சுனாமி அரங்க உரையாடல்கள்-1

ஜனவரி 9, 2005 ஞாயிறு அன்று சுனாமி மீட்பு உதவி அரங்கத்தில் நடந்த உரையாடல்கள்

இர. அருள் குமரன்(3:05:13pm):

நோக்கம்: சுனாமிப் பேரலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலகளாவிய தமிழர்கள் அனைவரும் உதவ, உரிய நபர்களோடு கலந்தாலோசிக்க வசதியாக இந்த அரங்கம் நிறுவப்படுகிறது. இணையத்தமிழர்கள் ஒன்று கூடி தங்களின் பங்களிப்பை சரியான திசையில் செலுத்த இந்தத் தொடர்புச்சேவை உதவும் என நம்புகிறேன்.இர. அருள் குமரன்(3:05:41pm): இந்தப் பேரிடரிலிருந்து மீள நம்மால் இயன்ற அனைத்து வழிகளிலும் முயற்சிப்போம். நம்முடைய முயற்சிகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரடியாக சென்று சேர்கிறதா என்பதை உறுதிப்படுத்த தமிழகத்திலும் இலங்கையிலும் உள்ள இணையத்தமிழர்கள் உதவ வேண்டுகிறேன்


இர. அருள் குமரன்(3:07:03pm): ஜனவரி ஒன்பதாம் தேதி சிங்கை நேரப்படி மாலை 6:01 மணி (இந்திய நேரம், மதியம் 3:31) முதல் இந்த சேவை தொடங்கும்அருள்(5:58:38pm): இணையத்தமிழர்களுக்கு வணக்கம்


இர.அருள்குமரன்(5:59:57pm): சுனாமி மீட்பு உதவி அரங்கம் உங்களுக்காக திறந்திருக்கிறது


இர.அருள்குமரன்(6:04:11pm): இன்னும் மற்ற நண்பர்களெல்லாம் வரவேண்டும்


மீனா(6:04:14pm): வணக்கம் நன்றி அருள்குமரன்


மீனா(6:04:44pm): உங்களின் இந்த சேவை மிகவும் உதவி


இர.அருள்குமரன்(6:05:24pm): நல்லது. நீங்கள் ChatAlertஐ இறக்கி இயக்கிவிட்டீர்களா?


இர.அருள்குமரன்(6:06:05pm): மலேசியாவில் எல்லாம் சுனாமி அதிர்ச்சியிலிருந்து மீண்டுவிட்டார்களா?


மீனா(6:07:34pm): ஆம் அதிலிருந்து மீண்டு இப்பொழுது எல்லாஇடங்களிலும் மீஈன்டும் சீரமைப்பு வேலைகள் நட்ந்து கொண்டிருக்கிறது


இர.அருள்குமரன்(6:07:43pm): சரி


மீனா(6:08:48pm): அதி வேகமாக எல்லோரும் தங்களால் ஆன உதவிகளை ச்ய்து வருகிறார்கள்


இர.அருள்குமரன்(6:09:00pm): நல்லது


மீனா(6:09:44pm): மலேசிய நண்பன் மூலம் உதவி நிதி படு வேகமாக சேர்கிறது


இர.அருள்குமரன்(6:10:16pm): பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்க்க வாய்ப்பு கிடைத்ததா?


மீனா(6:10:39pm): இல்லை


மீனா(6:11:06pm): ஏன் என்றால் நாங்கள் இருப்பது கோலலம்பூர்


இர.அருள்குமரன்(6:11:15pm): ஓ சரி சரி


மீனா(6:11:29pm): பினாங்கில்த் தான்


மீனா(6:11:40pm): அதிக சேதம்


இர.அருள்குமரன்(6:11:53pm): கேள்விப்பட்டேன்


மீனா(6:12:08pm): தொலைக் காச்சியில் பார்த்ததோடு சரி


மீனா(6:12:43pm): வார்த்தைகள் தவறாக அடிக்கிறேன்


இர.அருள்குமரன்(6:12:58pm): பரவாயில்லை


மீனா(6:13:18pm): எங்கே கஜன்?


மீனா(6:14:07pm): ஆமாம் அருள்குமரன் எங்கே பார்த்தாலும் துணிகள்தான் அதிகம்...


மீனா(6:14:27pm): சேர்கிறது வேண்டாம் என்கிறார்கள்


இர.அருள்குமரன்(6:14:45pm): ஆம், இப்போது தேவை அது அல்ல


மீனா(6:15:51pm): சில இடங்களில் சேலைகள் வேண்டியிருக்கிறது என்று..அப்படியா?


இர.அருள்குமரன்(6:16:46pm): தமிழகத்தில் ரஜினிராம்கி நிறைய இடங்கள் சுற்றியிருக்கிறார். அவரிடம் கேட்டால் தேவை என்ன என்று தெளிவாகத் தெரிந்துவிடும்


மீனா(6:16:54pm): எது அவசியம் தேவை என்பது சரிவரத்தெரிந்தால் நல்லது இல்லையா?


இர.அருள்குமரன்(6:17:00pm): ஆம்


மீனா(6:17:07pm): ஆமாம் நானும் படித்தேன்


இர.அருள்குமரன்(6:17:24pm): இன்னும் பலரை இங்கே எதிர்பார்க்கிறேன்


மீனா(6:18:46pm): இன்னும் சிறிது நேரத்தில் வருவார்கள்


இர.அருள்குமரன்(6:19:09pm): காத்திருப்போம்


மீனா(6:19:47pm): இன்று விடுமுறையல்லவா? அதான்


இர.அருள்குமரன்(6:20:27pm): ஆம், நாளை நிறைய பேரை எதிர்பார்க்கலாம்


சுந்தரவடிவேல்(6:23:52pm): சிங்கையில் பெரும் பாதிப்பில்லை இல்லையா?


இர.அருள்குமரன்(6:23:58pm): உங்களில் தமிழகத்தில் இருப்பவர்கள் யார்யார்


சுந்தரவடிவேல்(6:24:13pm): நானுமில்லை. ரோசாவுமில்லை


ரோஸாவசந்த்(6:24:18pm): நான் இன்று ரஜினி ராம்கி, பாபுவிடன் தொலைபேச நினைத்தேன் விடுபட்டுவிட்து


ரோஸாவசந்த்(6:24:31pm): இல்லை, நான் இருப்பது டோக்கியோவில்


இர.அருள்குமரன்(6:24:36pm): ஆமாம் சுந்தரவடிவேல் (சுருக்கி சுவ ன்னு வைச்சுக்கவா?) சிங்கை தப்பிவிட்டது


இர.அருள்குமரன்(6:24:47pm): அப்படியா


மீனா(6:24:53pm): இப்போ சமீபத்தில் ஒரு செய்தி..


இர.அருள்குமரன்(6:25:00pm): சொல்லுங்க மீனா


ரோஸாவசந்த்(6:25:19pm): நேசகுமார் சொன்னது கொஞ்சம் அதிர்சியா இருந்தது.


மீனா(6:25:26pm): பாதிக்கப் பட்டவர்களுக்கு கண்களில் பாதிப்பு வருகிறது என்றூ?


இர.அருள்குமரன்(6:25:27pm): ஆமாம்


ரோஸாவசந்த்(6:25:31pm): ராகாகியில் படித்தேன்.


ரோஸாவசந்த்(6:25:45pm): அதேதான்.


இர.அருள்குமரன்(6:25:52pm): அவரே வந்தாச்சு


சுந்தரவடிவேல்(6:26:00pm): நாகையில் தடுப்பூசி தீவிரமென அறிகிறேன்.


சுந்தரவடிவேல்(6:26:46pm): என்னாச்சு, கண்ணுல?


மீனா(6:26:50pm): உண்மையிலேயே கடல்த் தண்ணி பட்டதனால்த்தானா?


நேச குமார்(6:27:10pm): 15 பேருக்கு கண் தெரியாமல் போய்விட்டது என்றார்


நேச குமார்(6:27:17pm): அப்படித்தான் சொல்கிறார்


மீனா(6:27:22pm): மணல் ஏதும் கண்ணுக்குள் புகுந்து?


நேச குமார்(6:27:46pm): சரியாய்த் தெரியவில்லை அவர்களுக்கே


இர.அருள்குமரன்(6:27:47pm): மணலானால் காயம் இருக்குமே


நேச குமார்(6:28:09pm): திருச்சிக்கு அனுப்பியிருக்கிறார் கலெக்டர்


இர.அருள்குமரன்(6:28:16pm): சரி


சுந்தரவடிவேல்(6:28:22pm): சில நேரங்களில் கிருமிகளாலுமிருக்கலாம்.


நேச குமார்(6:28:29pm): பல சிறுவர்களுக்கு இப்படி நேர்ந்துள்ளது என்றார்


இர.அருள்குமரன்(6:28:43pm): கொடுமை


சுந்தரவடிவேல்(6:28:52pm): பொன்னுக்குவீங்கி ஆங்காங்கே இருப்பதாகப் படித்தேன்.


நேச குமார்(6:28:57pm): முதலில் டாக்டர்கள் யாருமே அங்கு போகவில்லையாம்


நேச குமார்(6:29:10pm): வேதனையாக இருந்தது


ரோஸாவசந்த்(6:29:14pm): எனக்கு எதுவும் சொல்லதெரியவில்லை. நினைக்க ரொம்ப கஷ்டமாய் இருக்கிறதுய். u


இர.அருள்குமரன்(6:29:16pm): ஆம்


மீனா(6:29:19pm): ச்சே என்னது பிழைத்தும் இப்படியரு கஷ்டம்


நேச குமார்(6:29:21pm): பின்பு நிலைமை முன்னேறியது


நேச குமார்(6:29:42pm): தஞ்சாவூர் கலெக்டர்தான் போய் நிறைய செய்திருக்கிறார்


சுந்தரவடிவேல்(6:30:12pm): சரி நண்பர்களே நான் கிளம்புகிறேன், பின்னொரு முறை வருகிறேன்.


