இடுகைகள்

2005 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கைப்பேசிக்கான முதல் தமிழ் மின்நூல் வெளியீட்டு விழா!

வலைப்பதிவாளர்களும் வாசகர்களுமாகிய உங்களை வருக வருக என வரவேற்கிறேன். தங்கள் முன்னிலையில், ஒலிப்பெருக்கி முழக்கமோ மேடையோ அலங்காரமோ இன்றி மெல்ல ஒரு வெளியீட்டு விழா. என்ன வெளியிடப்போகிறோம்? தற்போது வெளிவரும் புதிய கைப்பேசிகள் கைக்கணினியின் பெரும்பாலான அம்சங்களை தன்னகத்தே கொண்டிருக்கின்றன. அவைகளின் வசதிகளைக் கொண்டு தமிழில் குறுந்தகவல் அனுப்பும் செயலி சமீபத்தில் சிங்கையில் வெளியீடு கண்டதை அறிந்திருப்பீர்கள். குறுந்தகவல்களையும் சிறுகவிதைகளையும் தாண்டி கதைகளையும் நாவல்களையும் கைப்பேசியிலேயே எடுத்துச்செல்லும் வண்ணம் வடிவமைத்தால் நமது பேருந்து மற்றும் இரயில் பயண நேரத்தை மேலும் பயனுள்ள வகையில் செலவழிக்கமுடியும் அல்லவா? அதற்கான முதல் படியில் காலை எடுத்து வைத்திருக்கிறோம். எழுத்தின் காப்புரிமை பிரச்சனைகளை தவிர்க்கும் விதமாக (மற்றும் என் சுயநலம் காரணமாக) நான் எழுதிய மரத்தடி போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற பாதுகாவல் என்னும் சிறுகதையின் இரண்டாம் பதிப்பை கைப்பேசிக்கான இலவச மின்நூலாக தற்போது வெளியிடுகிறோம். என்னுடைய கைப்பேசியில் இந்த நூலை தரவிறக்கி படிக்க முடியுமா? மேக்ரோ மீடியாவின் ஃபிளாஷ் லைட்டை ஏற்கக

சுனாமி அரங்க உரையாடல்கள்-4

ஜனவரி 12, 2005 புதன் அன்று சுனாமி மீட்பு உதவி அரங்கத்தில் நடந்த உரையாடல்கள் இர.அருள்குமரன்(11:16:51am): சந்திப்பதில் உள்ள சிக்கல்கள் ---------------------- அரங்கு இருபத்தி நான்கு மணி நேரமும் திறந்திருக்கும். ஒரு நிமிட இடைவெளிக்குள் அரங்குக்குள் கிட்டத்தட்ட நான்குபேர் நுழைந்து யாருமில்லை என்று வெளியேறிவிடுவது அடிக்கடி நடக்கிறது. பலமுறை முயன்று பார்த்தேன் யாருமே இல்லை என்று பலரும் அலுப்படைகிறார்கள். சிறிது நேரம் அரங்கினுள் காத்திருங்கள் என்று சொன்னால் அதிலும் சிக்கல், கணினியில் ஒன்றுக்கும் மேற்பட்ட சாளரங்களை திறந்துவிடுவதால் மற்ற நபர்கள் வந்து அழைப்பதே நமக்கு தெரிவதில்லை. இப்படியும் சந்திப்புகள் நிகழாமல் போகின்றன யார் எப்போது வருவார்கள்? யாருக்கும் தெரிவதில்லை. சில எளிய தீர்வுகள் --------------- ஒவ்வொருமுறை உள்ளே வந்து வெளியேறும் போதும் நீங்கள் வந்த நேரத்தை (இந்திய நேரப்படி) மறக்காமல் குறிப்பிடுங்கள். இன்ன நேரத்தில் நீங்கள் வருகிறீர்கள் என்பதை மற்றவர்கள் உணர்ந்து அந்த நேரத்திற்கு வர முயற்சிக்க ஏதுவாக இருக்கும் அடுத்து நீங்கள் வர இருக்கும் நேரத்தையும்

