சுனாமி அரங்க உரையாடல்கள்-2

ஜனவரி 10, 2005 திங்கள் அன்று சுனாமி மீட்பு உதவி அரங்கத்தில் நடந்த உரையாடல்கள்

ரோஸாவசந்த்(0:03:43am): எனக்கு மூக்கிய கரிசனமாய் தாய் தந்தை இழந்த குழந்தைகள் பிர்ச்சனை


வாசன்(0:04:03am): அருள் & தமிழகத்தில் இருக்கும் அன்பர்கள் கவனத்திற்கு: சில வருடங்களுக்கு முன் கோவையில் பேருந்தில் எரிக்கப்பட்ட மாணவிகள் நினைவாக நினைவு அறக்கட்டளை ஏற்படுத்தினோம்,பல இணையத்தமிழர்கள் ஒன்று கூடி..அ.கட்டளை ஏற்படுத்த தமிழக நண்பர்கள் பட்ட இன்னற்கள் பல.உங்களில் யாராவது இதுபோல செய்யவிருந்தால் நிறைய யோசித்து செய்யுங்கள்.தமிழக இணைய நண்பர்கள்,இராம.கி,நாக.இளங்கோவனிடம் பேசுவது உதவும்..


ரோஸாவசந்த்(0:04:06am): நிலமை குறித்து மதுரபாரது


உஷா(0:05:04am): ஆமாம் குழு என்று ஆரம்பித்தால் பிரச்சனை செய்ய நாலுபேர்கள் கிளம்புவார்கள்


ரோஸாவசந்த்(0:05:08am): சரி வாசன்


ஆசிப் மீரான்(0:14:13am): நாங்க 5 கண்டய்னர் துணி அனுப்பினோம்


ஆசிப் மீரான்(0:14:39am): ஒரு கண்டய்னர் நிடோ பால் பொடி, ஒரு கண்டய்னர் கல்பா மினரல் த்ண்ணீர்


உஷா(0:14:43am): இங்க மினரல் வாட்டர் அனுப்பினோம்


ஆசிப் மீரான்(0:16:44am): 40 000 பெருடைய 1/2 நாள் சம்பளம்


ஆசிப் மீரான்(0:16:56am): இது போக 10 கண்டய்னர் பிஸ்கட்டுகள்


ரோஸாவசந்த்(0:17:11am): நேசகுமார் சொன்ன செய்தி பத்தி மேல ஏதாவது தெரியுமா? இ.பிர


ஆசிப் மீரான்(0:17:15am): எப்படியும் ஒரு கோடி தொடும்


உஷா(0:17:33am): நல்லது


ஆசிப் மீரான்(0:17:34am): ஈ டி ஏ நிறைய செஞ்சாங்க


இகாரஸ்(0:18:17am): நேசகுமார் சொன்னதை நான் எந்த செய்தித் தாள்லேயும் படிக்கலை .வசந்த். இது வதந்தியா இருக்க வாய்ப்பு இருக்கு,


ரோஸாவசந்த்(0:18:33am): இல்ல அவர் இங்க வந்து உறுதிபடுத்தினார்;


உஷா(0:18:47am): இங்கயும் பழைய துணின்னாங்க,


இகாரஸ்(0:18:49am): ஏதாச்சும் லிங்க் தந்தாரா?


இகாரஸ்(0:18:57am): இருந்தா போடுங்க


ரோஸாவசந்த்(0:19:06am): இல்ல அவரௌக்கு போன்ல சொன்னங்களாம்


இகாரஸ்(0:20:24am): யாருக்காவது ஐடியா இருக்கா? அதாவது, இதுவரைக்கும் கலக்ட் ஆன பணத்தை, மக்களுக்கு எப்படி, எந்த விதமாம் விநியோகம் பண்ணுவாங்கன்னு?


இகாரஸ்(0:20:48am): மத்திய/மாநில அரசு


font color="#55007F">ஆசிப் மீரான்(0:20:59am): ஈடிஏ அனுப்பியது அவங்களோட சென்னை அலுவலகம் மூலமாக


இகாரஸ்(0:22:29am): அம்மா, 5000 கோடி ரூபாய்லே ஒரு மகா சுவர் ஒண்ணு, கடலோரமா கட்டப் போறதா செய்தி வந்திருக்கு. இது சாத்தியமா?


ஆசிப் மீரான்(0:22:31am): கடைசியில ஏடியாநெட் ரேடியோ, சார்ஜா இந்தியன் அசோசியேசன்னு அமைப்புகள் தனியா வேலை செய்ய ஆரம்பிச்ச ஒரு வாரத்துக்கபுறம் சாவகாசமா கூட்டம் போட்டாங்க


வாசன்(0:22:40am): ஆசிப்,அரசாங்கத்தை நம்பி,நம்பி வாழ பழகிக்கொண்டதுதான் பெரும் பிரச்னை ;(


ஆசிப் மீரான்(0:22:56am): அப்படியில்ல வாசன்


ஆசிப் மீரான்(0:23:07am): இங்க யாரும் ப்ணம் பிரிக்கக் கூடாதுன்னு சட்டம் இருக்கு


உஷா(0:23:16am): ஆசிப், கல்பால இருந்தீங்க இல்லே, அங்க மட்டும் இப்படி அலையடிக்கும் இல்லையா


ஆசிப் மீரான்(0:24:12am): தூத்ரகம் அனுமதித்தால் பணம் வசூலிக்கலாம்


ஆசிப் மீரான்(0:24:32am): அதனால்தான் அரசாங்கத்தை நம்பி தொலைய வேண்டியதாப் போச்சு


ரோஸாவசந்த்(0:26:02am): அம்மா, 5000 கோடி ரூபாய்லே ஒரு மகா சுவர் ஒண்ணு, கடலோரமா கட்டப் போறதா செய்தி வந்திருக்கு. இது சாத்தியமா? எனக்கு அப்படி தோணலை நம்ம் ஊருக்கு ச்வரிபாடத்


ஆசிப் மீரான்(0:26:43am): மலையாளிகள் பணம் சேர்த்து கேரள கரையோரமா அனுப்பிட்டாங்க


இகாரஸ்(0:26:49am): இதையெல்லாம் அறிவிக்கும் போது, சம்பந்தப் பட்ட துறை வல்லுனர்களை எல்லாம் கலந்து ஆலோசிச்சு சொல்ல மாட்டாங்கெளோ?


ரோஸாவசந்த்(0:26:54am): அதுல ஆச்சரியமா


ஆசிப் மீரான்(0:27:31am): குறிப்பா பணமா அனுப்பாம கம்பளி, தற்காலிகமா தங்க வசதிக்கான உபகரணங்கள் எல்லாமா அனுப்பிட்டாங்க


உஷா(0:28:31am): நேத்து ராமேஸ்வரம் திருவள்ளுவர் சிலையை ஒரு விநாடி மறைத்தது அலை. நூத்தி முப்பது அடி


உஷா(0:29:24am): சாரி, கன்யாகுமரியில்


காசி(0:57:41am): நேரடியான உதவிகள் தான் (விவேக் ஓபராய் மாதிரி) மக்களுக்கு உடனடித்தேவைன்னு நினைக்கிறேன்


ஐயப்பன்(0:57:56am): திருமலை ராஜன் கூட எதுவோ நிதி திரட்டிட்டு இருக்கார்னு கேள்விபட்டேன்


காசி(0:58:37am): எனக்குத் தெரியலை. நான் என் மனதுக்கு சரிஉஎன்று பட்ட நிதியை


காசி(0:59:00am): aidindia.org and TRO ரெண்டுக்கும் அனுப்பினேன்


காசி(1:00:16am): மத்தபடி தமிழ்மணம் தளத்தின்மூலமா எதாவது செய்தி அளிப்பது மாதிரி எதாவது யாருக்காவது யோசனை இருந்தா என்னால் உடனடியா செய்யமுடியும்


இர.அருள்குமரன்(10:01:18am): http://www.shockwave-india.com/tamil/tsunami/


இர.அருள்குமரன்(10:01:43am): அங்கே தரவிறக்கம் செய்ய சுட்டி உள்ளது


இர.அருள்குமரன்(10:01:58am): உதவி குறிப்புக்களையும் படிக்கவும்


பிகேசிவகுமார்(10:02:23am): செய்துவிட்டேன்


பிகேசிவகுமார்(10:03:56am): சொல்லுங்க
குழுமத்தில் என்ன செய்ய வேண்டும் நான்?

இர.அருள்குமரன்(10:04:18am): இயக்கிய பின் அது system trayல் அமர்ந்துகொள்ளும்


இர.அருள்குமரன்(10:04:29am): இயக்கிவிட்டீர்கள் தானே?