நேச குமார்(6:30:13pm): நாகை கலைக்டரை கோபம் கொண்ட


நேச குமார்(6:30:21pm): சரி சு.வ


இர.அருள்குமரன்(6:31:09pm): நான் இன்னும் சில மடற்குழுக்களில் அறிவித்துவிட்டு வருகிறேன்


ரோஸாவசந்த்(6:31:49pm): இந்த கண்பார்வை விஷயம் குறித்து ஏதாவது துரித நடவடிக்கை உண்டா, நேசகுமார்?


நேச குமார்(6:32:21pm): முந்தா நாள் பேசினார்.


ரோஸாவசந்த்(6:32:25pm): அரசு, தனிட்ப்பட தரப்பில்


நேச குமார்(6:32:32pm): அதற்குப் பின் என்ன நடந்தது என்று தெரியாது


ரோஸாவசந்த்(6:32:43pm): யார் பேசினார்?


நேச குமார்(6:32:43pm): அரசு தரப்பில், தஞ்சை கலைக்டர்தான்


நேச குமார்(6:32:51pm): அவர்களை அனுப்பியிருக்கிறார்


மீனா(6:32:51pm): பாதிக்கப் பட்டவர்கள் எல்லோருமே சிறுவர்கள்தானா?


நேச குமார்(6:33:04pm): இல்லை, பெரியவர்களும் உண்டு


நேச குமார்(6:33:35pm): ஒரு ஓ என் ஜி சி இன் ஜினியர், அவரது மூன்று குழந்தைகளும் இறந்து விட்டனர்


நேச குமார்(6:33:51pm): அவருக்கும் இப்போது கண் தெரியாமல் போய்க்கொண்டிருக்கிறது என்றார்


மீனா(6:34:04pm): இது எங்கே நடந்தது


இர.அருள்குமரன்(6:34:18pm): வாங்க நெய்ன்


நேச குமார்(6:34:24pm): அக்கரைப் பேட்டை(நாகபட்டனம்)


நெய்ன்(6:34:24pm): வணக்கம்


ரோஸாவசந்த்(6:34:29pm): வணக்கம்


மீனா(6:34:30pm): வங்க நெய்ன்


நேச குமார்(6:34:34pm): வணக்கம் நெய்ன்


நெய்ன்(6:34:57pm): இப்போதுதான் தலையை நீட்டுகிறேன்


மீனா(6:35:07pm): நீங்கள் எங்கிருந்து?நெய்ன்(6:35:45pm): துபாய் !!


நேச குமார்(6:38:02pm): நல்ல முயற்சி அருள்குமரன்


இர.அருள்குமரன்(6:38:19pm): ஒரு குறிப்பிட்ட நேரம் வைத்துக்கோள்வோமா?


நேச குமார்(6:38:24pm): தொடர்ந்து செய்து கொண்டு வருகிறீர்கள் இந்த மாதிரி


நேச குமார்(6:38:29pm): ஆம்.


இர.அருள்குமரன்(6:38:37pm): எதோ என்னால் முடிந்தது


நேச குமார்(6:38:48pm): இரண்டு நேரங்கள் வைத்துக் கொண்டால் நல்லது


ரோஸாவசந்த்(6:38:54pm): என் தொடர்பு இருந்துகொண்டே இருக்கும் . நான் வந்துபோய் கொண்டு இருப்பேன்


இர.அருள்குமரன்(6:39:00pm): நீங்களே சொல்லுங்களேன்


நேச குமார்(6:39:03pm): பல டைம் ஜோன்களில் இருப்பவர்களுக்கும் வசதியாக இருக்கும்


நேச குமார்(6:39:10pm): இருக்கிறமாதிரி


இர.அருள்குமரன்(6:39:23pm): இந்திய நேரமாக


நேச குமார்(6:39:55pm): இந்திய நேரமென்றால் , மாலையிலும் , நடு இரவிலும் வைத்துக் கொள்ளலாம்


நேச குமார்(6:40:05pm): என்பது எனது அபிப்ராயம்


ரோஸாவசந்த்(6:40:13pm): இந்திய நேரமாய் இரவில் 11.00 மணிவரை எனக்கு ஒகே!


நேச குமார்(6:40:14pm): என் வசதியை உத்தேசித்துச் சொல்கிறேன்


ரோஸாவசந்த்(6:40:23pm): அது எனக்கு 2மணிவரை


இர.அருள்குமரன்(6:40:31pm): சரி இந்திய நேரம் இரவு 7 மற்றும் 10


இர.அருள்குமரன்(6:40:37pm): ஒத்துவருமா?


ரோஸாவசந்த்(6:40:50pm): எனக்கு ஒத்துவரும்., மற்றவர்கள் சொல்லட்டும்


இர.அருள்குமரன்(6:41:04pm): மீனா உங்களுக்கு?


நேச குமார்(6:41:40pm): நான் போய் வருகிறேன் அகு, ரோவ, மீனா


ரோஸாவசந்த்(6:41:45pm): ஆனால் இந்தியாவில் மீட்பு பணி தொற்ற்புள்ளவர்கள் வந்து சேரும்போதே இதற்கு பயன் இருக்கும் என்று தெரிகிறது


ரோஸாவசந்த்(6:41:54pm): சரி, நேசகுமார்


மீனா(6:41:58pm): முக்கியமாக இந்தியாவில் உள்ளவர்களின் வசதிப்படி


ரோஸாவசந்த்(6:42:04pm): ஆமாம்


ரோஸாவசந்த்(6:43:24pm): நான் பொதுவாய் இதை கவனிப்பதற்கே வந்துள்ளேன். வேற்று நாட்டில் இருப்பதால் சொல்ல அதிகம் இல்லை.


ரோஸாவசந்த்(6:43:53pm): அலோசனைகள் அளிக்கபடும்போது என்னால் முடிந்ததை செய்ய முடியும்.


மீனா(6:43:58pm): அவர்களிடம்தான் நாம் நிறைய விஷயங்களைத்தெரிந்து அதன் ஏதும் செய்ய தோதாக இருக்கும்


மீனா(6:44:17pm): அதன்படி


மீனா(6:46:37pm): அருள் அகத்தியரில்,தமிழுலகத்தில் எல்லாம் போட்டிருக்கிறீர்கள் அல்லவா?


மீனா(6:48:31pm): இலங்கை சம்பந்தபட்டவர்களின் வசதிக்கேற்றபடிகூட நேரம் வைத்துக் கொள்ளலாம்


'மரவண்டு' வருகை [Sun Jan 9 18:51:53 GMT-0800 2005]

மரவண்டு(6:52:45pm): வணக்கம் அருள் குமரன்


மரவண்டு(6:53:03pm): மீண்டும் ஒரு முறை உருப்படியான காரியம் :-)


இர.அருள்குமரன்(7:03:04pm): மீண்டும் இந்திய நேரம் இரவு 7:00 மற்றும் 10:00 க்கு சந்திப்போம். வந்து போகும் நண்பர்களிடமும் இதே சேதியை பகிர்ந்து கொள்ளவும்


ரோஸாவசந்த்(7:05:59pm): எல்லாருக்கும் பார்க்கலாம், நன்றி!


இர.அருள்குமரன்(7:23:14pm): நான் பல மடற்குழுக்களுக்கு இந்த அரங்கம் பற்றி எழுதிக்கொண்டிருக்கிறேன்


எஸ்.கே(7:24:46pm): அது சரி, ட்சுனாமியால் இலங்கை தமிழர் பகுதி மிகவும் பாதிக்கப் பட்டிருக்கிறது


இர.அருள்குமரன்(7:25:28pm): ஆம், இலங்கை நண்பர்களை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்


இர.அருள்குமரன்(7:25:51pm): கஜன் ஆரம்பத்தில் வந்து உடனே காணாமல் போய்விட்டார்


எஸ்.கே(7:26:59pm): தமிழ்நாட்டில் மிகவும் குழப்பமாக இருக்கிறது


எஸ்.கே(7:28:08pm): மீனவர்களைப் பற்றி பலவித செய்திகள் வருகின்றன


இர.அருள்குமரன்(7:28:31pm): சொல்லுங்கள் எஸ்.கே


நேச குமார்(7:33:30pm): ஆம். ரொம்ப தன்மானம் மிக்கவர்கள்


நேச குமார்(7:34:03pm): ரிலீ·ப் மெட்டீரியல் டிஸ்ற்றிப்யூஷன் பார்க்கவே ரொம்ப கஷ்டமாக இருந்தது


எஸ்.கே(7:34:09pm): தன்மானத்தைத் தாண்டிய


எஸ்.கே(7:34:17pm): நிலை


நேச குமார்(7:34:32pm): அவர்களை பிச்சைக்காரர்கள் போன்று நடத்தியவிதம், டிவிக்கள் காட்டிய விதம்


இர.அருள்குமரன்(7:34:33pm): நேகு, ஆங்கிலம் தட்டச்ச F2 உபயீகிக்கவும்


எஸ்.கே(7:34:36pm): அவர்களுக்குள் கோஷ்டி


நேச குமார்(7:34:48pm): சரி அகு


இர.அருள்குமரன்(7:35:01pm): ஆமாம் நெகு எனக்கு கூட கஷ்டமாக இருந்தது


நேச குமார்(7:35:03pm): ம்ம்


எஸ்.கே(7:35:09pm): நிவாரணத் துகைக்காக சாலை மறியல் தினமும் நடக்கிறது


நேச குமார்(7:35:18pm): ஆம் எஸ்கே


இர.அருள்குமரன்(7:35:22pm): இதனாலே கூட அவர்களில் சிலர் வாங்காமலே இருந்திருப்பார்கள்


நேச குமார்(7:35:43pm): நாகப்பட்டினம் கலைக்டரை அடித்துவிட்டார்கள் சில இளைஞர்கள் என்று கேள்விப்பட்டேன்


எஸ்.கே(7:35:46pm): அவர்கள் ஏராளமாக சம்பாதிக்கும்போது வரி கட்டினார்களா என்ப்து தெரியாது


நேச குமார்(7:35:55pm): அவர் ரொம்ப மந்தமாக செயல்படுபவராம்


நேச குமார்(7:36:08pm): தஞ்சாவூர் கலைக்டர் வந்தபின்பு தான்


நேச குமார்(7:36:12pm): நிலைமை மாற்


நேச குமார்(7:36:17pm): மாறியதாம்


இர.அருள்குமரன்(7:36:23pm):


நேச குமார்(7:37:20pm): அப்பகுதிகளின் பொருளாதாரமே மீனவர்களை பெரும்பாலும் சார்ந்து இருந்தது


எஸ்.கே(7:37:25pm): ஆமாம்


நேச குமார்(7:37:43pm): கல்·ப் பணம் வறண்ட பிறகு


எஸ்.கே(7:37:47pm): நானயத்தின் இரு பக்கம்!


