சுனாமி அரங்க உரையாடல்கள்-3

ஜனவரி 11, 2005 செவ்வாய் அன்று சுனாமி மீட்பு உதவி அரங்கத்தில் நடந்த உரையாடல்கள்

திருமலை(8:24:23am): என்ன முடிவு செய்தீர்கள்?


மூர்த்தி(8:24:28am): ரஜினிராம்கியோடு ஐகாரஸ்,உஷா,சைலஜா இன்னும் பலரும் பாதிக்கப் பட்ட இடங்களுக்கு நேரில் செல்வதாகக் கூறினார்கள்


திருமலை(8:24:44am): உஷா சென்னையில் இருக்கிறா ?


மூர்த்தி(8:24:48am): வரும் 13க்கு மேல் அவர்கள் அங்கு செல்வதாக சொன்னார்கள்


திருமலை(8:24:54am): சரி


மூர்த்தி(8:24:57am): பெங்களூரில் இருக்கிறார்


திருமலை(8:25:04am): குழப்பமாக இருக்கிறது


திருமலை(8:25:15am): இங்கு பெருமளவில் நிதி சேர்கிறது


மூர்த்தி(8:25:19am): யாருமில்லா குழந்தைகளை தத்து எடுப்பது பற்றியும் பேசினோம்


திருமலை(8:25:26am): பல்வேறு தன்னார்வ நிறுவனங்களுக்கு


மூர்த்தி(8:25:30am): ஆமாம் நிதி முக்கிய தேவைதான்


மூர்த்தி(8:25:44am): அது சரியாகப் பயன்படுத்தப் பட்டால் மிக நன்று


மூர்த்தி(8:25:55am): பத்ரியும் கலந்துகொண்டார் நேற்று


மூர்த்தி(8:26:08am): இலங்கை நிலவரங்கள் பற்றியும் பேசினோம்


திருமலை(8:26:11am): அதை யாருக்கு எங்கு அளிப்பது என்பதில் பல குழப்பங்கள் நிலவுகின்றன


மூர்த்தி(8:26:22am): பணத்தையா?


மூர்த்தி(8:26:34am): பத்ரிக்கோ அல்லது ராம்கிக்கோ அனுப்புங்கள்


திருமலை(8:26:48am): அனைத்து நிறுவனங்களிலும் 100 சதவீத மாட்ச்சிங் கிராண்ட் அளிக்கிறார்கள்


மூர்த்தி(8:26:53am): பிகேசிவகுமார் கொடுத்த பெட்சீட் எல்லாம் இனிதான் விநியோகிக்கனுமாம்


மூர்த்தி(8:27:05am): ரஜினி ராம்கி சொன்னார்


மூர்த்தி(8:27:06am): சரி


திருமலை(8:27:21am): அவையெல்லாம் இன்னும் தேவைப்படுகின்றனவா இத்துனை நாட்கள் கழித்தும்?


மூர்த்தி(8:27:43am): இன்னும் சரியான தங்குமிடம் கிடைக்கவில்லை அல்லவா?


திருமலை(8:27:52am): அங்கே இருப்பவர்களுக்குத்தான் தெரியும்


மூர்த்தி(8:27:59am): பள்ளிகள் வேறு திறக்கப்பட்டு விட்டதால் அவர்களின் நிலை கஷ்டம்


திருமலை(8:27:59am): இன்னும் தேவைப் படலாம்


திருமலை(8:28:14am): ஆமாம்


மூர்த்தி(8:28:24am): அதனால் கோயில்கள், மடங்கள், பொது இடங்களில்தானே அவர்கள் தற்போது


மூர்த்தி(8:28:30am): அதனால் தேவைப்படலாம்


திருமலை(8:28:35am): ஆமாம்


திருமலை(8:29:00am): எத்தனை மணிக்கு இங்கு கூடுவார்கள்?