பிகேசிவகுமார்(10:04:34am): ஆமாம்


இர.அருள்குமரன்(10:04:58am): குழுமத்தில் நேர அறிவிப்பு செய்தால் அனைவரையும் ஒரே நேரத்தில் பிடிக்கலாம்


பிகேசிவகுமார்(10:05:05am): ஆமாம்


பிகேசிவகுமார்(10:05:41am): முக்கியமாய், அமெரிக்க நண்பர்கள் வார விடுமுறையில் செய்ய வேண்டிய விஷயங்களை முன்னரே திட்டமிட்டு விடுவார்கள். எனவே, முன்கூட்டியே சொல்லிவைத்து அழைப்பது நல்லது


பிகேசிவகுமார்(10:06:17am): அப்புறம், ஒருத்தரும் சனி, ஞாயிறு காலைகளில் விமானம் பிடிக்கிற வேலை தவிர வேறு வேலைகளுக்கு 8 அல்லது 9 மணிக்கு முன் எழுந்திருக்க மாட்டார்கள்


இர.அருள்குமரன்(10:27:32am): port 80யில் இயங்க ஆவன செய்திருக்கிறேன். அலுவலகத்தில் சோதித்துப் பாருங்கள்


இர.அருள்குமரன்(10:29:35am): இனி உங்களுக்கு உரையாடல் கோப்புகளும் பதிவாகிவிடும்


இர.அருள்குமரன்(10:30:46am): சென்னை வாசிகளை ரஜினி ராம்கியை தொடர்பு கொள்ளச் சொல்லியிருக்கிறேன்


பிகேசிவகுமார்(10:30:49am): இது நல்ல விஷயம். ஓர் அரங்கத்தை இப்படி எப்போதும் வைதிருக்கலாம்.


பிகேசிவகுமார்(10:31:04am): நான் ஒருமணி நேரம் முன்னர் ரஜினி ராம்கியுடன் தொலைபேசியில் பேசினேன்


இர.அருள்குமரன்(10:31:33am): அவர் எப்போது வருவார் என தெரிந்தால் மற்றவர்களுக்கும் அறிவித்துவிடலாம்


இர.அருள்குமரன்(10:31:42am): கொடுங்கள்


பிகேசிவகுமார்(10:31:47am): அரங்கத்துக்கா?


இர.அருள்குமரன்(10:31:54am): ஆம்


பிகேசிவகுமார்(10:32:01am): 12ஆம் தேதி கரூர் சென்று பெட்ஷீட்கள் வாங்கப் போகிறேன் என்று சொன்னார்


இர.அருள்குமரன்(10:39:41am): F2 உபயோகித்தால் மொழி மாற்றலாம்


இர.அருள்குமரன்(11:08:07am): ரஜினி ராம்கி இந்திய நேரம் 12:30க்கு அரங்குக்கு வர இருக்கிறார்


பிகேசிவகுமார்(11:08:32am): மதியம்?


இர.அருள்குமரன்(11:08:33am): அவரை பேசச் சொல்லி கேட்பதாக இருக்கிறோம்


இர.அருள்குமரன்(11:08:35am): ஆம்


பிகேசிவகுமார்(11:09:31am): என் நேரம் அப்போது இரவு 1:30 மணி


பிகேசிவகுமார்(11:09:43am): எனவே, நீங்கள் அவருடன் பேசி முடிவெடுங்கள்


இர.அருள்குமரன்(11:10:25am): அவர் அங்குமிங்கும் அலைய இருப்பதால் அவருடைய நேர வசதியே முக்கியம் என நினைத்தேன்


பரி(11:13:47am): ·பயர் பாக்ஸ்-ல என்டர் கீ தட்டினா போஸ்ட் ஆகாம இன்னொரு லைன் போடுது


இர.அருள்குமரன்(12:04:40am): இந்திய நேரம் 12:30க்கு பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்த்த ரஜினி ராம்கி இந்த அரங்குக்கு வர இருக்கிறார்


இர.அருள்குமரன்(12:05:24am): அந்த நேரம் வந்தால் நிறைய ஆட்கள் இருப்பார்கள்


மூர்த்தி(3:06:32pm): சிங்கை வாழ் நண்பர்கள் சார்பாக நாம் என்ன செய்யலாம் அருள்குமரன்?


இர.அருள்குமரன்(3:06:44pm): யோசனை சொல்லுங்கள்


மூர்த்தி(3:07:17pm): ரஜினிராம்கி முன்னர் ஒரு யோசனை சொன்னார்


ரோஸாவசந்த்(3:07:38pm): ஒரு கிராமத்தை தத்து எடுப்பதாக..


இர.அருள்குமரன்(3:08:22pm): நண்பர் நேசமுடன் வெங்கடேஷ் அவர்கள் ரஜினி ராம்கியை தொலைபேசியில் அழைத்து அரங்கில் நுழையும்படி சொல்லப்போகிறார்


இகாரஸ்(3:13:07pm): பெட்ஷீட் விநியோகம் எல்லாம் நல்ல படியா முடிஞ்சதா ராம்கி?


J. ரஜஜஜஜ்னி ராம்கி(3:13:15pm): usha madam... unga amount vanthudutchu...


J. ரஜஜஜஜ்னி ராம்கி(3:13:39pm): illai prakash.. going to distribute on 13th


J. ரஜஜஜஜ்னி ராம்கி(3:15:25pm): நண்பர்களே, எல்லோரும் உங்கள் கருத்தை சொல்லுங்கள்.. என்ன செய்யலாம்?


உஷா(3:15:54pm): ராம்கி, பணத்தை உங்கள் செள்கரியம் போல உபயோகிச்சிக்குங்க


மூர்த்தி(3:16:20pm): தாங்கள் முன் சொன்ன ஐடியா என்ன ஆச்சு ராம்கி


J. ரஜஜஜஜ்னி ராம்கி(3:16:29pm): கையிருப்பு நிலவரம் பற்றி என்னுடைய பிளாக்கில் எழுதியிருக்கிறேன். போதுமான பணம் இருக்கிறது. நன்றி


J. ரஜஜஜஜ்னி ராம்கி(3:16:47pm): மூர்த்தி எதை சொல்கிறீர்கள்?


இகாரஸ்(3:17:47pm): ராம்கி, வாலண்டியர்ஸ் எல்லாம் இன்னும் நாகையிலே இருக்காங்களா?


இகாரஸ்(3:18:17pm): இல்லே முழுசா அரசாங்கம் டேக் ஓவர் பண்ணிகிடுச்சா?


J. ரஜஜஜஜ்னி ராம்கி(3:18:23pm): இருக்காங்க.. அறுசுவை பாபுவை தொடர்பு கொண்டேன். மீட்பு நடவடிக்கைகள் முடிந்துவிட்டன


மூர்த்தி(3:18:31pm): கிராமம் தத்து எடுப்போம் எனச் சொன்னீர்களே ராம்கி


இகாரஸ்(3:18:59pm): நிவாரணப் பணம் எல்லாம் எப்ப அவங்க கைக்கு கிடைக்கும்னு எதனா ஐடியா இருக்கா?


J. ரஜஜஜஜ்னி ராம்கி(3:19:14pm): மூர்த்தி, இப்போதைக்கு நிறைய உதவிகள் குவிகின்றன. கொஞ்ச காலம் பொறுத்து செய்தால் நிஜமாகவே பாதிக்கப்பட்டவர்களை நாம் அணுக முடியும்


ஷைலஜா(3:20:06pm): ரஜனி ராம்கி எப்படி அங்கு நிலமை?


ரஜினி ராம்கி(3:20:29pm): ரொம்ப மோசமில்லை மேடம்


ரோஸாவசந்த்(3:20:40pm): ரஜினி சொலறது சரின்னு படுது "|C!io C!Ao |A!UoD |oo?!o ?‘?A!C˜A A!?‘iCoAd?A€CNC ?!o நூIC OEOo"


ஷைலஜா(3:21:09pm): நாங்க இங இந்தியால இருக்கிறவங்க யாரும் உங்களுக்கு உதவ அங்கே வரணுமா ரஜனி ராம்கி?


ரஜினி ராம்கி(3:21:36pm): நான் பார்த்தவரையில் சந்தரபாடி என்கிற கிராமம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இது காரைக்காலுக்கு அருகாமையில் உள்ளது.


தேவையில்லை வசந்த்.. ஆட்கள் இருக்கிறார்கள்



ரோஸாவசந்த்(3:21:37pm): எதையும் முயற்சிக்க்க்ல


உஷா(3:22:10pm): ராம்கி நீங்கள் கண்டதை தொடர்ந்து டைப் அடியுங்கள்


ஷைலஜா(3:22:26pm): ரஜனி ராம்கி பெண்கள் அங்கு குழந்தைகளை இழந்த நிலையில் எப்படி உள்ளனர்


ரஜினி ராம்கி(3:22:35pm): காணும் இடங்களெல்லாம் நிறைய உதவிகள். குவிகின்றன. நிறைய இடங்களில் நம்மை நொந்து போக வைக்கிறார்கள்


இர.அருள்குமரன்(3:22:44pm): ஏன்?


இகாரஸ்(3:22:47pm): என்ன பிரச்சன?


