தற்காலப்பெண்பாற்கவிஞர்கள் தங்கள் பாலுறுப்புப்பற்றி எழுதுவது பற்றிய இழையில் மதுரபாரதி, யோனி என்கிற வார்த்தையை பயன்படுத்தாமல் எழுத இயலாத இந்த ஆங்கிலக் கதை யைப்பற்றி குறிப்பிட்டார், பின்னர் உள்ளூர் தொலைக்காட்சியில் "பதின்ம வயதினரின் பாலியல் பிரச்சனைகளை பெற்றோர்கள் சமாளிக்கும் விதம்" எனும் பயிற்சிப்பட்டறை குறித்த விளம்பரம் பார்த்தேன். இரண்டு நாட்களில் வெவ்வேறு சமூகக்கூடங்களில் நடைபெற்ற அந்நிகழ்சியின் முதல் நாள் ஏற்கனவே கடந்துவிட்டது. இரண்டாம் நாளான ஞாயிறு அன்று நான் நேரில் கண்டதும் கேட்டதும் உணர்ந்ததும் கீழே தொகுத்திருக்கிறேன். முதலில் உள்ளூர் தொலைக்காட்சியில் வெளியான 'குரு பார்வை' எனும் தொடரிலிருந்து பட்டறைக்கு தொடர்புடைய காட்சித்தொகுப்பு திரையிடப்பட்டது. அந்ததொடரை நான் ஏற்கனவே சிலவாரங்கள் பார்த்திருக்கிறேன், ஆசிரியர் மாணவர் உறவில் எழக்கூடிய சிக்கல்களை வெகு அழகாக படம்பிடித்திருக்கிறார்கள். கட்டுப்பாடற்ற பதின்ம