மூர்த்தி(8:29:12am): அது எந்த அளவுக்கு உண்மை என தெரியவில்லை


திருமலை(8:29:28am): ஆமாம் நேசகுமார் தெரிவித்திருந்தார்


மூர்த்தி(8:29:40am): நேற்று நாங்கள் கூடியது சிங்கை நேரப்படி மதியம் 2 மணி இருக்கலாம்


மூர்த்தி(8:29:56am): அருள்குமரனும் இருந்தார்


மூர்த்தி(8:30:06am): நம்பி வந்திருந்தார்


திருமலை(8:30:10am): சரி


மூர்த்தி(8:30:22am): அருள்குமரன் ஆன்லைனில் வந்தால் தொடர்பு கொள்ளுங்கள் அண்ணா


திருமலை(8:30:29am): சரி


மூர்த்தி(8:30:44am): ஆனால் நேற்று கூடிய நேரம் என்றால் உங்களுக்கு தூங்கும் நேரம் என நினைக்கிறேன்


திருமலை(8:30:54am): இப்பொழுது என்ன மணி?


மூர்த்தி(8:31:02am): 8.30காலை


திருமலை(8:31:37am): சரி எங்கள் நேரம் இரவு 9 மணிக்கு நான் வருகிறேன்


மூர்த்தி(8:31:50am): ஒரு கிராமத்தை நம் இணைய நண்பர்கள் தத்து எடுக்கலாம் என்று ராம்கி சொன்னார்


திருமலை(8:31:53am): இப்பொழுது இங்கே மாலை 4.30


மூர்த்தி(8:32:00am): அதனை யோசித்து செய்யவேண்டும்


மூர்த்தி(8:32:20am): அப்புறம் ஒரு பையனை தத்து எடுக்க நிறைய கஸ்டப்பட வேண்டி இருக்கிறதாம்


மூர்த்தி(8:32:26am): அப்படியா...சரி


திருமலை(8:32:34am): ஆமாம் அவ்வளவு எளிதல்ல


திருமலை(8:32:46am): அரசாங்கக் குறுக்கீடுகள் இருக்கும்


திருமலை(8:33:03am): இல்லாவிடில் பிள்ளைகளைத் திருடிச் சென்று விடுவார்கள்


மூர்த்தி(8:33:04am): ராம்கி யாரோ ஒரு பையனை மருத்துவப் படிப்புச் எகவை அவரின் ரஜினிபேன்ஸ் தளம் ஏற்றுக் கொண்டதாக சொன்னார்


மூர்த்தி(8:33:10am): ஆமாம்..


மூர்த்தி(8:33:16am): அது பற்றியும் பேசினோம்


திருமலை(8:33:42am): அரசாங்கம் தேவைப்படும் அத்துனை வேலைகளையும், தேவைகளையும் பட்டியலிட்டு


மூர்த்தி(8:33:58am): தமிழகத்தில் இருப்பவர்களால் நேரில் பார்க்க முடியும்


திருமலை(8:34:00am): அவற்றை பல்வேறு நிறுவனங்களுக்குப் பிரித்து வழங்க வேண்டும்


மூர்த்தி(8:34:06am): ஆமாம்


மூர்த்தி(8:34:16am): அதனால் நன்கு யோசித்து செயல்படவேண்டும்


திருமலை(8:34:16am): அவர்கள்தான் அது போன்ற பணிகளை ஒருங்கிணைக்க முடியும்


மூர்த்தி(8:34:20am): ஆமாம்


மூர்த்தி(8:34:35am): நாம் தகவல் சாதனங்கள் மூலம்தானே உணர்கிறோம்


மூர்த்தி(8:34:54am): அதனால் பத்ரி,ராம்கியை முன்னிறுத்தி உதவிகள் தொடரட்டும் என பேசினோம்


திருமலை(8:34:54am): ஒரு உதாரணத்துக்கு ஒரு 1000 தேவைகள் இருப்பதாக வைத்துக் கொண்டால் இருக்கும் தன்னார்வலர்கள் அனைவரும் ஆளுக்கொன்றாக எடுத்து


மூர்த்தி(8:35:00am): ம்


திருமலை(8:35:01am): சரியாகச் செய்ய முடியும்


மூர்த்தி(8:35:05am): ஆமாம் அதே


திருமலை(8:35:19am): இல்லாவிடில் குழப்பமும் செய்வவனச் செய்தலுமே மிஞ்சும்


மூர்த்தி(8:35:22am): பத்ரி இலங்கைக்கு அனுப்பிய மருந்து பொருட்கள் இன்னும் சென்று சேரவில்லையாம்