ஷைலஜா(3:22:51pm): நொந்து போகவா எப்படி


ரோஸாவசந்த்(3:22:54pm): அதே


ரஜினி ராம்கி(3:23:13pm): பெரிதாக பிரச்னையில்லை. பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டுவிட்டன. தமிழக அரசு புதிதாக காப்பகங்கள் கட்டப்போவதாக சொல்லியிருக்கிறது. ஆனாலும் நாளாகும்


இகாரஸ்(3:23:29pm): நொந்து போகும் படிஎன்ன் ஆச்சு?


ஷைலஜா(3:23:38pm): அதான் என்ன அது


ரஜினி ராம்கி(3:23:49pm): நொந்து போவது என்றால்.... கர்நாடகாவிலிருந்து சிலர் சப்பாத்திகளை பார்ஸல் பண்ணிக்கொண்டு லாரிகளில் வந்திருந்தார்கள்


இகாரஸ்(3:24:10pm): கஷ்டம் தான்


இர.அருள்குமரன்(3:24:14pm): ம்...


ரஜினி ராம்கி(3:24:17pm): மக்கள் எங்களுக்கு அதெல்லாம் வேண்டாம்.. கறி, மீன் இருந்தால் கொடுங்கள், இல்லாவிட்டால் வேண்டாம் என்றார்கள்


இர.அருள்குமரன்(3:24:27pm): இது கொடுமை


ஷைலஜா(3:24:33pm): இது நியாயமா என்ன


ரோஸாவசந்த்(3:24:36pm): எனக்கு அது தப்பாய் தெரியவில்லை


இகாரஸ்(3:24:38pm): கண் பிரஷ்சனை வருகிறது என்று சொல்கிறார்களே?


ரஜினி ராம்கி(3:24:45pm): நிறைய உதவிகள், ஆனால் முறைப்படுத்ததான் ஆட்கள் இல்லை


ரோஸாவசந்த்(3:24:46pm): அது உண்மையா


மூர்த்தி(3:24:50pm): ஆமாம். அதுவரைக்கும் அவர்களுக்கு தங்குமிடம் பிரச்னையாகும்.


மூர்த்தி(3:24:52pm): கோவில்கள் கூட தற்காலிகத் தீர்வுதானே...


ரோஸாவசந்த்(3:24:56pm): நேசம் சொன்னது


நம்பி(3:25:02pm): எனக்கும் அது தவறாய் தெரியவில்லை.


ஷைலஜா(3:25:28pm): பசிக்கு ஏதோ உணவெனக் கொள்ளாலாமே சப்பத்தியையும்


ரஜினி ராம்கி(3:25:31pm): நானும் தவறாக நினைக்கவில்லை. ஆனால், கொடுப்பதை மனமுவந்து வாங்கிக்கொள்ளலாம் இல்லையா!


இர.அருள்குமரன்(3:25:38pm): ஆம்


ஷைலஜா(3:25:52pm): கொடுப்பவர்கள் மனம் வருந்தும் அல்லவா


இகாரஸ்(3:26:01pm): ஆனால், அந்த நிலமையில், அவர்களது உள இயலையும் சற்று சிந்திக்க வேண்டும்


ரஜினி ராம்கி(3:26:08pm): அப்புறம் நாம் கொடுத்த தேங்காய் எண்ணெய், சோப் வகையறாக்கள் நிறையவே பயன்பட்டன


இர.அருள்குமரன்(3:26:09pm): கொடுக்க நினைத்து சிரமமெடுத்து வந்தவர்கள் நொந்துபோவது நல்லதல்ல


ரோஸாவசந்த்(3:26:13pm): அவர்களுக்குஎன்ன வேண்டும் என்று கேட்டு கொடுப்பதே நல்லதுஎ ன்று தோன்றுகிறது. அளவுக்கு மீறி உதவிகள் வரும்போது இப்படி பிரச்சனை வரெஉம்]


நம்பி(3:26:18pm): இங்கு கொடுபபவரைவிட வாங்குபவர் முக்கியம்.


இர.அருள்குமரன்(3:26:20pm): ஆம்


ஷைலஜா(3:26:36pm): ஒரு வகையில் நம்பி சொல்வதும் சரிதான்


ரஜினி ராம்கி(3:26:47pm): பெரும்பாலும் ஒவ்வொரு தெருக்களிலும் உதவியாய் வந்த பழைய துணிகளை குவித்து வைத்திருக்கிறார்கள். அதுவே பெரிய தொல்லைதான்!


ஷைலஜா(3:27:07pm): அதை யாரும் யூஸ் செஞ்சிக்கலயா


மூர்த்தி(3:27:14pm): மோசமாகக் கிழிந்த துணிகளும் இருந்தன என படித்தேன்.


நம்பி(3:27:21pm): ஆமாம். ஜெ.மோ கூட எழுதியிருந்தான், பழைய துணிகள் பற்றி


ரோஸாவசந்த்(3:27:26pm): அது ஜெயா சொனதுப் போல நம் மக்களின் அலபதனத்தையும் காட்டுகிறது


நம்பி(3:27:35pm): சாரி... இருந்தார்


ரஜினி ராம்கி(3:27:57pm): போன ஞாயிற்றுக்கிழமை பத்ரியுடன் பேசும்போது பள்ளிக்குழந்தைகளுக்கு பாட புத்தகங்கள் வாங்கிக்கொடுக்கலாம் என்று நினைத்திருந்தோம். ஆனால், சாயந்திரமே ஜெயா டிவியில் ப்ளாஷ், அரசே பாட புத்தகங்களை வழங்கும் என்று


நம்பி(3:27:58pm): ஜெ.மோ. எழுதியிருந்தார்


இகாரஸ்(3:28:21pm): ஆனால், இதெல்லாம் கைக்குக் கிடைக்க எத்தனை நாட்களாஅகும்?


ரோஸாவசந்த்(3:28:32pm): ரஜினி, குழந்தைகளை தத்து எடுப்பவ்ர்கள் இருக்கிறார்களா?


ரஜினி ராம்கி(3:28:43pm): பிரகாஷ் கண்பிரச்னை பற்றி தெரியவில்லை. ஆனால், மீடியா நிறைய புரளியை கிளப்புகிறது.


இகாரஸ்(3:28:55pm): நான் கூட அப்படித்தான் நினைத்தேன்


ரோஸாவசந்த்(3:28:56pm): நானும் செய்தி படிக்கவில்லை


நம்பி(3:28:56pm): ராம்கி: குழந்தைகள் நிலை எப்படி?. பெற்றோரை இழந்த குழந்தைகள் அதிகமா?


மூர்த்தி(3:29:02pm): கண் பிரச்னை வேறு பயமுறுத்துகிறது


ரஜினி ராம்கி(3:29:14pm): இல்லை வசந்த். எம்.கே.குமார் கூட கேட்டிருந்தார். ஆனால், அப்படிப்பட்ட குழந்தைகள் நான் பார்த்தவரையில் நிறைய இல்லை


ரோஸாவசந்த்(3:29:27pm): கண் பிரச்சனை நேகு தவிர எங்கேயும் கேள்விபடவில்லை


ரஜினி ராம்கி(3:29:48pm): அரசாங்கமே அனைத்து குழந்தைகளையும் தத்தெடுப்பதாக அறிவித்திருப்பதால், தனியார்கள் தத்தெடுப்பது கொஞ்சம் கஷ்டமான காரியம்


இகாரஸ்(3:30:02pm): நேசம்வந்தால், எங்கிருந்து அந்தச் செய்தியைப் ப்டித்தீர்கள் என்று கேட்கவும்


ரோஸாவசந்த்(3:30:05pm): பாலாஜி பாரி பதிவில் பாலு என்பவர் 15 நாட்கள் குழந்தைகள் 2 இருந்ததாக சொல்கிறார்.


மூர்த்தி(3:30:05pm): ஆமாம்


நம்பி(3:30:06pm): *நிறைய இல்லை* ?


உஷா(3:30:16pm): இன்று சன் டீவியில் நாகையில் நாற்பது சொச்ச பிள்ளைகள் அனாதை ஆகியிருக்கின்றன. தன்னார்வ நிறுவனங்கள், தனிமனிதர்களை பார்த்துதான் தத்து தரப்பட்டும் என்று காப்பகத்தில் சொன்னார்கள்


ரோஸாவசந்த்(3:30:26pm): தாய் தந்தை இழந்த 15நாட்கள் குழந்தை


ரஜினி ராம்கி(3:30:58pm): ஒரு சமூக சேவகர் தத்தெடுப்பதில் உள்ள சிரமங்கள் பற்றி என்டிடிவியில் பேசினார்.. கஷ்டமான காரியம்தான்


ஷைலஜா(3:31:01pm): பரிதாபம் இதெல்லாம் இல்லையா ரஜனிராம்கி


மூர்த்தி(3:31:06pm): பாவம். பிறக்கும்போதேவா அக்குழந்தைக்கு இப்படி ஒரு நிலை? இறைவனை என்ன சொல்வது?