நேச குமார்(7:37:51pm): கடந்த 15 வருடங்களில்


எஸ்.கே(7:37:58pm):


நேச குமார்(7:38:01pm): மெதுவாக கஷ்டப்பட்டு முன்னேறினார்கள்


நேச குமார்(7:38:11pm): எல்லாம் போய்விட்டது ஒரே நாளில்


இர.அருள்குமரன்(7:38:24pm): ஹ¤ம்


எஸ்.கே(7:38:29pm): அது உண்மை


நேச குமார்(7:38:49pm): அவர்களின் மீன்கள் ஏற்றுமதியால் அரசுக்கு அந்நியச் செலாவணீ வந்தது


நேச குமார்(7:39:03pm): அவர்கள் வாங்கியதால், வியாபாரம் பெருகியது


நேச குமார்(7:39:21pm): நிறைய பேர் சீமென்களாகவும் பணி புரிந்து


நேச குமார்(7:39:26pm): பணம் அனுப்பினார்கள்


இர.அருள்குமரன்(7:39:42pm): ம்


நேச குமார்(7:39:48pm): இப்படி மறைமுகமாக அரசுக்கு நிறைய வந்தது


நேச குமார்(7:40:11pm): இன்கம் டாக்ஸ் கட்டியிருப்பார்களா என்றால், சந்தேகம் தான். ஆனால் அதை வைத்து சொல்ல முடியாது


நேச குமார்(7:40:13pm): இப்படி


இர.அருள்குமரன்(7:40:27pm): ம்


நேச குமார்(7:40:37pm): படகுக்கு வரி


நேச குமார்(7:40:49pm): படகுகளுக்கு பயன்படுத்தும் பெற்றோலுக்கு வரி


நேச குமார்(7:40:57pm): இன் ஜின் வரி


நேச குமார்(7:41:21pm): என்று தீப்பெட்டியிலிருந்து, சோப் முதல் எல்லாவற்றிலும் வரி போகத்தான் செய்தது


எஸ்.கே(7:43:53pm): அக்கரைப் பேட்டையில்தான்


எஸ்.கே(7:44:07pm): மீனவக் குப்பம் ஆரம்பிக்கிறது


நேச குமார்(7:44:17pm): இல்லை இல்லை...


நேச குமார்(7:44:28pm): நாகப்பட்டினம் நகரிலேயே கூட


நேச குமார்(7:44:35pm): மீனவப் பகுதிகள்


நேச குமார்(7:44:42pm): நாகப்பட்டினத்துக்கு வடக்கே


எஸ்.கே(7:44:50pm): உப்பனாரு பகுதியில் அங்கு ஆரம்பித்து வேதாரண்யம் போகும் பாதயில் பல ஊர்கள் பலத்த சேதம்


நேச குமார்(7:44:54pm): பட்டினச்சேரி


நேச குமார்(7:45:00pm): காரைக்கால் மேடு


நேச குமார்(7:45:11pm): என்று கடலூர் வரை


நேச குமார்(7:45:20pm): ஆனால் மிகவும் பாதிக்கப் பட்டவை


நேச குமார்(7:45:23pm): நாகூரில் தொடங்கி


எஸ்.கே(7:45:26pm): அது நாகூர், காரைகால் பக்கம். ஆமாம் . அங்கும் இருக்குது


நேச குமார்(7:45:29pm): வேதாரண்யம் வரை


நேச குமார்(7:47:58pm): வேளாங்கன்னி சோகம் கொடூரமானதுதான்


எஸ்.கே(7:49:26pm): நிவாரணப் பொருள் ஏற்றிவரும் லாரிகளை வழிநெடுக மடக்கி கொள்ளையடிக்கிறார்கள்


நேச குமார்(7:49:32pm): ஆம்


KVR(7:49:33pm): :(


நேச குமார்(7:49:39pm): அது நிறைய நடந்திருக்கிறது


நேச குமார்(7:49:48pm): ரஜினி ராம்கி கூட எழுதியிருந்தார்


எஸ்.கே(7:53:03pm): நான் அடுத்த வாரம் செல்லலாம்னு இருக்கேன்


நேச குமார்(7:53:14pm): ஓ...சென்று வாருங்கள்


நேச குமார்(7:53:18pm): செல்வதற்கு முன்


எஸ்.கே(7:53:21pm): சரி, நேச குமார்


நேச குமார்(7:53:25pm): டைபாய்ட் வாக்ஸின்


நேச குமார்(7:53:48pm): சென்னையில் அப்போலோ பார்மஸிகளில் சனிக்கிழமை போடுகிறார்கள்


நேச குமார்(7:53:55pm): கலரா வாக்ஸின்


எஸ்.கே(7:54:01pm): சரி


எஸ்.கே(7:54:09pm): போட்டுக் கொள்கிறேன்


இர.அருள்குமரன்(8:11:20pm): இந்திய நேரம் 7:00 மற்றும் 10:00 மணிக்கு இங்கே கூட்டம் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது


எஸ்.கே(8:59:33pm): அ.கு, சௌந்தர் கஜனைப் பற்றி விசாரித்தார்


இர.அருள்குமரன்(9:01:09pm): வந்து உடனே காணாமல் போய்விட்டார்


உஷா(9:03:50pm): அகு சுனாமி பற்றி மட்டும்தானா? ராம்கியை வந்தால் கேட்கலாம்


எஸ்.கே(9:04:06pm): அ.கு: நம் இணைய நண்பர்கள் பங்களிப்பை ஒரு விதமாக ஒருங்கிணைத்து பெரிய அளவில் ஏதாவது செய்யலாமே


இர.அருள்குமரன்(9:04:31pm): அது தான் நோக்கம்


இர.அருள்குமரன்(9:04:58pm): சேவை என்பது பணம் மட்டுமல்ல


எஸ்.கே(9:06:38pm): ஆமாம். பாதிக்கப் பட்ட இடங்கள் பரவலாக இருக்கு. ஒரு சர்வே பண்ணினால்தான் எங்கு அதிகம் நிவாரணம் போய்ச் சேர்ந்திருக்கு. எங்கு ஒண்ணுமே சேரல்லேங்கறது புலப்படும்


எஸ்.கே(9:06:56pm): logistics தான் முக்கிய பிரச்னை


ஆசிப் மீரான்(9:07:15pm): இப்பதான் அறிவிப்பை பார்த்தேன்


எஸ்.கே(9:07:24pm): இப்போ ரொம்ப confusing-ஆக இருக்கு


இர.அருள்குமரன்(9:08:18pm): ஆமாம் எஸ்கே


இர.அருள்குமரன்(9:08:59pm): ரஜினி ராம்கியை நீங்க தொலைபேசியில் பிடிக்க முடியுமா


எஸ்.கே(9:10:31pm): இப்பொ அதுதான் ட்றை பண்ணறேன்


இர.அருள்குமரன்(9:10:41pm): நல்லது


இர.அருள்குமரன்(9:11:42pm): அவர் வந்தால் பேச சொல்லியே கேட்கலாம்


இர.அருள்குமரன்(9:11:57pm): இங்கே மேடையேறி பேசவும் முடியும்


எஸ்.கே(9:13:09pm): அவருடைய மொபைல் எட்ட வில்லை


இர.அருள்குமரன்(9:13:32pm):


எஸ்.கே(9:13:53pm): மறுபடியும் டிரை பண்ணறேன்


எஸ்.கே(9:15:30pm): இந்த widget-ஐ flash-ல் அமைத்திருக்கிறீர்களா


இர.அருள்குமரன்(9:15:39pm): ஆம்


எஸ்.கே(9:17:06pm): multimedia - கூட இருக்கா


இர.அருள்குமரன்(9:17:16pm): இருக்கு


எஸ்.கே(9:47:24pm): சுனாமி பத்தி என்ன செய்யணும்னுதான் பேசணும்


மரவண்டு(9:47:33pm): பெண்களை வெறுப்பவர்களை


உஷா(9:48:08pm): ஆனா எனக்கு கடல் பக்கதுல வீடு வேணும்ங்கர ஆசையில் சுனாமி மண் வாரி போட்டு விட்டது


சௌந்தர்(9:59:08pm): மரபிலக்கியத்திலும் மற்ற குழுக்களிலும் தொடர்ந்து பங்கு கொள்ளும் கஜனிடமிருந்து சுனாமி தனத்திலிருந்து ஒரு தகவலும் இல்லை. அவருக்கு நான் எழுதிய தனி மடலுக்கும் பதில் இல்லை. இந்த சாட் வகுப்பில் கஜன் வந்ததாக அறிந்தேன். அவர் நலமா?