மூர்த்தி(8:35:37am): அரசாங்கக் கைகளில் இருக்கிறதாம் மருந்துகள்


திருமலை(8:35:40am): இலங்கை நம் புரிதலுக்கு அப்பாற்பட்டது


மூர்த்தி(8:35:56am): இன்னும் உதவி தேவைப்பட்டும் அனுப்ப ஐடியா தெரியாமல் பேசினார்


திருமலை(8:36:00am): எனக்குத் தெரியவில்லை


மூர்த்தி(8:36:15am): தமிழ் பகுதிகளுக்கு உதவிகள் சரிவர போவதில்லையாம்


திருமலை(8:36:24am): ம்ம்ம்


மூர்த்தி(8:36:40am): கோபி அண்ணானைக்கூட புலிகளின் கட்டுப்பாட்டுக்குச் செல்ல சந்திரிகா தடை விதித்து விட்டாராம்


திருமலை(8:36:56am): படித்தேன்


மூர்த்தி(8:37:00am): மீறிப் போனால் ஜெயலலிதா மாதிரி கைது செய்தாலும் செய்வார்


மூர்த்தி(8:37:06am): பாவம் மக்கள்


மூர்த்தி(8:37:22am): இடையில் புலி,அரசு அரசியல் சண்டை


திருமலை(8:37:53am): தமிழீழத்தைப் பொருத்தவரை ரெட் க்ராஸ் போன்ற அமைப்புகளை அனுமதித்தால் அவர்களுக்கு நேரடியாக உதவி அனுப்பலாம்


திருமலை(8:38:22am): இங்குள்ள பலருக்கும் யாருக்கு அனுப்புவது என்பதில் சந்தேகங்களுகும் குழப்பங்களும் உள்ளன


மூர்த்தி(8:38:27am): டி.ஆர்.ஓ என்ற அமைப்புக்குத் தானே பத்ரி அனுப்பினார்


மூர்த்தி(8:38:46am): அது அரசு புலிகள் சாரா தன்னார்வ தொண்டு அமைப்பு


திருமலை(8:38:55am): அது புலிகளின் ஒரு அமைப்பு என்ற சந்தேகம் பலரையும் உதவி செய்யத் தயங்க வைக்கிறது


மூர்த்தி(8:39:14am): அப்படித்தான் பலரும் சொல்கிறார்கள்


மூர்த்தி(8:39:28am): ஆனால் அதில் சிங்கள உறுப்பினர்களும் இருக்கிறார்கள்


திருமலை(8:39:50am): அதனால்தான் அங்கு சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட ரெட் கிராஸ் போன்ற அமைப்புகள் அங்கு சென்று செயல் பட வேண்டும்


மூர்த்தி(8:39:57am): புலிகளின் நடவடிக்கைகளில் அவர்கள் தங்களை பிணைத்தது இல்லை என படித்தேன்


மூர்த்தி(8:40:02am): ஆமாம்


மூர்த்தி(8:40:14am): செஞ்சிலுவைச் சங்கம் இருக்கிறதா என தெரியவில்லை


திருமலை(8:40:21am): இருக்கலாம், நமக்குத் தெரிவதில்லை, வதந்திகள்தான் அதிகம் வருகின்றன


மூர்த்தி(8:40:46am): அப்படியே அதனிடம் நாம் அளித்தாலும்கூட சென்று சேரும் உதவிகள் யாவும் அரசிடம்தான் போகிரதாம்


மூர்த்தி(8:41:01am): தமிழ்ப் பகுதிகளுக்கு செல்வதில்லையாம்


திருமலை(8:41:23am): குழப்பமான நிலைமைதான்


மூர்த்தி(8:41:28am): ஆமாம்


மூர்த்தி(8:41:46am): போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுனாமியின் தாக்கம்