ரோஸாவசந்த்(3:31:07pm): என்ன்·அ வகை க்சடம்


உஷா(3:31:13pm): ராம்கி அவசர உதவியாய் 10. 12 வது பிள்ளைகளுக்கு புத்தகங்கள், நோட்டுகள் போன்றவை வாங்கி தரலாம். தேர்வு நெருங்குகிறதே


ரோஸாவசந்த்(3:31:38pm): தத்து எடுப்பதில் என்ன வகை பிரச்சனைகள் வரக்கூடும்


இகாரஸ்(3:31:51pm): உஷா, பாட புத்தகங்களை இலவசமாகத் தர உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது


ரஜினி ராம்கி(3:32:02pm): பாடப்புத்தகங்கள் விநியோகம் ஆரம்பமாகிவிட்டது என்றுதான் நண்பர்கள் சொல்கிறார்கள். அப்படி இல்லாவிட்டால் உடனே நாம் களத்தில் இறங்கலாம்


ஷைலஜா(3:32:07pm): நாங்க பெண்கள் கொஞ்சபேரு நேரில் போய் ஆறுதலாப்பேசி முடிந்த உதவி செய்யலாம ரஜனி ராம்கீ


மூர்த்தி(3:32:08pm): நல்ல முடிவு


ரோஸாவசந்த்(3:32:21pm): நல்லது


உஷா(3:32:23pm): ஷைலு, காலையில் காப்பகம் காட்டினார்கள். இரண்ட்ரை வயது குழந்தை குப்புற படுத்துக் கொண்டு, வெறித்த பார்வையுடன். அதன் மனதில் என்ன் எண்ண்ம் ஓடும்?


இகாரஸ்(3:32:27pm): தத்து எடுக்கிறவர்களின் நிஜ நோக்கத்தை உறுதி செய்வது ரொம்ப முக்கியம் வசந்த். ஆகையால்...


ரஜினி ராம்கி(3:32:37pm): ஒரு முக்கியமான விஷயம். திரும்பவும் கடலுக்கு பக்கத்தில் குடிசைகள் கட்டக்கூடாது என்று சொல்லத்தான் ஆளில்லை


இகாரஸ்(3:32:49pm): வெரி குட் ஷைலஜா


இகாரஸ்(3:33:12pm): மொத்தமா சில பேர் இப்படி கிளம்பிப் போகலாம். நான் ரெடி


ரோஸாவசந்த்(3:33:20pm): அது கஷ்டம் என்றுதான் தோன்றுகிறது. குடிசை கட்டகூடது என்பது மட்டுமல்ல, வேறு இடத்தையும் காண்பிக்க வேண்டும்


இகாரஸ்(3:33:25pm): ராம்கியை கூப்பிட்டிக் கொண்டு


ரஜினி ராம்கி(3:33:25pm): கரெக்ட் ஷைலஜா. அதைத்தான் மகளிர் சுய உதவி குழுக்கள் திறம்பட செய்கின்றன. நேரில் பார்த்து நெகிழ்ந்துவிட்டேன். போட்டோ கூட என்னுடைய பிளாக்கில் போட்டிருந்தேன்


ஷைலஜா(3:33:27pm): இகாரஸ் நாங்க என்ன செய்யணும் என சொன்னால் ரெடி நானும்


ஷைலஜா(3:33:55pm): நான் ஷக்தி இங்கேருந்து வரோம்


உஷா(3:34:00pm): இகாரஸ், ராம்கி 24 காலை சென்னையில் இருப்பேன்


ஷைலஜா(3:34:16pm): சென்னை நன்பர்கள்திட்டமிட்டு சொல்லவும்


ரஜினி ராம்கி(3:34:21pm): நான் எப்போதும் ரெடி. இருந்தாலும் இந்த வாரம் நிலைமை எப்படியிருக்கு என்பதை பார்த்துவிட்டு சொல்கிறேன்


இகாரஸ்(3:34:29pm): ஒரு ஷெட்யூல் போட்டுக்கிட்டு, இங்கிருந்து எல்லாம் கிளம்பலாம்


ரோஸாவசந்த்(3:34:36pm): உங்கள் பதிவில் எழுதுங்கள்


ஷைலஜா(3:34:37pm): உஷா இருங்க நீங்க எங்களோட வரீங்களா அப்போ


இகாரஸ்(3:34:38pm): ராம்கி, உங்க செல் நம்பர்


ரோஸாவசந்த்(3:34:49pm): என் பதிவில் இருக்கு


இகாரஸ்(3:34:51pm): ராம்கி....


ரோஸாவசந்த்(3:34:53pm): ராம்கி நம்பொஅர்


ரஜினி ராம்கி(3:35:01pm): வரும் 13ம் தேதி யாராவது ·ப்ரீ என்றால் உடனே எனக்கு சொல்லுங்கள்


ஷைலஜா(3:35:14pm): சரியா ஒரு தேதி சொல்லுங்க நாங்க வரோம் ராம்கி


ரஜினி ராம்கி(3:35:23pm): 94444 53694


உஷா(3:35:33pm): ஷைலு நீங்க எப்ப கிளப்புறீங்க


ரோஸாவசந்த்(3:35:39pm): வாய்ஸ் சேட் என்று வேறு இடத்திற்கு வந்தேன். வாய்ஸ் வசதி இல்லையா?


ஷைலஜா(3:35:40pm): பொங்கல் ஆ மறுநாளே நான் ·ப்ரீதான்


ரஜினி ராம்கி(3:35:50pm): நிச்சயம் சொல்கிறேன். இந்த அமளியெல்லாம் அடங்கட்டும்.. பொறுமையாக போகலாம்


இர.அருள்குமரன்(3:35:54pm): வாய்ஸ் வசதி இருக்கு


இகாரஸ்(3:35:57pm): ஓகே.


ஷைலஜா(3:35:59pm): உஷ உங்க ப்ளான் படி போகலாம் நாம்


ரோஸாவசந்த்(3:36:04pm): என்ன செய்யவேண்டும்?


இர.அருள்குமரன்(3:36:06pm): ஆனால் சிலரிடம் ஸ்பீக்கர் இல்லை


ரோஸாவசந்த்(3:36:10pm): ஓகே


இர.அருள்குமரன்(3:36:20pm): அதனால் பேச்சை நிறுத்திவிட்டோம்


ரஜினி ராம்கி(3:36:24pm): பொங்கல் கழித்துதான் எல்லோருமே ·ப்ரீ ஆவார்கள். எனவே அதற்குபின்னரே வைத்துக்கொள்ளலாம்


ரோஸாவசந்த்(3:36:27pm): சரீ நன்றி


இகாரஸ்(3:36:27pm): யாராவது வலைப்பதிவுலே இதைப் பத்தி எழுதி, அங்கிருந்து எல்லாரையும் ஒன்று சேர்த்துக் கொள்ளலாம்.


இகாரஸ்(3:36:43pm): பொங்கலுக்குப் பிறகு ....


இகாரஸ்(3:36:49pm): நல்ல டயம்


உஷா(3:37:03pm): ஷைலு, இருபத்திஏழு எங்கப்பாவுக்கு எண்பதாவது பிறந்தநாள். அப்பொழுது சென்னையில் இருக்க வேண்டும். அதுக்கு நான் மட்டும் வருகிறேன்


ரஜினி ராம்கி(3:37:14pm): முடிந்தால் இரண்டு நாள் நிகழ்ச்சியாகவே தயார் செய்து பக்கத்திலிருக்கும் பிரபலமான கோயில்கள், இடங்களுக்கும் போய்வரலாம்


ஷைலஜா(3:37:15pm): ஓ வாங்க


இர.அருள்குமரன்(3:37:18pm): இந்த அரங்கத்தையும் பயன்படுத்திக்கொள்ளுங்கள் நேரடி உரையாடலுக்கு


ஷைலஜா(3:37:29pm): நல்ல திட்டம் ரஜனி ராம்கி


இகாரஸ்(3:37:35pm): நிதானமாக எல்லா இடத்தையும் சுற்றிப் பார்த்து, நிஜமான தேவை என்ன என்று தெரிந்து கொண்டு, வலைப்பதிவுகளில் விளம்பரம் செய்து, உதவிகளைப் பெறலாம்


ஷைலஜா(3:37:50pm): 31 ராஜாக்கு திருமண வரவேற்பு சென்னையில்


இர.அருள்குமரன்(3:37:58pm): இன்னும் இலங்கை நண்பர்களை காணவில்லை


ரஜினி ராம்கி(3:38:05pm): கரெக்ட் பிரகாஷ். பொறுமையாக செய்தாலும் நிறைவாக செய்வோம்


உஷா(3:38:12pm): இன்னும் டிக்கேட் வாங்கவில்லை. ஒருவாரம் அல்லது பத்துநாள். போஸ்ட்போன், ப்ரீ போன் செய்யலாம். ஆனால் அதுக்கு மேலே முடியாது.