இர.அருள்குமரன்(10:00:09pm): யாரும் இல்லாத நேரத்தில், அரங்கம் துவங்கும் முன் ஒரு முறை வந்து உடனே போய்விட்டார்


உஷா(10:00:17pm): நேத்து சன் டீவியில் இலங்கையில் சுற்றுலா துறை மிக மோசமாய் பாதித்துள்ளதாய் செய்தி. அந்தமானியில் அதே


இர.அருள்குமரன்(10:00:52pm): நண்பர்களுக்கு ஒரு செய்தி


உஷா(10:00:56pm): நாகூர், வேளாங்கண்ணி, ராமேஸ்வரத்தில் சிறு வியாபாரிகள் வயிற்றில் அடி


சௌந்தர்(10:00:58pm): ஏதானும் எழுதிச் சென்றாரா?


இர.அருள்குமரன்(10:01:34pm): இங்கே பேசிக்கொள்வதனைத்தையும் மறுநாள் இணையத்தில் வெளியிடுவதாக இருக்கிறேன்


இர.அருள்குமரன்(10:01:57pm): மற்றவர்களுக்கும் விஷயம் சென்று சேரவேண்டும் என்பதே நோக்கம்


இர.அருள்குமரன்(10:31:46pm): சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன செய்யலாம்?


எஸ்.கே(10:31:52pm): சுனாமி நிவாரணத்துக்கு அமேரிக்கால யாரனும் வசூல் பண்ணினாங்களா


ஷைலஜா(10:32:01pm): நேரில் போய் பர்க்கணும் அருள் எனக்கு


அருண்(10:32:35pm): இங்கே பி.கே.எஸ் பணம் வசூலிச்சார்...பிரயோஜனமா பண்ணினார். நானும் அவர் கேட்டதை செஞ்சேன்.


இர.அருள்குமரன்(10:32:54pm): முழு நிலவரம் சொல்ல ரஜினி ராம்கியை நாளைக்காவது இங்கே வரவைக்கவேண்டுயது எஸ்.கே உங்க பொறுப்பு


அருண்(10:33:01pm): ரஜினி ராம்கி கிட்டே பேசினேன்...கொஞ்ச நாள் வெயிட் பண்ண சொல்லியிருக்கிறார்


ஷைலஜா(10:33:03pm): இங்க ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமா உதவறோம் ஆனா...


எஸ்.கே(10:33:05pm): ராம்கி சொன்னார் - ஜமக்காளம், பெட் ஷீட் பத்தி


ஷைலஜா(10:33:19pm): ராம்கி கிட்ட நானும் பேசினேன்


அருண்(10:33:20pm): அருள்குமரன்...ரொம்ப நல்லா பண்ணியிருக்கீங்க


இர.அருள்குமரன்(10:33:26pm): :)


அருண்(10:33:32pm): வாழ்த்துக்கள்


ஷைலஜா(10:33:47pm): தேவைப்படும்போது பெற்றூக் கொள்வதாகச் சொல்லிவிட்டார்


அருண்(10:33:50pm): இதை இரா.முருகன், பத்ரி கிட்டே தெரிவியுங்க


எஸ்.கே(10:33:54pm): அ.கு: இன்னும் அவர் கிடைக்கல்ல. தொடர்ந்து try பன்ணி கொண்டு வந்துசேர்க்கறேன்


உஷா(10:33:55pm): நாகை மாவாட்டத்தில் மருந்து பொருட்கள் வேண்டாம் என்ற அறிக்கை பார்த்தேன்


இர.அருள்குமரன்(10:34:08pm): அப்படியா? ஏன்?


அருண்(10:34:09pm): அவங்க இது போல ஒண்ணு பண்ணனும்னு சொல்லிக்கிட்டு இருந்தாங்க


இர.அருள்குமரன்(10:34:35pm): ரா.கா.கிலயும் எழுதியிருக்கேன்


அருண்(10:34:44pm): எல்லோரும் ஒரு சமயம் வந்து பேசினா...உபயோகமா இருக்கும்


இர.அருள்குமரன்(10:34:49pm): அவங்களும் சீக்கிரப் வந்துடுவாங்க


ஷைலஜா(10:34:54pm): சில இடங்களில் துணி மணி எல்லம் சாலையில் கிடக்குதாம்


ஷைலஜா(10:35:14pm): ஆகவே தேவை அறிந்து உதவணும் நாம்


இர.அருள்குமரன்(10:35:20pm): இன்ன நேரம் சந்திப்புன்னு யாராவது பொறுப்பெடுத்து அறிவிக்கணும்


அருண்(10:35:25pm): ஆனா, சுனாமி விஷயத்துலே கொஞ்சம் 'இந்த முயற்சி' லேட் ..ஏன்னா, நிறைய நிவாரணப் பொருட்கள் கெடைச்சுட்டதா அரசாங்கமே சொல்லுது


இர.அருள்குமரன்(10:35:31pm): உரிய நபரை தேடிகிட்டிருக்கேன்


இர.அருள்குமரன்(10:35:48pm): யாராவது செய்ய முடிந்தால் நல்லது


ஷைலஜா(10:35:54pm): இங்கே சமூக அமைப்பு ஒன்றுடன் நாங்கள் சிலர் பொங்கல் முடிந்து நேரில் போகப் போகிறோம்


இர.அருள்குமரன்(10:36:15pm): இல்லை அருண், இப்பதான் வேலை இருக்குன்னு நினைக்கிறேன்


அருண்(10:36:25pm): அதுனால...ஒண்ணும் தப்பு இல்லை...எதிர்காலத்துலே இணைய நண்பர்கள் எல்லாரும் கலந்து பல விஷயங்கள் பண்ணா உதவியா இருக்கும்


இர.அருள்குமரன்(10:36:32pm): எல்லாரும் இதை மறந்து போகிற நேரம் இது


ஷைலஜா(10:36:35pm): அங்கு எங்கள் பணி எப்படி இருக்கலாம் என இங்கு யாரும் கூறிவிடவும்


உஷா(10:36:47pm): ஷைலு ஜனவரி 24 சென்னை வருகிறேன்


இர.அருள்குமரன்(10:37:01pm): @கணேஷ், எத்தனை பேர் வேண்டுமானாலும்


மரவண்டு(10:37:06pm): குட்


அருண்(10:37:06pm): அருள் குமரன் ...அப்படி ஏதேனும் நல்லது செய்யமுடிந்தால் நலமே..


எஸ்.கே(10:37:17pm): அம்மம். வீடியோ கேமரா எல்லாம் அந்த இடத்தை விட்டு போனப்பறம் எங்க என்ன நடக்குதுன்னு தெளிவாதெரியும்n


உஷா(10:37:36pm): நீங்கள் எத்தனை நாள் இருப்பீர்கள்? நான் ஒருவார பயணமாய் வருகிறேன்


இர.அருள்குமரன்(10:37:45pm): மருத்துவம், உடை, சுகாதாரம் தாண்டியும் தேவை இருக்கு


அருண்(10:37:52pm): தமிழ்மணத்துலே அறிவிப்பும், சுட்டியும் கொடுத்தா எல்லாரையும் இணைக்க முடியும்


ஷைலஜா(10:37:53pm): யாரைகேகறீங்க உஷா


உஷா(10:38:12pm): ஷைலு உங்களைதான்


ஷைலஜா(10:38:41pm): நான் அங்குபோய்ப்பார்த்து உங்களுக்கு விவரம் சொல்கிறேன்


இர.அருள்குமரன்(10:38:50pm): நல்லது ஷை


அருண்(10:39:10pm): எந்த உதவி வேணும்னானும் சொல்லுங்க...இங்கே பல விதமா பணம் சேகரிச்சுக்கிட்டு இருக்காங்க


இர.அருள்குமரன்(10:39:27pm): சரி அருண்


ஷைலஜா(10:39:35pm): நம்மில் ஒருவர் அங்கு போய்ப் பார்த்தாலே ஒழிய உண்மை நிலவரம் புரிய வாய்ப்பில்லை


உஷா(10:39:37pm): ஒரு பிள்ளையை படிக்க வைக்கலாம்னு ஐடியா. தத்து எல்லாம் சட்ட பிரச்சனை வரும்.


அருண்(10:39:39pm): ஒரு ஆர்க்கெஸ்ட் ரா பொங்கல் நிகழ்ச்சி போது நடத்தி பணம் சேகரிக்கறதா தகவல்


இர.அருள்குமரன்(10:39:55pm): இங்கே நண்பர்கள் கிட்டேயும் பேசினேன், பொருளா உதவி செய்ய தயாரா இருக்காங்க


அருண்(10:39:58pm): அப்புறம் நாடகமும் நடத்தப்போறதா சொல்றாங்க


ஷைலஜா(10:40:36pm): ஆமாம் இசைகலைஞர்கள் ஏதோ செய்வதாய் தகவல்


இர.அருள்குமரன்(10:40:47pm): நல்லதுதான்


ஷைலஜா(10:41:11pm): பலவிதங்களீல் பணம் புரட்டப்படுகிறது


இர.அருள்குமரன்(10:41:18pm): நிறைய பேருக்கு தேவைப்படுவது ஆதரவான பேச்சுத்தான்


இர.அருள்குமரன்(10:41:31pm): அடிபட்ட மனது


ஷைலஜா(10:41:44pm): உயிருக்கு என்ன விலை கொடுத்து நாம் மீட்டுத்த்ர முடியுமோ


எஸ்.கே(10:41:45pm): அமேரிக்கால சேகரிக்கற பணமெல்லாம் சரியான கைக்கு போய் சேறரதாa


ஷைலஜா(10:42:25pm): குழந்தைகளை இழந்த தாய்க்கு என்ன சொல்லி சமாதானப்படுத்துவது


எஸ்.கே(10:42:28pm): பிழச்சவங்களுக்குத்தானேதாவதுசெய்யணும
anfkuLLஎஸ்.கே(10:43:08pm): அங்க பல குழந்தைங்க திட்டிர்னு அன்னதை யாயிட்டாங்க்a