மூர்த்தி(8:41:52am): தமிழகம் பரவாயில்லை


திருமலை(8:41:53am): சரி மூர்த்தி, மீண்டும் பிறகு கலந்து கொள்கிறேன்


மூர்த்தி(8:42:09am): உதவி நிதிகள் அரசிடமிருந்து சென்று சேரத் தொடங்கி உள்ளதாம்


திருமலை(8:42:09am): இங்கு நாங்கள் எடுத்துவரும் நடவடிக்கைகளை விளக்குகிறேன்


மூர்த்தி(8:42:13am): சரி


பிகேசிவகுமார்(10:36:16am): அருள்குமரன் வலைப்பதிவில் நேற்று காலை விவரங்கள் உள்ளன


ஐயப்பன்(10:36:33am): ஓ உரல் ??


பிகேசிவகுமார்(10:37:08am): http://www.shockwave-india.com/tamil/blog/


நேச குமார்(10:52:44am): டிடானியம், இல்லிமேட் போன்ற கனிமங்களை கொண்டுவந்து நாகப்பட்டினம் பகுதிகளில் அடித்துள்ளது சுனாமி, டன் கணக்கில்


பிகேசிவகுமார்(10:53:16am): எங்கிருந்து இவற்றை எடுத்துக் கொண்டு வந்தது


நேச குமார்(10:53:20am): அங்கு செவைபுரிந்து வரும் எனது நன்பர் கூறியிருந்தார்


பிகேசிவகுமார்(10:53:23am): ஏதும் தொழிற்சாலைகள் அருகில் உள்ளனவா


நேச குமார்(10:53:26am): இரண்டாவது அலை அடித்தபோது கறுப்புக்கலரில் குழம்பை கொண்டுவந்து


நேச குமார்(10:54:00am): அடித்தது, அதில்தான் கண்பார்வை பாதிக்கப் பட்டது என்று


பிகேசிவகுமார்(10:54:08am): அல்லது, இவை பூகம்ப லாவாவிலிருந்து வந்தனவா


நேச குமார்(10:54:14am): கடல் களிமண் அது, அதில் இந்த மினரல்கள்


பிகேசிவகுமார்(10:54:24am): gotcha


நேச குமார்(10:54:27am): இல்லை, கடலுக்கு அடியாழத்திலிருந்து புரட்டியதால்


பிகேசிவகுமார்(10:54:47am): நன்றி. புரிந்தது.


பிகேசிவகுமார்(10:54:57am): கேட்க கஷ்டமாக இருக்கிறது


நேச குமார்(10:55:02am): இந்த மினரல்கள் கண்ணுக்குள் போவதால் இப்படிப் பட்ட பாதிப்புகள் நிகழ்ந்துள்ளதா எனத் தெரிய வில்லை


பிகேசிவகுமார்(10:55:09am): ம்ம்ம்


நேச குமார்(10:55:25am): நேரில் பேசும்போது கேள்விப்பட்ட விஷயங்கள் ரொம்பவே கஷ்டப் படுத்தின


நேச குமார்(10:55:58am): நாகூர் , சாமந்தாம் பேட்டையில் பணிபுரிந்து வருகின்ற சிலரிடம் நேற்றுப் பேசினேன்


நேச குமார்(10:57:38am): அமிர்தானந்தமயி ஆசிரமத்துக்காரர்கள் மிகவும் சிறப்பாக பணிபுரிகிறார்கள் என்றார்கள், 7000 பேருக்கு மூன்று வேளை சாப்பாடு போடுகிறார்களாம்


நேச குமார்(10:58:05am): ஷெல்டர்ஸ் கட்டிக் கொடுக்கும் பணியையும் நேற்று துவக்கி இருக்கிறார்கள்


பிகேசிவகுமார்(10:58:33am): ஓ. அப்படியா


நேச குமார்(10:58:53am): ஆம், எல்லோரும் புகழ்ந்து சொன்னார்கள்,


பிகேசிவகுமார்(10:59:02am): பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுபவர்கள் யாராக இருந்தாலும் பாராட்ட வேண்டும்


நேச குமார்(10:59:02am): நல்ல சுத்தமான வேலை


நேச குமார்(10:59:25am): ஆம், ஜெயமோகன் குறிப்பிட்டிருந்தது பொலவே


நேச குமார்(10:59:46am): முஸ்லீம் அமைப்பு ஒன்றும் நல்ல பணி செய்துள்ளது


பிகேசிவகுமார்(11:00:19am): எங்கே நாகப்பட்டினம் பகுதியிலா?