ஷைலஜா(3:38:16pm): அதுதான்சரிரனஜிராம்கி


ரோஸாவசந்த்(3:38:17pm): நல்லது


ரோஸாவசந்த்(3:38:42pm): பொறுமையாய் நிதானமாய்7 செய்யலாம்


ஷைலஜா(3:38:42pm): எப்படியும் நீங்க வரப்போ நாம் சேர்ந்து போகலாம் உஷா


ரஜினி ராம்கி(3:38:43pm): இலங்கையை எத்தகைய உதவி தேவை என்பதைத்தான் புரிந்து கொள்ள முடியவில்லை


ரோஸாவசந்த்(3:39:02pm): புரிந்தாலும் செய்யமுடியுமா என்று பிரச்சம்ன்னை


இகாரஸ்(3:39:17pm): என்ன பிரச்சனை ரோ.வ?


ஷைலஜா(3:39:31pm): ரஜனி ராம்கி உங்களோட யாரார் உதவிக்கு இப்போ வந்திட்டு இருக்க்காங்க


ரஜினி ராம்கி(3:39:32pm): தமிழகத்தில் தேவைக்கு அதிகமான உதவிகள் கிடைக்கின்றன. அந்தமான் மற்றும் இலங்கையைத்தான் நாம் கவனிக்க வேண்டும்


இகாரஸ்(3:39:32pm): ஓ.. இலங்கை பற்றி சொல்கிறீர்களாஅ?


ரோஸாவசந்த்(3:39:34pm): அரசாங்க அனுமதி, புலிகளிடம் போய் சேர்வது


இகாரஸ்(3:39:50pm): ஐ அண்டர்ஸ்டாண்ட் ... @ரோ.வ


ரோஸாவசந்த்(3:39:53pm): ஆமாம் இகாரஸ்


ரோஸாவசந்த்(3:40:14pm): சரி மீண்டும்பழைய கேள்வி.தத்து எடுப்பதில் என்ன வகை பிரச்சனைகள் வரக்கூடும்ம


ரஜினி ராம்கி(3:40:20pm): என்னுடைய சென்னை ரூம்மேட் மற்றும் மயிலாடுதுறை நண்பர்கள்தான் அதிகமான உதவிகள் செய்கிறார்கள். பத்ரி வழிகாட்டுகிறா


உஷா(3:40:26pm): ஷைலு எப்படியும் தனியாகவோ, ரெண்டு மூணுபேராகவோ நாம்ப போக முடியாது. குழுவாய் போனாதாதான் சரிப்படும். மொதல்ல எங்க பேரண்ட் விடமாட்டாங்க


ரஜினி ராம்கி(3:41:06pm): உஷா மேடம், அப்படி போவதாக இருந்தால் ஒரு வேனை வாடகைக்கு அமர்த்தி பத்து பேராகவே போய்விட்டு வரலாம்


ரோஸாவசந்த்(3:41:13pm): வாழ்துக்கள்


ஷைலஜா(3:41:15pm): சரி ரஜனி


ரோஸாவசந்த்(3:41:31pm): நான் இங்கிருந்து நகரமுடியாது


ஷைலஜா(3:41:50pm): மெயில்ல சொல்லிடுங்க எனக்கு அல்லது நான் போன் செஞ்சி உங்களக் கேட்டுக்கறேன்


ரஜினி ராம்கி(3:41:54pm): எல்லோருக்கும் நன்றி. 13ம்தேதி அன்று பிகேஎஸ் கொடுத்த பெட்ஷீட்களை விநியோகித்துவிட்டு விரிவாகவே எழுதுகிறேன்


உஷா(3:41:58pm): டிக்கெட் 15ம்தேதி வாங்குவேன். சொல்லுங்க ஷைலு, ராம்கி நான் ரெடி


ரோஸாவசந்த்(3:42:00pm): சரி, ரஜினி கொஞ்சம் விளக்கமாய் , மீண்டும்பழைய கேள்வி.தத்து எடுப்பதில் என்ன வகை பிரச்சனைகள் வரக்கூடும்ம


ஷைலஜா(3:42:21pm): நல்ல பணி ரஜனிராம்கி பெருமையாக இருக்கு உங்கலப்பார்த்தா


ரஜினி ராம்கி(3:42:37pm): ஷைலஜா, உஷா மேடம், எல்லா நண்பர்களையும் கலந்தாலோசித்துவிட்ட பின்னர் முடிவு செய்யலாம்


உஷா(3:42:44pm): ரோ. வ லீகலாய் நிறைய குழப்பங்கள். அவ்வளவு சுலபமில்லை


ஷைலஜா(3:42:46pm): சரி ரஜனி


ரஜினி ராம்கி(3:42:59pm): நிச்சயம் எழுதுகிறேன் ரோ. வ


ரோஸாவசந்த்(3:43:05pm): அதைத்தான் எழுத முடியுமா என்கிறேன்


ரோஸாவசந்த்(3:43:14pm): எனக்கு ¦புரிந்துகொள்ள


ஷைலஜா(3:43:17pm): பெண்களிடம் பேச உதவி செய்ய நாங்க ரெடி


ரோஸாவசந்த்(3:43:21pm): தேங்க்ஸ்


உஷா(3:43:45pm): வயசு, உங்க பொருளாதாரம், உங்க சொந்த பிள்ளைகள், நீங்க இருக்கும் இடம் .....


ரஜினி ராம்கி(3:44:06pm): முக்கியமான விஷயம். ஆறுமாதம் வரை காத்திருக்க வேண்டுமாம்!


உஷா(3:44:07pm): அதிலும் நீங்க ஜப்பானில் இருப்பதால் மிக கஷ்டம்


ரோஸாவசந்த்(3:44:20pm): நான் அதை கேட்கவில்லை, மற்ற இடத்திலிருந்து, அரசாங்கத்திடமிருந்து, மற்றும் சட்ட ரீதியாய்...


ரஜினி ராம்கி(3:45:44pm): எங்களது இணையத்தளம் சார்பில் (www.rajinifans.com) ஒரு முயற்சி செய்தோம். ஆனால் முடியவில்லை. சம்பந்தப்பட்ட பையன் பரம ஏழைக்குடும்பத்தில் பிறந்தவர். தற்போது மெரிட்டில் மார்க் வாங்கி அரசாங்க கோட்டாவில் மருத்துவ கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கிறார். படிப்பு செலவுகளை மட்டும் நாங்கள் கொடுக்கிறோம்


ரஜினி ராம்கி(3:46:04pm): வணக்கம் பத்ரி. எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டேன்


பத்ரி(3:46:37pm): பி.கே.சிவகுமாருக்கு ஒரு மெயில் அனுப்பிவிடவும்


ரோஸாவசந்த்(3:46:47pm): நான் அனுப்ப்வா?


ரஜினி ராம்கி(3:46:59pm): அனுப்பிவிட்டேன். அவரும் காலையில் போன் செய்தார். பேசிவிட்டேன்.


பத்ரி(3:47:04pm): ஒகே


பத்ரி(3:47:21pm): குட்டி அப்டேட் - இலங்கை பற்றி


ரோஸாவசந்த்(3:47:32pm): ப்ளீஸ்


பத்ரி(3:47:58pm): TRO - கொழும்பு பேசினேன்


ரஜினி ராம்கி(3:48:06pm): சொல்லுங்க பத்ரி. அதைத்தான் எதிர்பார்க்கிறோம்


ரோஸாவசந்த்(3:48:17pm): அந்த மருந்துகள் முடிவில் ப்பொனதா?


பத்ரி(3:48:20pm): என் அலுவலக நண்பரும் பேசினார்.


பத்ரி(3:48:51pm): மருந்துகள் போய்விட்டன. ஆனால் TRO ந்ண்பர்கள் சொல்வது அந்த மருந்துகளை எடுப்பது சிரமம் என்று


பத்ரி(3:48:57pm): ஆனால் முயற்சி செய்கிறார்கள்


பத்ரி(3:49:20pm): டி.ஆர்.ஓ இந்தியாவிலிருந்து காசு கொடுத்து வாங்கும் மருந்துகளையும் அரசு எடுத்துக்கொண்டு தர மறுக்கிறதாம்


ரோஸாவசந்த்(3:49:32pm): எதிர்பார்த்ததுதான்


பத்ரி(3:49:33pm): எனவே என்னை சற்றுப் பொறுக்கச் சொல்கிறார்கள்


பத்ரி(3:49:43pm): மேற்கொண்டு இன்னமும் சில பொருட்கள் என்னிடம் உள்ளன


பத்ரி(3:49:53pm): அவர்கள் சொன்னவுடன் அனுப்பச் சொல்கிறார்கள்


பத்ரி(3:50:06pm): ஆனால் அதற்குள் இன்னமும் பல உயிர்கள் போகலாம்... என்பதுதான் வருத்தமான செய்தி


ரோஸாவசந்த்(3:50:11pm): இது குறித்து தீவிராமாய் ஊடகங்களில் பேசுவதை தவிரா செய்ய அதிகம் எதுவுமில்லை


மூர்த்தி(3:50:18pm): இணைய வேகம் தடை செய்கிறது. தாங்கள் பேசுங்கள். மன்னிக்கவும். காத்திருக்கிறேன்.


