சுனாமி மீட்பு உதவி கலந்துரையாடல்

சுனாமிப் பேரலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலகளாவிய தமிழர்கள் அனைவரும் உதவ, உரிய நபர்களோடு கலந்தாலோசிக்க வசதியாக இந்த அரங்கம் நிறுவப்படுகிறது. இணையத்தமிழர்கள் ஒன்று கூடி தங்களின் பங்களிப்பை சரியான திசையில் செலுத்த இந்தத் தொடர்புச்சேவை உதவும் என நம்புகிறேன்.

இந்தப் பேரிடரிலிருந்து மீள நம்மால் இயன்ற அனைத்து வழிகளிலும் முயற்சிப்போம். நம்முடைய முயற்சிகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரடியாக சென்று சேர்கிறதா என்பதை உறுதிப்படுத்த தமிழகத்திலும் இலங்கையிலும் உள்ள இணையத்தமிழர்கள் உதவ வேண்டுகிறேன்

ஜனவரி ஒன்பதாம் தேதி சிங்கை நேரப்படி மாலை 6:01 மணி முதல் (இந்திய நேரம், மதியம் 3:31, அதாவது இன்னும் சில நிமிடங்களில்) இந்த சேவை தொடங்கும்.
(சுனாமியால் இறந்தவர்களுக்கான ஒரு நிமிட மௌன அஞ்சலி 6:00 மணிக்கு சிங்கப்பூரில் கடைபிடிக்கப் படுகிறது, அது முடிந்தவுடனே)

சுட்டி : http://www.shockwave-india.com/tamil/tsunami/

மேல்விபரங்கள் அறிய மேற்கண்ட சுட்டியை சுட்டவும்.

உங்களை அங்கே சந்திக்கிறேன்

அன்புடன்,
இர.அருள் குமரன்

கருத்துகள்

அதிகம் பார்க்கப்பட்ட பதிவுகள்

கைப்பேசிக்கான முதல் தமிழ் மின்நூல் வெளியீட்டு விழா!

உங்களோட செல்பேசியை இரண்டுல ஒண்ணு பாத்துடுவோமா?

பிரசவத்தில் கணவனின் பங்கு