சுனாமி அரங்க உரையாடல்கள்-3

ஜனவரி 11, 2005 செவ்வாய் அன்று சுனாமி மீட்பு உதவி அரங்கத்தில் நடந்த உரையாடல்கள் திருமலை(8:24:23am): என்ன முடிவு செய்தீர்கள்? மூர்த்தி(8:24:28am): ரஜினிராம்கியோடு ஐகாரஸ்,உஷா,சைலஜா இன்னும் பலரும் பாதிக்கப் பட்ட இடங்களுக்கு நேரில் செல்வதாகக் கூறினார்கள் திருமலை(8:24:44am): உஷா சென்னையில் இருக்கிறா ? மூர்த்தி(8:24:48am): வரும் 13க்கு மேல் அவர்கள் அங்கு செல்வதாக சொன்னார்கள் திருமலை(8:24:54am): சரி மூர்த்தி(8:24:57am): பெங்களூரில் இருக்கிறார் திருமலை(8:25:04am): குழப்பமாக இருக்கிறது திருமலை(8:25:15am): இங்கு பெருமளவில் நிதி சேர்கிறது மூர்த்தி(8:25:19am): யாருமில்லா குழந்தைகளை தத்து எடுப்பது பற்றியும் பேசினோம் திருமலை(8:25:26am): பல்வேறு தன்னார்வ நிறுவனங்களுக்கு மூர்த்தி(8:25:30am): ஆமாம் நிதி முக்கிய தேவைதான் மூர்த்தி(8:25:44am): அது சரியாகப் பயன்படுத்தப் பட்டால் மிக நன்று மூர்த்தி(8:25:55am): பத்ரியும் கலந்துகொண்டார் நேற்று மூர்த்தி(8:26:08am): இலங்கை நிலவரங்கள் பற்றியும் பேசினோம் திருமலை(8:26:11am): அதை

சுனாமி அரங்க சந்திப்பு நேரப் பட்டியல்

(இந்திய நேரப்படி) திங்கள் காலை 6:00 மதியம் 3:30 செவ்வாய் காலை 8:00 மாலை 5:30 புதன் காலை 10:00 மாலை 7:30 வியாழன் காலை 12:00 இரவு 9:30 வெள்ளி மதியம் 2:00 இரவு 11:30 சனி மாலை 4:00 அதிகாலை 1:30 ஞாயிறு மாலை 6:00 அதிகாலை 3:30 நேரப் பட்டியல் பலரையும் ஒரே நேரத்தில் திரட்டுவதற்காக மட்டுமே குறிப்பிடப்படுகிறது. மற்றபடி அரங்கம் எல்லா நேரங்களிலும் திறந்தே இருக்கும். எனக்கு தோன்றியபடி நேரத்தை குறித்திருக்கிறேன், மாற்றம் வேண்டுவோர் எனக்கு மடலிடவும். அல்லது பின்னூட்டம் கொடுக்கவும்

சுனாமி அரங்க உரையாடல்கள்-2

ஜனவரி 10, 2005 திங்கள் அன்று சுனாமி மீட்பு உதவி அரங்கத்தில் நடந்த உரையாடல்கள் ரோஸாவசந்த்(0:03:43am): எனக்கு மூக்கிய கரிசனமாய் தாய் தந்தை இழந்த குழந்தைகள் பிர்ச்சனை வாசன்(0:04:03am): அருள் & தமிழகத்தில் இருக்கும் அன்பர்கள் கவனத்திற்கு: சில வருடங்களுக்கு முன் கோவையில் பேருந்தில் எரிக்கப்பட்ட மாணவிகள் நினைவாக நினைவு அறக்கட்டளை ஏற்படுத்தினோம்,பல இணையத்தமிழர்கள் ஒன்று கூடி..அ.கட்டளை ஏற்படுத்த தமிழக நண்பர்கள் பட்ட இன்னற்கள் பல.உங்களில் யாராவது இதுபோல செய்யவிருந்தால் நிறைய யோசித்து செய்யுங்கள்.தமிழக இணைய நண்பர்கள்,இராம.கி,நாக.இளங்கோவனிடம் பேசுவது உதவும்.. ரோஸாவசந்த்(0:04:06am): நிலமை குறித்து மதுரபாரது உஷா(0:05:04am): ஆமாம் குழு என்று ஆரம்பித்தால் பிரச்சனை செய்ய நாலுபேர்கள் கிளம்புவார்கள் ரோஸாவசந்த்(0:05:08am): சரி வாசன் ஆசிப் மீரான்(0:14:13am): நாங்க 5 கண்டய்னர் துணி அனுப்பினோம் ஆசிப் மீரான்(0:14:39am): ஒரு கண்டய்னர் நிடோ பால் பொடி, ஒரு கண்டய்னர் கல்பா மினரல் த்ண்ணீர் உஷா(0:14:43am): இங்க மினரல் வாட்டர் அனுப்பினோம் ஆசிப் மீரான்(0:16:44am): 40 000 பெருடைய