பெண்ணியம்!

 நீங்க செய்தது பெண்கள், தங்களுக்கு நெருக்கமானவங்க கிட்ட செய்றமாதிரி இருக்கு”, என்றார் தோழி.


நேற்று என் கோபம் பற்றிய பதிவுக்குத்தான் இப்படி ஒரு எதிர்வினை!


நான் யோசித்திராத கோணம், உண்மை தான்! என் மனைவிடம் கூட கண்டிருக்கிறேன்.



முதன்முதலில் அவளின் தகிக்கும் கோபத்தை நான் உணர்ந்தது அவள் பிறந்தநாளை மறந்த போது!


மேகமூட்டமான வானத்தைப் போல இருண்டிருக்கும் முகத்தை நீங்கள் காணத் தவறினால் மின்னலும் இடியும் கூடத் தொடரலாம்!


முழு சந்திரமுகியைக் காண விரும்பினால் இதேதும் புரியாத அப்பாவி போல உங்களால் தாங்கமுடிந்த எல்லை வரை போய் பார்க்கலாம்!


ஒரு எச்சரிக்கை. மழை விட்டாலும் தூவானம் விடாத கதையாக நீங்கள் சரணாகதி தத்துவத்தைப் பின்பற்ற ஆரம்பித்துவிட்டாலும் வாதை தொடரும்.


மறதி எனும் வியாதி அவர்களை இவ்விடயத்தில் ஒரு போதும் அண்டாது!


தொடரும் மணவாழ்க்கை உங்களுக்கு பல பாடங்களை அடித்து சொல்லித்தந்து தேற்றி விடும்.


understanding women



நிற்க


நான் ஏன் இப்படி நடந்து கொண்டேன் என்று யோசிக்கும் போது பெண்களின் மனநிலையைப்பற்றி உணர முடிந்து அணுக்கம் கூடுகிறது.


என்னுடைய கோபத்தை நேரடியாக வெளிப்படுத்தி அந்த நபரை அழைத்து உரையாடியிருந்தால் பிரச்சனை தீர்ந்திருக்கும்அது என் மனக்குறைக்கு ஒரு தற்காலிக தீர்வாக ஆகுமே தவிர வேறு பலன் இல்லை.


அதற்கு பதிலாக இதை தங்கம் போல உரசிப் பார்க்க ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொண்டதால் என் நேரம் உரியவர்களுடன் செலவழிக்க மீளுகிறது.


தேவையற்றவர்களை புறந்தள்ள கிடைக்கும் எந்த வாய்ப்பையும் விட்டுவிடக்கூடாது!


பெண்களின் இந்த நேரடியாக வெளிப்படுத்தப் படாத கோபமும் எனக்காக இவன் வருவானா, நிற்பான என்ற சோதனையே என உணர்கிறேன்.


இத்தகய நேரங்களில் நீங்கள் எப்படி முடிவெடுக்கிறீர்கள்? உங்களை மதிக்காமல் பயன்படுத்திக் கொள்ளும் ஆட்களை எப்படி கையாளுகிறீர்கள்?


சொல்லுங்கள் தெரிந்து கொள்கிறேன்.

கருத்துகள்

அதிகம் பார்க்கப்பட்ட பதிவுகள்

கைப்பேசிக்கான முதல் தமிழ் மின்நூல் வெளியீட்டு விழா!

உங்களோட செல்பேசியை இரண்டுல ஒண்ணு பாத்துடுவோமா?

பிரசவத்தில் கணவனின் பங்கு