ஷைலஜா(3:50:26pm): எங்கே பத்ரி கொழும்புவிற்கா


ரோஸாவசந்த்(3:50:28pm): அரசாங்கம், உல்கைலேயே கொடிஉயi


பத்ரி(3:50:29pm): இந்த நேரத்தில் நடக்கும் தேவையற்ற அரசியல் மிகவும் வருத்தம் தருகிரது


ரோஸாவசந்த்(3:50:31pm): ஜந்து


பத்ரி(3:50:33pm): ஆம்


ஷைலஜா(3:50:38pm):


ரோஸாவசந்த்(3:50:47pm): இது அ·ரசியலாய் தெரியவில்லை,


ரஜினி ராம்கி(3:50:51pm): லேட்டஸ் அப்டேட்

சீர்காழி பகுதியில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உதவிகள் வந்து சேரவில்லை என்று புகார். சமாதானப்படுத்தி உதவிப்பொருட்களை சேர்க்க அதிகாரிகள் அவசரமாக இன்று காலை சம்பந்தப்பட் ஏரியாக்களுக்கு சென்றிருக்கிறார்களாம்.



பத்ரி(3:51:22pm): நாகையிலிருந்து பாபுவிடம் பேசினேன்... அங்குள்ள எல்லா மக்களுக்கும் உதவித்தொகை அரசிடமிருந்து வந்துசேர்ந்து விட்டது என்றார்


பத்ரி(3:52:06pm): சொல்லப்போனால் கடந்த மூன்று மாதங்களில் இறந்த சிலரது பெரையும் சுனாமியில் இறந்தவர்கள் என்று சேர்த்து அவர்களுக்குமாக சிலர் உதவித்தொகை வாங்க முயற்சி செய்கின்றனர் என்றும் சொன்னார்


பத்ரி(3:52:39pm): மீனவர்களே இல்லாத சிலரும், மீன்வாங்கப்போனபோது இறந்துவிட்டார் என்று சொல்லி பணத்தைப் பெற முயற்சை செய்கின்றனராம்


ரோஸாவசந்த்(3:53:00pm): இதெல்லாம் நடக்க கூடியதுதான்


ரோஸாவசந்த்(3:53:17pm): எதிர்கொள்ளும்போது எரிச்சலை கிளப்பும்


பத்ரி(3:53:29pm): ஆனால் நேரடியாக பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் ஒரு வகையில் நிவாரணம் போய்ச்சேர்கிறது என்றார். அவர்களும் வீடுகளைத் திரும்பக் கட்டுவது பற்றி வேலைகளை ஆரம்பித்து விட்டனர்


ரோஸாவசந்த்(3:53:40pm): அதுவே


பத்ரி(3:53:46pm): இன்று பாபு சென்னை வருகிறார். அவரிடம் மேற்கொண்டு பல விஷயங்களைக் கேட்கிறேன்


மூர்த்தி(3:53:50pm): பிடுங்கியவரை லாபம் என நினைக்கும் சிலர்


அலெக்ஸ் பாண்டியன்(3:53:50pm): கடலூரில் உள்ள ஜெயின் சங்கம் இரும்புப் பெட்டி அளிப்பதை நேற்று டிவியில் காண்பித்தார்கள். இது பலருக்கு இப்போது உபயோகப்படும் ஒரு பொருள்


மூர்த்தி(3:53:51pm): வாருங்கள் அலெக்ஸ்,மீனா


பத்ரி(3:53:55pm): முடிந்தால் அவரையும் இந்த மேடைக்கு அழைத்து வருகிறேன்


ரோஸாவசந்த்(3:54:05pm): நீங்கள் படகு, கட்டுமரங்கள் பற்றி எழுதினீர்கள் பத்ரி..


ரோஸாவசந்த்(3:54:18pm): அது குறித்து செய்ய எதுவும் உண்டா?


பத்ரி(3:54:31pm): ஆமாம். அதுதான் அடுத்த பெரிய விஷயம். நான் பாபுவிடம் அந்த படகு/கட்டுமரங்களை இன்சூர் செய்வது பற்று பேசியுள்ளேன்


பத்ரி(3:54:41pm): இரண்டு விஷயங்களைச் செய்ய முடிவு செய்துள்ளோம்


அலெக்ஸ் பாண்டியன்(3:54:44pm): பலர் கொடுக்கும் துணுமணிகள், பணம், இன்ன பிற சாமான்களை பத்திரமாக வைத்துக்கொள்ள இது உதவும்.


ரோஸாவசந்த்(3:55:10pm): இன்ஸ¥ர் இனி,முதலில் புதிய படகுகள் வேண்டுமல்லவா?


பத்ரி(3:55:20pm): இன்சூரன்ஸ் கம்பெனிகளுடன் பேசுவது, குறைந்த வட்டியில் கடன் பெறுவது - இரண்டையும் நாகை எக்ஸ்னோரா கிளப் வழியாக நடைபெறச் செய்வது


பத்ரி(3:55:25pm): ஆமாம்.


ரோஸாவசந்த்(3:55:32pm): நல்லது


பத்ரி(3:55:33pm): அரசு என்ன செய்யப்போகிறது என்று தெரியவில்லை


ரோஸாவசந்த்(3:55:43pm): நாம் செய்யகூடியது ஏதாவது உண்டா?


நம்பி(3:56:02pm): படகுக எவ்வளவு ஆகும்?


அலெக்ஸ் பாண்டியன்(3:56:08pm): இன்றைக்கு சுமத்ராவில் அதிகாலை மறுபடியும் பூகம்பம் என்று ஒரு செய்தி.. இதனால் ஏதேனும் பாதிப்பு உண்டா ?


மூர்த்தி(3:56:13pm): வெளிநாட்டில் இருக்கும் நாம் பண உதவி செய்யலாம்@ரோஸா


ரோஸாவசந்த்(3:56:17pm): பெருசு என்று மட்டும் தெரியும்[


பத்ரி(3:56:23pm): இப்பொழுதைக்குத் தெரியவில்லை. வேண்டுமானால் நாம் சிலர் சேர்ந்து பணம் சேர்த்து சிலருக்கு வட்டியில்லாக் கடன் முறையில் படகுகள் வாங்க வைக்கலாம்


ரோஸாவசந்த்(3:56:36pm): நல்ல ஐடியா?


மூர்த்தி(3:56:42pm): இங்கு செய்திகள் இல்லை@அலெக்ஸ்


பத்ரி(3:56:48pm): மோட்டார் படகு ரூ. 1 லட்சம்


பத்ரி(3:56:51pm): அவ்வளவுதான்


நம்பி(3:56:55pm): பத்ரி, இது நல்ல ஐடியாவாக படுகிறது


ரோஸாவசந்த்(3:56:58pm): ஆனால் கொஞ்சம் ஜாக்கிரதை தேவை


பத்ரி(3:57:18pm): ஆமாம். எது செய்தாலும் உள்ளூர் ஆசாமிகள் - உள்ளூர் தொண்டு நிறுவனங்கள் வழியாகச் செய்ய வேண்டும்


உஷா(3:57:21pm): பாங்க், கூட்டுறவு சங்கங்கள் உதவ முன்வரவில்லையா பத்ரி


பத்ரி(3:57:53pm): வங்கிகள், கூட்டுறவுச் சங்கங்கள் எப்பொழுதுமே மீனவர்களை கடனுக்கு அப்பாற்பட்டவர்களாகவே கருதுகின்றன


ரோஸாவசந்த்(3:58:09pm): மீனிங், திரும வராது என்ற·அ?


பத்ரி(3:58:10pm): அவர்களும் பிறரிடம் வட்டிக்குக் கடன்வாங்கியே படகுகளை வாங்குகின்றனர்


பத்ரி(3:58:18pm): அப்படித்தாண் வங்கிகள் னினைக்கின்ற


ரோஸாவசந்த்(3:58:21pm): அண்


பத்ரி(3:58:24pm): ஆனால் அது முட்டாள்தனம்


ரோஸாவசந்த்(3:58:30pm): ஆமாம்


உஷா(3:58:36pm): அநியாய வட்டி


மூர்த்தி(3:59:07pm): கார்டியன் கேட்பார்கள்


பத்ரி(3:59:12pm): ஆனால் மேலிடத்திலிருந்து - சிதம்பரம் ஆணையிட்டால் கடன் கொடுப்பதில் எந்தத் தொல்லையும் இருக்காது


ரோஸாவசந்த்(3:59:13pm): எந்த ஒரு திட்டமும் சிலறால் தவறாய் பயன்படுத்தபடும், அதை வைத்து எளிதான முடிவுக்க வருவதே முட்டாள்தனம்


ரோஸாவசந்த்(3:59:35pm): அரசாங்கம் இலவசாமாய் செய்வதில்லையா எதுவும்


பத்ரி(3:59:43pm): இதுவரை தமிழக அரசியல்வாதிகள் நேரடியாக இதுபற்றி சிதம்பரத்திடம் பேசவில்லை. நான் இதுவரை பேப்பரில் எதையும் பார்க்கவில்லை


பத்ரி(3:59:58pm): அரசு மீன்வலைகளைத் தருவதாகச் சொல்லியுள்ளது


மூர்த்தி(4:00:02pm): ப.சி அவர்களும் பிரதமர் மற்றும் மூத்தவர்கள் சொல்படிதானே நடக்க முடியும்


மூர்த்தி(4:00:20pm): ஆனால் முயன்றால் முடியாததில்லை


பத்ரி(4:00:37pm): இல்லை மூர்த்தி... இதெல்லாம் நிதி அமைச்சர் னிச்சயமாக தானாக முடிவெடுக்கக் கூடிய ஒன்று. ஆனால் அவர் மன்மோகன் சிங்கிடம் பேசுவார்...