எஸ்.கே(10:43:58pm): அவங்களை ஏமாத்தறத்துக்குனே பல கேங்குகம் இருக்கு


ஷைலஜா(10:46:42pm): ராம்கி நேர்ல போனவர் வந்து சொல்ல்லட்டும் காத்திருப்போம்


ஷைலஜா(10:47:21pm): நமது பங்கு இதில் எப்படி என யாராவது கூறலாமே


எஸ்.கே(10:47:26pm): அருள்: சொல்லுங்க


ஷைலஜா(10:47:51pm): கிச்சு சொல்லுங்க என்ன பண்ணலாம் சுனாமிக்கு நாம்


எஸ்.கே(10:49:41pm): our team will visit the areas which are really affected including those places which have escaped the limelight


இர.அருள்குமரன்(10:49:51pm): good


ஷைலஜா(10:49:56pm): கண்டிப்பா போலாம்


எஸ்.கே(10:50:04pm): and make an assessment which will be realistic


இர.அருள்குமரன்(10:50:17pm): நல்லது


ஷைலஜா(10:50:19pm): பொங்கல் ஆனதும் நான் வரேன் அங்க சென்னைக்கு திட்டம் போடுங்க கிச்சு


ஷைலஜா(10:50:28pm): கலந்துக்கறேன்


எஸ்.கே(10:50:46pm): right now, the situation is so chaotic that we could make no sence out of the deafening noice created


எஸ்.கே(10:51:11pm): we all will have to take cholera and other shots


இர.அருள்குமரன்(10:51:22pm): சரி


எஸ்.கே(10:51:24pm): collect our own kit


எஸ்.கே(10:51:32pm): water and stuff for us


எஸ்.கே(10:51:56pm): meanwhile I'll talk to ramki and take a list of essentials


எஸ்.கே(10:52:17pm): and also try and speak to my friends in Ngapattinam


எஸ்.கே(10:52:33pm): till then let our friends keep the earmarked donation with themselves


இர.அருள்குமரன்(10:52:33pm): நல்லது


இர.அருள்குமரன்(10:59:35pm): இன்று பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்த்த நபர்கள் யாரும் அரங்குக்கு வரவில்லை


இர.அருள்குமரன்(10:59:52pm): நாளை வருவார்கள் என்று எதிர்பார்கிறேன்


பழனியப்பன்(11:00:09pm): அங்கு சுனாமி பேரலையில் பாதித்தவர்பக


இர.அருள்குமரன்(11:00:16pm): ம்..


பழனியப்பன்(11:00:26pm): பாதித்தவர்களுக்குப் பிராத்தனை செய்தோம்


இர.அருள்குமரன்(11:00:34pm): நல்லது


எஸ்.கே(11:00:45pm): அ.கு: நாலை இந்திய நேரம் எப்போது கூடலாம். rkk-யில் எழுதுகிறீர்களா


எஸ்.கே(11:00:52pm): நாளை


இர.அருள்குமரன்(11:01:22pm): நல்ல சமயம் எது என்று பார்த்து நீங்கள் கூட எழுதலாம்


பழனியப்பன்(11:01:26pm): சிங்கப்பூர் முழுவதும் யின்று மாலை வழிபாடு-ஒரு நிமிட மெளன அஞ்சலி செய்யப்பட்டது


இர.அருள்குமரன்(11:01:42pm): ரஜினி ராம்கியையும் அழைத்து வரவும்


இர.அருள்குமரன்(11:02:04pm): ஆம், அதன் பிறகுதான் இந்த அரங்கம் திறக்கப்பட்டது


பழனியப்பன்(11:02:21pm): நல்ல செயல், வாழத்துக


இர.அருள்குமரன்(11:02:26pm): நன்றி


பழனியப்பன்(11:02:27pm): வாழ்த்துகள், அருள்


ரோஸாவசந்த்(11:03:39pm): நான் தீவிரமா விவாதம் இருக்கும்னு நினைச்சு வந்தேன்


இர.அருள்குமரன்(11:03:45pm): இன்னும் பலரும் படித்திருக்க மாட்டார்கள், ஓய்வு நாள் அல்லவா?


பழனியப்பன்(11:04:07pm): கூட்டம் யில்லாவிட்டால் என்ன நாம் யிருக்கிறோமே?


ரோஸாவசந்த்(11:04:18pm): இருக்கலாம். பத்ரி, ராம்கி


இர.அருள்குமரன்(11:04:25pm): நாளை சம்பந்தப்பட்டவர்கள் வருவார்க்ள் என்று நம்புகிறேன்


ரோஸாவசந்த்(11:04:27pm): போன்றவ்சர்கள் வந்தால் நல்லது


இர.அருள்குமரன்(11:04:47pm): உண்மை நிலவரம் அறிய அவர்கள் தேவைதான்


ரோஸாவசந்த்(11:05:27pm): இந்தியாவில் இருப்பவ்ரக்ளாலேயே ஏதாவது சொல்லமுடியும்


இர.அருள்குமரன்(11:05:49pm): முதலில் நாம் சேகரிக்க நினைப்பது யோசனைகளை


இர.அருள்குமரன்(11:06:32pm): அடுத்து உண்மை நிலவரத்தோடு பொறுத்திப் பார்த்தல்


ரோஸாவசந்த்(11:07:33pm): ஒரு குறிப்பிட்ட நேரத்தையும் தெரிவித்து அறிவிக்கலாமே!


இர.அருள்குமரன்(11:08:08pm): அதை இந்தியாவில் இருக்கும் நேரடி தொடர்புள்ள யாரேனும் செய்தால் நலம்


இர.அருள்குமரன்(11:08:36pm): அந்த பொறுப்பை எற்றுக்கொள்ள ஆள் தேடுகிறேன்


ரோஸாவசந்த்(11:08:38pm): எதை நேரத்தை அறிவீபதையா?


பழனியப்பன்(11:13:46pm): சரி, அருள் யிந்த உரையாடல் குழு வழி என்ன செய்யலாம் என்று கருதுகிறீர்கள்?


ரோஸாவசந்த்(11:14:01pm): சரி, என்னகென்னவோ, நாம் எந்தவகையிலே உருப்படியா ஏதாவதௌ செய்யலாம்னு பேசலாமே!


இர.அருள்குமரன்(11:14:16pm): பலரையும் சந்திக்க வைத்து உரையாட வைக்கலாம்


பிகேசிவகுமார்(11:14:26pm): அருள் இந்திய நேரம் 3:30 இஎஸ்டி நேரம் காலை 5 மணி. ஞாயிறு காலை ஐந்து மணிக்கு இங்கு எல்லாரும் நித்திரையில் இருப்பார்கள். எனவெ முடிந்தால் அடுத்த முறை தயவுசெய்து நேரத்தை இன்னும் கொஞ்சம் தள்ளிப் போட்டால் நிறைய அமெரிக்க நண்பர்கள் பங்கெடுக்கலாம்.


ரோஸாவசந்த்(11:14:29pm): ஓ சரி!


இர.அருள்குமரன்(11:14:32pm): நல்ல யோசனைகளை தொகுக்கலாம்


பிகேசிவகுமார்(11:14:48pm): அதே போல, அறிவிப்பை இன்னும் கொஞ்சம் முன்கூட்டித் தாங்க ப்ளீஸ்.


இர.அருள்குமரன்(11:15:06pm): சரி பிகேஎஸ்


இர.அருள்குமரன்(11:15:25pm): அரங்கம் எல்லா நேரமும் திறத்திருக்கும்


பிகேசிவகுமார்(11:15:27pm): நான் இரவு 12:30 வரை விழித்திருந்தேன். அறிவிப்பு இல்லை. காலை எழுந்து வந்து பார்த்தால் இருக்கிறது. முன்கூட்டியே அறிந்தால் அலாரம் வைத்தாவது எழ முடியும். நன்றி.


உஷா(11:16:04pm): அகு பாதிக்கப்பட்ட அனாதை பிள்ளைகளுக்கு ஏதாவது செய்ய வேண்டும்


ரோஸாவசந்த்(11:16:13pm): அதே


இர.அருள்குமரன்(11:16:20pm): அதனால்தான் அறிவிக்க தாமதம்


ரோஸாவசந்த்(11:16:29pm): உஷாசரியான விஷய்த்தை பேசறீங்க


இர.அருள்குமரன்(11:16:34pm): கட்டாயம் செய்வோம் உஷா


இர.அருள்குமரன்(11:17:36pm): பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்க்க உங்களுக்கு வாய்ப்பு கிடைத்ததா?


உஷா(11:17:40pm): தத்து என்று லீகலாய் முடியாத சூழ்நிலை. ஒரு பிள்ளையின் படிப்பு, எதிர்காலம் பொறுப்பு எடுத்துக் கொள்ளலாம் என்று இருக்கிறோம்


ரோஸாவசந்த்(11:18:11pm): நல்லது உஷா நீங்க அந்த மாதிரியும் செய்யலாம்


உஷா(11:18:21pm): யாராவது சரியான வழி காட்ட முடியுமா


இர.அருள்குமரன்(11:18:22pm): பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்க்க உங்களுக்கு வாய்ப்பு கிடைத்ததா? @மதுரபாரதி


இர.அருள்குமரன்(11:18:38pm): நல்லது உஷா


ரோஸாவசந்த்(11:18:40pm): உஷா ஒஇது தொடர்பா ராம்கி பாபு கூட பேச உத்தேசம்


மதுரபாரதி(11:19:06pm): இங்கு பாதிக்கப்பட்ட இடங்களுக்குக் கிட்டத்தட்ட தினமும் போய்ப் பார்த்து உதவி வருகிறோம் நானும் நண்பர்களும்


உஷா(11:19:20pm): ராம்கியை சென்னை போகும்பொழுது சந்திக்க உத்தேசம்


பழனியப்பன்(11:19:23pm): நல்ல சேவை


ரோஸாவசந்த்(11:19:39pm): உதாரணமா பாலாஜி பாரியோட பதிவுலே பாலு என்று ஒருவர் எழுதியிருக்கார். அதில் இரு 15 நாட்கள் குழந்தை இருந்ததாக


பழனியப்பன்(11:19:56pm): தனியார் உதவியுடன் அரசினரின் உதவி எப்படி யிருக்கிறது?