நேச குமார்(11:00:45am): முதலில் கொஞ்சம் மனவருத்தம் இருந்திருக்கிறது, கிறிஸ்துவ அமைப்புகள் பாரபட்சமாக செயல்பட்டன என்று. ஆனால் அவர்கள் நிலையையும் பார்க்க வேண்டும். ஏராளமான டூரிஸ்டுகள் வேளாங்கன்னியில் உ


நேச குமார்(11:01:10am): நாகை மற்றுமல்லாது குளச்சல் பகுதியிலும்


பிகேசிவகுமார்(11:01:32am): உங்களுக்குக் கிடைத்த தகவல்களை ஒரு மடலாகக் குழுமங்களில் போடுங்களேன்


ஐயப்பன்(11:06:45am): நேசகுமார் இருக்கீங்களா


ஐயப்பன்(11:07:11am): இங்க சொன்னதை நீங்க மரத்தடில கட்டுரையா எழுதலாமே



'வாசன்' வருகை [Tue Jan 11 11:10:47 GMT+0800 2005]

நேச குமார்(11:11:06am): எழுதுகிறேன் ஐயப்பன், முதலில் எல்லா விவரங்களையும் கேட்டு, என்னளவில் எல்லாவற்றையும் ஒன்றுக்கு இரண்டுமுறை உறுதிப்படுத்திக் கொண்டு பின் எழுதுகிறேன்


இர.அருள்குமரன்(12:49:16am): இங்கே இந்திய நேரம் இரண்டு மணியளவில் கூட்டம் கூடும் என எதிர்பார்க்கப் படுகிறது. நண்பர்கள் அந்நேரம் வரவும்


நேச குமார்(9:44:17pm): கண் பிரச்சினை பற்றித் தெரிவித்த நன்பரிடம் மீண்டும் இன்று பேசினேன். அது கிருமிகளால் தான் நிகழ்ந்துள்ளது என்றும், சரியாகிவிடும் என்றும் சோதித்த டாக்டர்கள் தெரிவித்தனர் என்று கூறினார். அநேகமாக எதாவது ஐ இன்·பக்ஷன் போலிருக்கிறது. கண் பார்வை மங்கலாகத் தெரியவே பார்வையே போய்விட்டது என்று சிறுவர்கள் தெரிவித்திருக்கின்றனர் போலிருக்கிறது.

இதற்கிடையில், அவர்கள் எல்லோம் கறுப்புக் கலரில் மண் அடித்தது என்று தெரிவித்ததையும், இன்று செய்தியில் டன் கணக்கில் டைடானியம், இல்லிமேட் போன்ற மினரல்கள் நாகப்பட்டினம் பகுதிகளில் சுனாமியால் கடலின் அடியாழத்திலிருந்து கொண்டு வந்து போடப்பட்டுள்ளது என்பதையும் கண்டு, நியூக்ளியர் மெடிசின் தெரிந்த நன்பர் ஒருவரை தொடர்பு கொண்டு கேட்டேன்.

அவர் அதற்கு, டைட்டானியம் கண்ணுக்குள் போயிருந்தாலும் பிரச்சினை இல்லை. மண் உறுத்தலால் தான் பாதிப்பு ஏற்படுமே தவிர, மற்றபடி ஆபத்து எதுவுமே இல்லை என்று தெரிவித்தார்.




கருத்துகள்

அதிகம் பார்க்கப்பட்ட பதிவுகள்

கைப்பேசிக்கான முதல் தமிழ் மின்நூல் வெளியீட்டு விழா!

உங்களோட செல்பேசியை இரண்டுல ஒண்ணு பாத்துடுவோமா?

பிரசவத்தில் கணவனின் பங்கு