மூர்த்தி(4:00:48pm): முக்கியமான சில அரசியல்வாதிகள் மக்கள் எதிர்பார்த்த அளவுக்கு குரல் கொடுக்கவில்லை


பத்ரி(4:01:02pm): இப்பொழுது விவசாயத்துக்கென கடன் கொடுக்கிறார்கள் அல்லவா, அதுபோல


உஷா(4:01:10pm): பத்ரி, மீனவர்களில் நிறைய பேர்கள் கிறிஸ்துவர்களாய் இருப்பார்கள். அவர்கள் சமய அமைப்பு ஏதாவது?


பத்ரி(4:01:22pm): ஆமாம். முக்கியமாக தமிழக அரசியல்வாதிகளிடமிருந்து குறிப்பான எதிர்பார்ப்புகள் எதுவும் வரவில்லைh


பத்ரி(4:01:31pm): மீனவர்கள் சங்கம் உள்ளது


ரோஸாவசந்த்(4:01:45pm): சிலவற்றை கோரிக்கையாக தொடர்ந்து முன் வஈபது அவசியம், சிலைருக்கும்%ஆவது பலன்


பத்ரி(4:01:47pm): ஆனால் இப்பொழுதைக்கு எந்த வகையில் இயங்கக் கூடிய நிலையில் உள்ளது என்று பார்க்க வேண்டும்


மூர்த்தி(4:01:52pm): மீனவர்கள் சங்கம் மாதாந்திர கூட்டம் நடத்தும்


உஷா(4:02:10pm): பத்ரி, நான் சொல்வது பணம், பொருள் உதவி செய்ய?


பத்ரி(4:02:16pm): நான் என் பதிவில் எழுதியதுபோல உடைந்து வீணாகப் போன போட்களின் மதிப்பு ரூ. 120 கோடிகள் இருக்கலாம்


மூர்த்தி(4:02:18pm): நிதி நிலைமை அந்த அளவுக்கு இருக்கும் என எதிர்பார்க்க முடியாது


ரோஸாவசந்த்(4:02:48pm): சுனாமி நிதி கலெகஹ்ச்ன அதைவிட அதிகம்


பத்ரி(4:02:56pm): ரூ. 120 கோடி போட்களை மீண்டும் கொண்டுவருவது அரசு உதவியில்லாவிட்டால் னடப்பது சாத்தியம் அல்ல


அலெக்ஸ் பாண்டியன்(4:03:11pm): தமிழக அரசு கேட்டிருக்கும் 4800 கோடி - இது யார் மூலமாக இவர்களுக்குச்ச் சேரும் - கலெக்டர் ?


ரோஸாவசந்த்(4:03:12pm): அர்சால் சாத்தியமே


அலெக்ஸ் பாண்டியன்(4:03:25pm): தாசில்தார் ? அல்லது கழக கண்மணிகளா ?


பத்ரி(4:03:29pm): இந்த ரூ. 120 கோடி போட்கள் ஒன்று சேர்ந்து ஒரு வருடத்துக்குப் பெறும் பணம் கிட்டத்தட்ட ரூ. 300 கோடி இருக்கும்


ரோஸாவசந்த்(4:03:33pm): இதை கோரிகையாக்க வேண்டும்ம், அட ஓட்டுகூட கிடைக்குமே\


ரஜினி ராம்கி(4:03:37pm): பத்ரி, கடலுக்கு அருகாமையில் குடிசைகள் இருக்கக்கூடாது என்று எல்லோருமே சொல்ல தயங்குவது ஏன்?


பத்ரி(4:03:46pm): இத்தனையும் தமிழகப் பொருளாதாரத்திலிருந்து அடுத்த வருடம் இல்லாமல் போகும்.


ரோஸாவசந்த்(4:03:50pm): வேறு இடமும் வேண்டுமல்லன்வா


மூர்த்தி(4:04:13pm): தனியாக கட்டிக் கொடுத்தால் நல்லது


பத்ரி(4:04:17pm): ராம்கி: நாகையைப் பொறுத்தவரை நில அமைப்பு காரணமாகத்தான் இத்தனை இழப்புகள்


பத்ரி(4:04:30pm): திடீரென வேறு இடத்துக்குப் போ என்று எப்படிச் சொல்லமுடியும்?


மூர்த்தி(4:04:36pm): ஆனால் அவ்வளவு இடம் அதுவும் ஒரே இடத்தில் வேண்டும்


பத்ரி(4:04:51pm): மேலும் இப்பொழுதுநடந்தது freak accident


பத்ரி(4:05:03pm): அதனால் ஒரேயடியாக ஊரைவிட்டுப் போகமுடியுமா?


ரஜினி ராம்கி(4:05:14pm): திரும்பவும் கடலுக்கு பக்கத்திலேயே குடிசையை போட்டு உட்கார்ந்து கொள்கிறார்களே... கடலூரில் அப்படித்தான் நடக்கிறது.


ரோஸாவசந்த்(4:05:26pm): மீனவர்களும் சகஜமான உடன் பழிய இடத்திற்கு திரும்புவதையே விரும்புவர்


அலெக்ஸ் பாண்டியன்(4:05:26pm): பல வயல்கள் - கடல் நீர்/மண் சேர்ந்து இனி சில வருடங்களுக்கு பயிர்செய்ய முடியாதாமே ?


பத்ரி(4:05:28pm): ராம்கி: யோசித்துப் பாருங்கள். வேறென்ன செய்வது?


ரோஸாவசந்த்(4:05:49pm): மேலும் நமது சமூக அமைப்பு அப்படி


ரஜினி ராம்கி(4:06:02pm): பத்ரி, கண்பார்வை குறைவு வரும் என்று சொல்கிறார்களே.. அது பற்றி விபரம் உண்டா?


பத்ரி(4:06:04pm): மீனவர்களின் சொத்து - படகு, வலை ஆகியவற்றை எங்கு விட்டுச்செல்ல முடியும்? கடற்கரையில்தானே?


ரோஸாவசந்த்(4:06:06pm): வேறு இடத்தில் கூட்டமாய் ஸெட்டிஉலாவது சாத்தியமில்லை


பத்ரி(4:06:27pm): கடற்கரையில் அதை விட்டுவிட்டு ரெண்டு மைல் தள்ளி எப்படி வசிக்க முடியும்? படகுகளுக்கு பூட்டா போடமுடியும்?


ரோஸாவசந்த்(4:06:28pm): அங்கேயே பாதுகாப்பாய் இருக்கநடவடிக்கைகள் எடுக்க முயற்சிக்க்லாம்\


அலெக்ஸ் பாண்டியன்(4:06:38pm): இங்கெல்லாம் தூர் (?) எடுத்து அவ்விளைநிலங்களை பயிர்நிலங்களாக்க சாத்தியமா ?


பத்ரி(4:06:40pm): ஆம். அங்கேயே பாதுகாப்பாக இருக்க முயற்சி செய்யவேண்டும்


ரோஸாவசந்த்(4:06:46pm): அவர்களால் கடலை விட்டு போகமுடியாது


பத்ரி(4:06:53pm): அலெக்ஸ்: அது பெரிய பிரச்னையில்லை. ஒரு வருடத்தில் சரியாகைவிடும்


பத்ரி(4:07:19pm): ராம்கி: கண் பார்வை - பாபுவிடம் விசாரித்ததில் அப்படியன்றும் பெரிய பிரச்னையில்லை என்று தெரிகிறது


பத்ரி(4:07:30pm): ஏதோ "புலனாய்வு" பத்திரிகையில் வந்தது போல


ரோஸாவசந்த்(4:07:38pm): நானும் நேகு தவர கேளிவிபடவில்லை


நம்பி(4:07:52pm): பத்ரி: விளைநிலங்கள் அவ்வளவு எளிதல்ல. நீண்ட காலம் ஆகலாம்.


மூர்த்தி(4:08:05pm): முன்னர் பட்டிணப்பாகத்தில் மீனவர்களுக்கு அரசு அளித்த வீட்டை விற்று(அ)வாடைக்கு விட்டுவிட்டு கடலோரத்தில் கொட்டகை போட்டுக் கொண்டார்கள்


மூர்த்தி(4:08:10pm): முத்துப்பேட்டை போன்று அலையாத்திக் காடுகள் வளர்க்கலாம்


பத்ரி(4:08:11pm): நம்பி: கடலையட்டிய சில நிலங்களில்தான் உப்புத் தண்ணீர் வந்துள்ளது


மூர்த்தி(4:08:14pm): அலையாத்திக் காடுகளுக்கு அலைகளை ஆற்றுப்படுத்தும் தன்மை இருப்பதாகப் படித்தேன்.