ரோஸாவசந்த்(11:20:07pm): மதுர பாரதி நீங்க இது குறித்து எழுதி படிகல


இர.அருள்குமரன்(11:20:08pm): நீங்கள் செய்வீர்கள் என்று தெரியும் அதனால்தான் கேட்டேன் @ம.பா.


மரவண்டு(11:20:13pm): பெங்களூரில் இருக்கும் பெரும்பாலான கணினி நிறுவன ஊழியர்களும் ஒரு நாள் ஊதியத்தை சுனாமி நிவாரணத்திற்காக அளித்திருக்கிறார்கள்


மதுரபாரதி(11:20:22pm): அரசினர் உதவியில் அரசியல் உண்டு :-)


பிகேசிவகுமார்(11:20:44pm): ராஜிவ் காந்தி பவுன்டேஷன் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அனைவரையும் தத்து எடுக்கப் போகிறதாய்ப் படித்தேன். தத்தெடுக்க நினைத்த என் நண்பரும் அதனாலேயே அத்திட்டத்தைத் தள்ளி வைத்திருக்கிறார். இல்லையென்றால், அவர் 50 குழந்தைகளைத் தத்தெடுக்க உத்தேசித்துள்ளார். அப்போது ஒரு குழந்தைக்கு ஒருவர் என்று செலவுகளைப் பிறர் பொறுப்பேற்றுக் கொள்ள முடியும். மேலதிக விவரம் அறிந்ததும் எழுதுகிறேன்.


எஸ்.கே(11:20:56pm): முன்பு நான் சொன்னபடி திடீரென்று அனாதையான ஆத்ரவற்ற குழந்தைகல் தான் முதல் target


உஷா(11:21:11pm): ராம்கிருஷ்ணா மடம் சத்தமில்லாமல் தொண்டு செய்வதை நான் பார்த்துள்ளேன்


மரவண்டு(11:21:16pm): நன்று @ பிகேஎஸ்


மதுரபாரதி(11:21:17pm): எழுத நேரமில்லை. திருக்கழுக்குன்றம் வரை சென்று 3 நாள் சாப்பிடாத குழுக்களைப் பார்த்தோம்.


பழனியப்பன்(11:21:17pm): யில்லை. நான் கேட்டது அரசு யியந்திரம் யிதில் எவ்வளவு தூரம் பயன்படுத்தப்படுகிறது என்பதுதான்


இர.அருள்குமரன்(11:21:18pm): சரி பி.கே.எஸ்


இர.அருள்குமரன்(11:21:37pm): கொடுமை @ ம.பா


ரோஸாவசந்த்(11:21:40pm): சிவக்குமார் தகவல் பயனுள்ள்ளது


பழனியப்பன்(11:21:55pm): அரசு ஊழியன் என்ற முறையில் அறிய ஆவல்


மதுரபாரதி(11:21:59pm): சென்னை மெரினா, பெசண்ட் நகரில் உணவு வீணாகிறது. ஒரு 30 மைல் அந்தப் பக்கம் கேட்பார் இல்லை


இர.அருள்குமரன்(11:22:08pm): ஹ¤ம்


உஷா(11:22:17pm): பி.கே.எஸ் எப்படி செய்வது என்று முழித்துக் கொண்டு இருக்கிறேன். சரியான தகவல் கொடுக்கவும்


மதுரபாரதி(11:22:37pm): அரசு ஊழியர்களுக்குச் சில லிமிடேஷன் உள்ளதே. சிவப்பு நாடா என்பார்கள்.


பிகேசிவகுமார்(11:22:45pm): சரி உஷா. திட்டம் செயல்படுத்தப்படுமானால் கண்டிப்பாகச் சொல்கிறேன்.


ரோஸாவசந்த்(11:23:02pm): உங்கள் Bளாகில் எழுதலாம்


பிகேசிவகுமார்(11:23:14pm): எழுதுகிறேன் @ வசந்த்


இர.அருள்குமரன்(11:23:20pm): இதோ இப்போது பேசுகிறோமே, இப்படி நேரடியாக பேசி ஏதேனும் நல்லது நடக்க வழி செய்வதுதான் இந்த அரங்கின் நோக்கம்


பழனியப்பன்(11:23:24pm): யிருக்கலாம் ஆனாலும் யித்தகைய பேரிடர்களின்போது அரசு யியந்திரம் செயல்படுவது உத்தமம் அல்லவா


மதுரபாரதி(11:23:29pm): ஆனால் ஒரு பத்து நாளில் மஹாபலிபுரம் வரை உணவுப் பொருள் மற்றும் அவசர உதவித் தொகை கொடுத்திருக்கிறார்கள்.


இர.அருள்குமரன்(11:23:52pm): அது நிறைவேற ஆரம்பித்திருப்பது குறித்து எனக்கு மெத்த மகிழ்ச்சி


பிகேசிவகுமார்(11:24:08pm): சென்னையில் உதவ விரும்புவோர் வித்யா ஷங்கர் மூலமும் உதவ யோசிக்கலாம். அவரைப் பற்றி மிகவும் நல்லவிதமாக அறிகிறேன். இதுகுறித்து வலைப்பதிவில் எழுதியும் இருக்கிறேன்.


இர.அருள்குமரன்(11:24:19pm): சரி


ரோஸாவசந்த்(11:24:25pm): பார்தேன்


பிகேசிவகுமார்(11:25:16pm): ராம்கியும் அவர் நண்பரும் இப்போது சென்னையில் இருக்கிறார்கள் போல. விரைவில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மீண்டும் திரும்புவார்கள் என்று நினைக்கிறேன். நேற்றிரவு தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றேன். பிடிக்க முடியவில்லை.


இர.அருள்குமரன்(11:26:01pm):


மதுரபாரதி(11:26:14pm): ஆனால் அரசு செயல்படவே இல்லை என்பதும் ஒருவகை அவதூறுப் பிரச்சாரம்தான்.


ரோஸாவசந்த்(11:26:15pm): அவரை இந்த வாரம் ஒரு நாள் அழைக்கலாம் (ராம்கி போன்றவர்களை)


இர.அருள்குமரன்(11:26:24pm): ஆம்


பிகேசிவகுமார்(11:27:24pm): பத்ரி, இன்றைக்கு ராம்கியுடன் பேசப் போவதாகச் சொன்னார். பிரசன்னாவையும் ராம்கியைப் பிடித்து ஸ்டேட்டஸ் அறியும்படிக் கேட்டிருக்கிறேன். விவரம் அறிந்தவுடன் மரத்தடியில் இடுகிறேன்.


உஷா(11:27:30pm): சுற்றுலா சார்ந்த இடத்தில் உள்ள சிறுவியாபாரிகளும் பாவம்தான்


இர.அருள்குமரன்(11:27:50pm): நல்லது @பி.கே.எஸ்


இர.அருள்குமரன்(11:28:10pm): அந்த வசதி செய்ய நேரம் போதவில்லை @ எஸ்.கே


மதுரபாரதி(11:28:40pm): உஷா, உங்களுக்குத் தெரியுமா, மீனவர்கள் தங்களைத் தவிர வேறு யாருக்கும் உதவி கிடைக்கக் கூடாது என்று சண்டை போடுகிறார்கள். இதனால் பாதிக்கப் படுவது சிறு வியாபாரிகள்தாம்.


உஷா(11:29:30pm): உண்மையில் மீனவர்கள் ஓரளவு வசதியானவர்கள்தான்


பிகேசிவகுமார்(11:29:38pm): அப்படியில்லை உஷா


பிகேசிவகுமார்(11:29:47pm): எல்லா மீனவர்களும் வசதியானவர்கள் இல்லை


பிகேசிவகுமார்(11:29:58pm): பகுதிக்குப் பகுதி வேறுபடும்.


இர.அருள்குமரன்(11:29:58pm): உண்மை @பி.கே.எஸ்


மதுரபாரதி(11:30:09pm): அதுமட்டுமல்ல, பாதிப்பு இல்லாதவர்களும் தமக்கு 'நஷ்ட ஈடு' வேண்டும் என்கிறார்கள்!


உஷா(11:30:29pm): பி.கே.எஸ், நான் சென்னையில் பட்டினபாக்கத்தில் இருந்திருக்கிறேன் அப்போது பார்த்த விஷய்ம் இது


ரோஸாவசந்த்(11:30:34pm): மதுரபாரதி இது போல பிரச்சனை இருக்கத்தான் செய்யும்


எஸ்.கே(11:30:46pm): மதுரபாரதி: அடிக்கடி சாலை மறியலில் ஈடுபடுகிறார்கள் அலைத் தடுப்பு சுவர்கள் கட்டிய இடங்களில் பெருமளவு பாதிப்புஇல்லை. ஆனாலும் அவர்களும் நிவாரணப் பணத்துக்குப் போராடுகிறார்கள். பாதிக்கட்ட விவசாயிகளுக்கும் பிரச்னை


மதுரபாரதி(11:31:18pm): உண்மைதான் எஸ்.கே.