பத்ரி(4:08:22pm): அதுவும் மேலாகத்தான்


பத்ரி(4:09:03pm): நாகை போன்ற பகுதிகளில் பல காலங்களாக நரிமணம் பெட்ரோல் எடுப்பதனால் தண்ணீர் மட்டம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது


நம்பி(4:09:41pm): பத்ரி: கோடிக்கரையில் காடுகள் உள்ளன. அங்கு பாதிப்பு எப்படி? பாதிப்பு குறைவு எனில் நாகையிலும் இதை கட்டாயம் யோசிக்க வேண்டும்


மூர்த்தி(4:10:08pm): எனவே அரசு கடலோரங்களில் மரம் வளர்க்க ஆவன செய்யவேண்டும்


பத்ரி(4:10:20pm): பாதிப்பு குறைவுதான் என்று கேள்விப்பட்டேன். நான் அடுத்த மாதம் அங்கெல்லாம்போவேன். பார்த்ததும் எழுதுகிறேன்


அலெக்ஸ் பாண்டியன்(4:10:37pm): கோடியக்கரையில் உள்ள பறவைகள் சரணாலயம் (மற்ற நாட்டுப் பறவைகள் வரும் இடம்).. பாதிக்கப்பட்டதாக ஒரு தினசரியில் படித்தேன்


ரோஸாவசந்த்(4:11:12pm): பத்ரி, நான் ரஜினியிடமும் கேட்டிருக்கிறேன். நீங்களும் குழந்தைகளை தத்து எடுப்பதில் என்ன என்ன சட்டரீதியான பிரச்சனைகள் வர்கூடும் என்று உங்கள் பதிவில் எழுதுங்கள்


மூர்த்தி(4:11:15pm): வேதாரண்யம் பகுதி அவ்வளவாகப் பாதிக்கவில்லை எனப் படித்தேன்


அலெக்ஸ் பாண்டியன்(4:11:45pm): ராம்கி - நீங்கள் சென்ற இடங்களில் பள்ளிகள் தொடங்கப்ப்டு விட்டனவா ?


நம்பி(4:11:58pm): நாகை அளவுக்கு அதை ஒட்டியுள்ள தெற்கு பகுதிகள் பாதிக்கப்படவில்லை என்றே நானும் அறிகிறேன்


இர.அருள்குமரன்(9:41:58pm): நண்பர்களுக்கு ஒரு விண்ணப்பம், தாங்கள் வந்தால் சற்று நேரம் பொறுத்துப் பாருங்கள், சில நேரத்தில் ஒரு நிமிட இடைவெளிக்குள் நாலு பேர் வந்து யாருமில்லை என திரும்பிப்போவது நடக்கிறது. இன்னொன்று வெளியேறும் போது இன்ன (இந்திய) நேரத்துக்கு மீண்டும் வருவதாக இருக்கிறேன் என்று அறிவித்துச் செல்லுங்கள், மற்றவர்கள் உங்களோடு உரையாட அது சந்தர்ப்பம் தரும்


இர.அருள்குமரன்(9:44:27pm): நண்பர் மாலன் கீழ்கண்ட கருத்துக்களை முன்வைக்கிறார்


அன்புள்ள நண்பர்களுக்கு,

இரவு 7 மணிக்கு என்னால் அரங்கிற்கு வர இயலுமா எனத் தெரியவில்லை. எனவே எனது கருத்துக்களையும் யோச்னைகளையும் இங்கு தந்துள்ளேன். சாத்தியப்பட்டால் அருள்குமரன் அவற்றை அரங்கில் வெளியிட்டு விவாதிக்கலாம்.

மூன்று வகையான நிவாரண உதவிகள் தேவைப்படுகின்றன: 1. உடனடித் தேவைகள் 2. நீண்டகாலத் தீர்வுகள்.3. உளவியல் ஆறுதல்கள்
உணவு, மருந்துகள், சில தட்டுமுட்டுச் சாமான்கள் போன்ற உடனடித் தேவைகள் விஷயத்தில் பல அமைப்புக்கள் கவனம் செலுத்தி வருகின்றன. இது போன்ற தேவைகளுக்கு அதிக நிதியும் உழைப்பும் காலமும் தேவையில்லை என்பதால் இதில் பலர் ஆர்வம் காட்டுவது இயல்பே.

மீனவர்கள் கடலுக்குத் திரும்ப தேவைப்படும் சாதனங்கள், (படகுகள், வலைகள், மோட்டர்கள்) பாதுகாப்பான வீடுகள், பழுது பட்ட கட்டுமான அமைப்புக்களை ( சாலைகள் போன்றவை) சீரமைத்தல் ஆகியவை நீண்டகாலத் தீர்வுகள். இதற்குப் பெரும் பணம் தேவை.

மூன்றாவது வகை உதவி உளவியில் ரீதியில் ஆன ஆறுதல்கள். பல்ர் குடும்ப உறுப்பினர்களை கண்ணெதிரே இழந்திருக்கிறார்கள். பல குழந்தைகள் அனாதைகள் ஆகி உள்ளன. இந்த traumaவில் இருந்து மீட்டு அவர்களுக்கு வாழ்வின் மீது நம்பிக்கை ஏற்படுத்துவது பெரும் பணி. இதை நாம் ஏதேனும் வழிகளில் செய்ய முற்படலாம்.

பல் குழந்தைகளுக்கு பாடநூல்கள், விளையாட்டு பொம்மைகள் போன்றவை தேவைப்படுகின்றன. அதை சேகரித்து வழங்க முற்படலா.

குளித்தலைக்கு அருகில் திருப்பராய்த்து



இர.அருள்குமரன்(9:45:29pm): குளித்தலைக்கு அருகில் திருப்பராய்த்துறை என்ற இடத்தில் ராமகிருஷ்ண குடில் (தபோவனம்) என்ற அமைப்பு இருக்கிறது. ராமகிருஷ்ண மடத்தின் ஆதரவில் நடத்தப்படுவது. அங்கு ஆதரவற்ற குழந்தைகளுக்கு உறைவிடம், உணவு, கல்வி, கைத் தொழில் ஒன்றில் பயிற்சி இவற்றை இலவசமாக அளிக்கிறார்கள். சுனாமியில் பெற்றோர்களை இழந்த குழந்தைகளை அடையாளம் கண்டு அந்தக் குழந்தைகளை ராமகிருஷ்ண குடிலில் சேர்க்க முயற்சிக்கலாம். ஒரு குழந்தைக்கு என்ன செலவாகிறது என்று கேட்டு, ஒரு சில குழந்தைகளை +2 வரை படிப்பதற்கான செலவை நம்மில் சிலர் ஏற்றுக் கொள்ளலாம். (அண்மைக்காலம் வரை நான் சென்னையில் உள்ள ஓர் அமைப்பின் மூலம் இரண்டு பெண் குழந்தைகளை + 2 வரை படிக்க, 12 ஆண்டுகள் உதவி செய்து வந்தேன். அதிகம் செலவாகவில்லை)

அந்த தபோவனத்தில் ஒரு சிறிய கணினி மையம் அமைத்துக் கொடுத்து அந்த மாணவர்களுக்கு கணினிப் பயிற்சி அளிக்கலாம்.

அன்புடன்
மாலன்




கருத்துகள்

ROSAVASANTH இவ்வாறு கூறியுள்ளார்…
அடுத்த சந்திப்பு குறித்து முடிவெடுத்து அறிவிக்கவும்! நன்றி.
சாகரன் இவ்வாறு கூறியுள்ளார்…
RosaVasanth,

I've written the following post on 3rd Jan. but i didn't publish. After reading the discussions going on, just thought of publishing.May be of some help.

http://sakaran.blogspot.com/2005/01/blog-post_03.html

- sakaran
ROSAVASANTH இவ்வாறு கூறியுள்ளார்…
சாகரன். தவலுக்கு நன்றி. ட்சுனாமி மீட்பு பணிகள் குறித்து விவாதிக்க புதிய வலைப்பதிவு தொடங்க பட்டுள்ளது. http://relieftsunami.blogspot.com/ அதில் உங்களின் இந்த பதிவை சேர்த்துகொள்ளலாம என்று சொல்லுங்கள். இப்படியே அல்லது எடிட் செய்து உங்கள் விருப்பம் வகையில் இதை இந்த வலைப்பதிவில் பதியலாம். நன்றி!

அதிகம் பார்க்கப்பட்ட பதிவுகள்

கைப்பேசிக்கான முதல் தமிழ் மின்நூல் வெளியீட்டு விழா!

உங்களோட செல்பேசியை இரண்டுல ஒண்ணு பாத்துடுவோமா?

பிரசவத்தில் கணவனின் பங்கு