உஷா(11:31:24pm): சிறுவியாபாரிகள் கந்துவட்டி வாங்கி வியாபாரம் ஆரம்பித்து இன்று எல்லாம் இழந்து நிற்கிறார்கள்


ரோஸாவசந்த்(11:31:25pm): உஷா பெசன்ட் நகர் சர்ச் பின்னாடி போய் பாருங்க


ரோஸாவசந்த்(11:31:49pm): எனக்கெனவோ ஒப்பிடுவது தேவையில்லை என்று நினைக்கிறேன்


உஷா(11:32:22pm): ரோ. வ எல்லா இடத்திலும் இப்படியும் இருக்கும், அப்படியும் இருக்கும்


பழனியப்பன்(11:32:30pm): யிங்கு யிரவு 11.30 நாளை வாய்ப்பிருந்தால் சந்திப்போம். வணக்கம்


ரோஸாவசந்த்(11:32:32pm): அதே


பிகேசிவகுமார்(11:32:43pm): 11:30 எந்த நேரம்


ரோஸாவசந்த்(11:32:49pm): எங்கு இரவு


பழனியப்பன்(11:32:55pm): சிங்கையில்


ரோஸாவசந்த்(11:33:07pm): கொஞ்சம் இத்திய நேரம்


உஷா(11:33:07pm): இங்கு மாலை ஏழரை


பிகேசிவகுமார்(11:33:11pm): அருள், இங்கே வடகிழக்கில் நாங்கள் இந்திய நேரத்தைவிட 10:30 மணிகள் பின்தங்கி இருக்கிறோம்


மதுரபாரதி(11:33:11pm): ரோஸாவசந்த், யாருக்கு அதிக இழப்போ அவர்களைத்தானே முதலில் கவனிக்க வேண்டும். வீடு, உடமைகளை இழந்தவரும் மற்றவரும் ஒன்றல்லவே.


ரோஸாவசந்த்(11:33:21pm): ஆமாம்


ரோஸாவசந்த்(11:33:57pm): மீனவர்கள் அந்த வகியில் அதிகமாய் பாதிக்க படவில்லை என்Kஇறீர்களா?


ரோஸாவசந்த்(11:34:15pm): எனக்கு எல்லாம் செய்திகள்தான்


மதுரபாரதி(11:34:37pm): அப்படி முயற்சிக்கையில் இழக்காதவரும் வந்து சண்டையிடுகின்றனர். அவர்களது கல்வி நிலைமையை நினைக்கையில் நாம் ஒரு அறியாத குழைந்தைபோலத்தான் அவர்களைப் பொறுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.


ரோஸாவசந்த்(11:35:19pm): பிச்சனைதான்


மதுரபாரதி(11:35:23pm): இல்லை. அப்படிச் சொல்லவில்லை. அதிகம் பாதிக்கப்பட்டது மீனவர்கள்தாம்.


எஸ்.கே(11:35:33pm): @மதுரபாரதி: நாகை பகுதியிலும், சில இடங்களுக்கே மேல்மேல் சாமான்கள் போய்ச் சேருகின்றன. செருதூர் போன்ற இடங்கள் என்ன ஆயிற்று என்றே தெரியவில்லை


மதுரபாரதி(11:35:52pm): ஆனால் ஓரிரண்டுபேர் பிறர் இருந்தால் அவர்களை ஒதுக்கமுடியாது, கூடாது.


ரோஸாவசந்த்(11:36:43pm): /அறியாத குழைந்தைபோல/ நல்ல வார்த்தை அப்படித்தான் செய்யவேண்டும்


மதுரபாரதி(11:37:21pm): அந்த அளவு நேயம் இல்லாவிட்டால் அங்கே பணிசெய்ய முடியாது.


ரோஸாவசந்த்(11:37:49pm): ஆமோதிக்கிறேன்


பிகேசிவகுமார்(11:38:00pm): எஸ்.கே. - பிற பகுதிகளில் நீங்கள் நேரடியாக ஈடுபடக் கூடிய பகுதிகளில் உதவி தேவையென்றால் பத்ரியைத் தொடர்பு கொள்ளுங்கள். பெட்ஷீட்களை நேரடியாக விநியோகிக்க வழி பார்த்துக் கொண்டிருக்கிறார்.அவற்றைப்பயன்படுத்திக் கொள்ளலாம்


மதுரபாரதி(11:39:09pm): நான் போன சமயம் ஒரு 23 வயது இளைஞர்-எல்லாம் இழந்தவர்-அழுதுகொண்டிருந்தார். கேட்டால் குடல்வால் வீக்கம். உடனடி அறுவை சிகிச்சை வேண்டும் என்று மருத்துவர் சொல்லிவிட்டார். ரூ 4000 கட்டாமல் முடியாது.


பிகேசிவகுமார்(11:39:34pm): அவருக்கு அந்த அறுவைசிகிச்சை நடந்ததா @ ம.பா


மதுரபாரதி(11:39:56pm): மிகவும் மனது கஷ்டமாகிவிட்டது. நல்லவேளையாக கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் ஒரு நண்பரைத் தொடர்பு கொண்டேன்.


பிகேசிவகுமார்(11:40:03pm): தேவையென்றால் உங்கள் மூலம் அந்த 4000 ரூபாய்கள் நான் தருகிறேன்.


மதுரபாரதி(11:40:19pm): 2 மணிநேரத்துக்குள் நடந்தது, நல்லபடி, இலவசமாக.


பிகேசிவகுமார்(11:40:30pm): வெரி குட்.


ரோஸாவசந்த்(11:40:31pm): நல்லது


எஸ்.கே(11:40:34pm): @சிவகுமார்: OK. அவரிடம் பேசரேன். நன்றி


மதுரபாரதி(11:40:34pm): அரசு மருத்துவமனையிலும் நல்லவைகள் நடப்பதுண்டு.


இர.அருள்குமரன்(11:40:38pm): மிக்க மகிழ்ச்சி @ ம.பா


ரோஸாவசந்த்(11:40:59pm): நேசகுமார் சிலருக்கு கண் பார்வை போவதாக எழுதியிருந்தார். அது குறித்து மேலதிக தகவல்


ரோஸாவசந்த்(11:41:02pm): உண்டா?


பிகேசிவகுமார்(11:41:06pm): மருத்துவ உதவி, கல்வி உதவி, தினசரி வாழ்க்கை மீட்பு உதவிகளுக்கு முன்னுரிமை தந்து செயல்படலாம்


பிகேசிவகுமார்(11:41:22pm): லாங் டெர்மில் இவை மிகவும் பயனளிக்கும்


ரோஸாவசந்த்(11:41:35pm): நேசக்குமாரின் தகவல் மேலும் அதிர்ச்சியாய் இருந்ததௌ


உஷா(11:41:37pm): வறுமை, நோய், துர்மரணங்கள் ஏன் என்று புத்தருக்கு ஏற்பட்ட சந்தேகங்கள் என்க்கும் தோன்றும்


பிகேசிவகுமார்(11:41:56pm): பத்ரியிடம் நேசகுமார் தகவல் பற்றிப் பேசினேன்


எஸ்.கே(11:41:57pm): @மதுரபாரதி: எந்தப் பக்கமெல்லாம் நீங்க போனீங்க


ரோஸாவசந்த்(11:42:08pm): பத்ரி என்ன சொன்னார்


பிகேசிவகுமார்(11:42:18pm): கண் சுரம் என்று ஒன்று வருவதாக கேள்விப்பட்டாரம். மேலதிக விவரங்கள் அறிந்து சொல்கிறேன் என்றார்


மதுரபாரதி(11:42:29pm): சிவகுமார் மற்றும் நண்பர்கள், நீண்டநாள் பணிக்கு உதவவிரும்பினால் என்னை 091 44 22474302 அல்லது 98400 86650 என்ற எண்களில் தொடர்புகொண்டால் முழு விவரம் சொல்கிறேன்.


எஸ்.கே(11:42:39pm): கண் பார்வை பர்றி ஏதோ பத்திரிக்கையில் படிச்சேன்


பிகேசிவகுமார்(11:42:52pm): அவர் பாவம், புத்தகக் கண்காட்சியில் பிஸியாக இருக்கிறார். அவரைச் சிரமப்படுத்துவது கஷ்டமாக இருக்கிறது. ஆனாலும் நான் தொல்லைப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறேன்.


மதுரபாரதி(11:43:05pm): நாங்கள் சென்னை உத்தண்டி முதல் திருக்கழுக்குன்றம் வரை போனோம்.


பிகேசிவகுமார்(11:43:06pm): நன்றி ம.பா. உங்கள் எண்களைக் குறித்துக் கொண்டேன்.


ரோஸாவசந்த்(11:43:44pm): நானும் குறித்துகோன்டேன். மோசமான கிராமம் ஒன்றை 'தத்து' எடுப்பது பற்றி ரஜினி ராம்கி எழுதியிருந்தார். அது குறித்து முடிவு செய்து. தொடர முயற்சிக்கலாம்.


எஸ்.கே(11:44:17pm): அமேரிக்காவில் வசூல் செய்யும் பணமெல்லாம் எங்கே கொடுக்கிறார்கள் அரசிடமா அல்லது ஏதாவது NGO-க்களிடமா


இர.அருள்குமரன்(11:44:21pm): இன்றைய அரங்க உரையாடலை நாளை மற்றவர்கள் படிப்பதற்காக இணையத்தில் வெளியிடுவது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?


ரோஸாவசந்த்(11:44:53pm): பெரிதாய் ஒன்றும் இல்லை. பயனுள்ளதாய் பெரிதாய் உறவாடவில்லை என்று நினஈகிறேன்


¡டருங்கள்.


பிகேசிவகுமார்(11:45:08pm): ஆமாம், ஒன்றும் பெரிதாய்ப் பேசிவிடவில்லை அருள்


ரோஸாவசந்த்(11:45:12pm): ஒகே சிவகுமார்


பிகேசிவகுமார்(11:45:17pm): வேண்டுமானால், தொகுத்து வெளியிடுங்கள்


மதுரபாரதி(11:45:35pm): அருள், முக்கியமானதைமட்டும் தொகுத்து வெளியிடுங்கள்.


குமரேசன்(11:45:53pm): வேண்டுமானால் தொகுத்து வெளியிடலாம்


இர.அருள்குமரன்(11:46:10pm): அதுதான் பிரச்சனை, யார் தினமும் தொகுப்பது?


மதுரபாரதி(11:46:27pm): இது எத்தனை நாளுக்கு?


எஸ்.கே(11:46:40pm): i have offered already1


இர.அருள்குமரன்(11:46:45pm): தேவைப்படும் வரை நீடிக்க உத்தேசம்


ரோஸாவசந்த்(11:46:58pm): இந்த வாரம் எனக்கு தொகுக்கும் வேலை செய்ய முடியாத்


உஷா(11:47:49pm): பாரதி சார், உங்களுக்கு போன் செய்கிறேன்


ரோஸாவசந்த்(11:47:57pm): மீட்பு பணிகள் என்ப்து இன்னும் ஒரு வரிஷத்திற்கு தேவை என்று நினைக்கிறேன். இதையும் மற்ரதையும் தொடரவேண்டும். மதுரபாரதி உங்களை நேரடியாய் தொடர்பு கொள்கிறேன்


குமரேசன்(11:48:01pm): இதை அப்படியே save செய்ய இயலுமா அருள்?


இர.அருள்குமரன்(11:48:11pm): ம.பா, தங்கள் மடலுக்காக காத்திருக்கிறேன்


குமரேசன்(11:48:35pm): ok madurabhaarathi sir


எஸ்.கே(11:48:40pm): மீண்டும் 7-30 அல்லது 8-00 மணிக்குகூடலாமா


மதுரபாரதி(11:48:40pm): எனக்குக் கொஞ்சம் அவகாசம் கொடுங்கள் அருள். மீட்புப்பணி தலைக்குமேல்.


ரோஸாவசந்த்(11:48:58pm): தகவலுக்கு நன்றி


எஸ்.கே(11:49:02pm): எல்லொரும் வேலையிலிருந்து கூட்டுக்கு வந்திருப்பார்கள்


உஷா(11:49:04pm): பாரதி சார், பத்து நாளில் சென்னை வருகிறேன்


இர.அருள்குமரன்(11:49:06pm): முடியும் குமரேசன், Chat Alertஐ தரவிறக்கிக்கொண்டு இயக்கினால், அதுவே செய்துவிடும் @ குமரேசன்


மதுரபாரதி(11:49:29pm): வந்தால் என்னைக் கூப்பிடுங்கள். என் தொலைபேசி எண் குறித்துக்கொண்டீர்களா?


உஷா(11:49:49pm): எழுதி வைத்துக் கொண்டேன்


ரோஸாவசந்த்(11:49:55pm): நான் உதவி குறித்த்க பதிவில் உங்கள் எண்ணை வெலிYஈTஆளாஆMஆஆ


இர.அருள்குமரன்(11:50:15pm): http://www.shockwave-india.com/tamil/tsunami/ இந்த பக்கத்தை முழுவதும் படித்துவிடுங்கள் @ குமரேசன்


ரோஸாவசந்த்(11:50:39pm): மதுரபாரதிக்கு, உங்கள் எண்ணை உதவி குறித்த பதிவில் வெளியிடலாமா


குமரேசன்(11:50:53pm): ok படிக்கிறேன் அருள்.


மதுரபாரதி(11:51:04pm): ரோ.வ. மடற்குழுவுக்கானால் வெளியிடலாம். எல்லோரும் நண்பர்களே.


ரோஸாவசந்த்(11:51:20pm): நான் சொல்வது தமிழ் மணம் பதிவில்


ரோஸாவசந்த்(11:51:25pm): என் Bளாகில்


ரோஸாவசந்த்(11:51:37pm): உங்களுக்கு பிரச்சனை என தோன்றினால் வேண்டாம்


இர.அருள்குமரன்(11:51:38pm): அதாவது இணையத்தி;


மதுரபாரதி(11:51:38pm): ஓ, செய்யலாம். விரும்புகிறவர்கள் தொடர்புகொள்ள வசதியாக இருக்குமே.


இர.அருள்குமரன்(11:51:45pm): ஆம்


ரோஸாவசந்த்(11:51:58pm): ஏற்கனவேபத்ரி ராம்கி, பாபு எண் உள்ளது


ரோஸாவசந்த்(11:52:05pm): உங்களதையும் சேர்க்கிறேன்


ரோஸாவசந்த்(11:53:02pm): எங்களால் செய்யகூடியதை சொல்லுங்கள்


இர.அருள்குமரன்(11:55:04pm): தமிழகத்தின்பாதிக்கப்பட்ட கோடிகளின் உண்மை நிலை, தேவைகள் இதுபற்றி


இர.அருள்குமரன்(11:56:06pm): வாசன், இன்று நடந்த முக்கிய உரையாடல்கள் இணையத்தில் வெளியிடப்படும்


வாசன்(11:56:41pm): சரி..பலவிதமான செய்திகள் வருகின்றன.வெகு தூரத்தில் வாழ்ந்து கொண்டு எதை நம்புவது என தெரியவில்லை.தமிழக உறவினர்களும் தொ.பேசியில் சரியாக விளக்கம் அளிக்கவில்லை..


ரோஸாவசந்த்(11:56:46pm): நல்லது அருள்


இர.அருள்குமரன்(11:57:09pm): ஆம் சிக்கல் அதுதான் @ வாசன்


உஷா(11:58:35pm): வாசன் பாதிக்கப்பட்டவர்கள் குடிசைவாசிகள், நம்ம உறவினர்களுக்கு என்ன தெரியும்?


வாசன்(11:59:59pm): அதுதான் வருத்தமளிக்கிறது.இங்கே எனது மகன் படிக்கும் தனியார் பள்ளியில் காசு சேர்க்க கைவினை பொருட்களை அடுத்த வாரம் ஏலம் போட்டு ,சுனாமிக்கு நிதி அளிக்க உள்ளனர்..
தேவையற்ற உரையாடல்களை நீக்க உதவிய எஸ்.கே அவர்களுக்கு நன்றி!

கருத்துகள்

மாலன் இவ்வாறு கூறியுள்ளார்…
அன்புள்ள நண்பர்களுக்கு,

இரவு 7 மணிக்கு என்னால் அரங்கிற்கு வர இயலுமா எனத் தெரியவில்லை. எனவே எனது கருத்துக்களையும் யோச்னைகளையும் இங்கு தந்துள்ளேன். சாத்தியப்பட்டால் அருள்குமரன் அவற்றை அரங்கில் வெளியிட்டு விவாதிக்கலாம்.

மூன்று வகையான நிவாரண உதவிகள் தேவைப்படுகின்றன: 1. உடனடித் தேவைகள் 2. நீண்டகாலத் தீர்வுகள்.3. உளவியல் ஆறுதல்கள்
உணவு, மருந்துகள், சில தட்டுமுட்டுச் சாமான்கள் போன்ற உடனடித் தேவைகள் விஷயத்தில் பல அமைப்புக்கள் கவனம் செலுத்தி வருகின்றன. இது போன்ற தேவைகளுக்கு அதிக நிதியும் உழைப்பும் காலமும் தேவையில்லை என்பதால் இதில் பலர் ஆர்வம் காட்டுவது இயல்பே.

மீனவர்கள் கடலுக்குத் திரும்ப தேவைப்படும் சாதனங்கள், (படகுகள், வலைகள், மோட்டர்கள்) பாதுகாப்பான வீடுகள், பழுது பட்ட கட்டுமான அமைப்புக்களை ( சாலைகள் போன்றவை) சீரமைத்தல் ஆகியவை நீண்டகாலத் தீர்வுகள். இதற்குப் பெரும் பணம் தேவை.

மூன்றாவது வகை உதவி உளவியில் ரீதியில் ஆன ஆறுதல்கள். பல்ர் குடும்ப உறுப்பினர்களை கண்ணெதிரே இழந்திருக்கிறார்கள். பல குழந்தைகள் அனாதைகள் ஆகி உள்ளன. இந்த traumaவில் இருந்து மீட்டு அவர்களுக்கு வாழ்வின் மீது நம்பிக்கை ஏற்படுத்துவது பெரும் பணி. இதை நாம் ஏதேனும் வழிகளில் செய்ய முற்படலாம்.

பல் குழந்தைகளுக்கு பாடநூல்கள், விளையாட்டு பொம்மைகள் போன்றவை தேவைப்படுகின்றன. அதை சேகரித்து வழங்க முற்படலாம்.

குளித்தலைக்கு அருகில் திருப்பராய்த்துறை என்ற இடத்தில் ராமகிருஷ்ண குடில் (தபோவனம்) என்ற அமைப்பு இருக்கிறது. ராமகிருஷ்ண மடத்தின் ஆதரவில் நடத்தப்படுவது. அங்கு ஆதரவற்ற குழந்தைகளுக்கு உறைவிடம், உணவு, கல்வி, கைத் தொழில் ஒன்றில் பயிற்சி இவற்றை இலவசமாக அளிக்கிறார்கள். சுனாமியில் பெற்றோர்களை இழந்த குழந்தைகளை அடையாளம் கண்டு அந்தக் குழந்தைகளை ராமகிருஷ்ண குடிலில் சேர்க்க முயற்சிக்கலாம். ஒரு குழந்தைக்கு என்ன செலவாகிறது என்று கேட்டு, ஒரு சில குழந்தைகளை +2 வரை படிப்பதற்கான செலவை நம்மில் சிலர் ஏற்றுக் கொள்ளலாம். (அண்மைக்காலம் வரை நான் சென்னையில் உள்ள ஓர் அமைப்பின் மூலம் இரண்டு பெண் குழந்தைகளை + 2 வரை படிக்க, 12 ஆண்டுகள் உதவி செய்து வந்தேன். அதிகம் செலவாகவில்லை)

அந்த தபோவனத்தில் ஒரு சிறிய கணினி மையம் அமைத்துக் கொடுத்து அந்த மாணவர்களுக்கு கணினிப் பயிற்சி அளிக்கலாம்.

அன்புடன்
மாலன்

அதிகம் பார்க்கப்பட்ட பதிவுகள்

கைப்பேசிக்கான முதல் தமிழ் மின்நூல் வெளியீட்டு விழா!

உங்களோட செல்பேசியை இரண்டுல ஒண்ணு பாத்துடுவோமா?

பிரசவத்தில் கணவனின் பங்கு