கைப்பேசிக்கான முதல் தமிழ் மின்நூல் வெளியீட்டு விழா!
வலைப்பதிவாளர்களும் வாசகர்களுமாகிய உங்களை வருக வருக என வரவேற்கிறேன். தங்கள் முன்னிலையில், ஒலிப்பெருக்கி முழக்கமோ மேடையோ அலங்காரமோ இன்றி மெல்ல ஒரு வெளியீட்டு விழா.
என்ன வெளியிடப்போகிறோம்?
தற்போது வெளிவரும் புதிய கைப்பேசிகள் கைக்கணினியின் பெரும்பாலான அம்சங்களை தன்னகத்தே கொண்டிருக்கின்றன. அவைகளின் வசதிகளைக் கொண்டு தமிழில் குறுந்தகவல் அனுப்பும் செயலி சமீபத்தில் சிங்கையில் வெளியீடு கண்டதை அறிந்திருப்பீர்கள்.
குறுந்தகவல்களையும் சிறுகவிதைகளையும் தாண்டி கதைகளையும் நாவல்களையும் கைப்பேசியிலேயே எடுத்துச்செல்லும் வண்ணம் வடிவமைத்தால் நமது பேருந்து மற்றும் இரயில் பயண நேரத்தை மேலும் பயனுள்ள வகையில் செலவழிக்கமுடியும் அல்லவா?
அதற்கான முதல் படியில் காலை எடுத்து வைத்திருக்கிறோம். எழுத்தின் காப்புரிமை பிரச்சனைகளை தவிர்க்கும் விதமாக (மற்றும் என் சுயநலம் காரணமாக) நான் எழுதிய மரத்தடி போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற பாதுகாவல் என்னும் சிறுகதையின் இரண்டாம் பதிப்பை கைப்பேசிக்கான இலவச மின்நூலாக தற்போது வெளியிடுகிறோம்.
என்னுடைய கைப்பேசியில் இந்த நூலை தரவிறக்கி படிக்க முடியுமா?
மேக்ரோ மீடியாவின் ஃபிளாஷ் லைட்டை ஏற்கக்கூடிய கீழ்க்காணும் கைப்பேசி மாதிரிகளில் ஏதேனும் ஒன்று உங்களிடம் இருந்தால் இயலும்
ஃபிளாஷ் லைட் பிளேயர் ஏற்கனவே நிறுவப்பட்டிருக்க வேண்டும் இல்லை எனில் அதை மேற்கண்ட மேக்ரோமீடியா தளத்திலிருந்து பெற்றுக்கொள்ளலாம் (தற்போதைக்கு இதற்கு USD 10 கட்டணம் வசூலிக்கப்படுகிறது, ஆனால் விரைவில் இது கைப்பேசியில் பொதிக்கப்பட்டே கிடைக்கும்)
மின்நூலை நிறுவுவது எப்படி?
53 Kb அளவுள்ள இந்த கோப்பை (Right Click -> Save Target) உங்கள் கணினியில் இறக்கி பின் உங்கள் கைப்பேசிக்கு மாற்றியோ அல்லது நேரடியாக கைப்பேசியில் இறக்கியோ ஃபிளாஷ் லைட் பிளேயர் கொண்டு இயக்கிக்கொள்ளவும். பக்கங்களை திருப்ப அம்புக்குறிகளை பயன்படுத்திக்கொள்ளவும்
மேற்கூறப்பட்ட எந்த வசதியும் இல்லாதவர்கள் இந்நூலைக் காண ஏதும் வழியுண்டா?
உண்டு! இதற்கெனவே கணினியில் இயங்கக்கூடிய பிரத்யேக மொபைல் சிமுலேட்டரை இந்தத் தளத்தில் (கீழே) நிறுவியுள்ளேன். அதன் பொத்தான்களை இயக்கி காணவும்
இனி...
இது குறித்த உங்கள் சந்தேகங்களையும் கேள்விகளையும் பின்னூட்டமாக இட்டால் நான் பதிலளிக்கிறேன்
இப்படிப்பட்ட தமிழ் தொழில்நுட்ப ஆராய்ச்சிகளில் ஈடுபடும் என் போன்றவர்களுக்கு தேவைப்படுவதெல்லாம் உங்களால் கொடுக்க முடிந்த ஊக்கமும், உற்சாகமும், இவை எல்லாம் பயன்பட்டன என்னும் திருப்தியும்தான்
கிடைக்கும்தானே?
அடுத்து என்ன செய்யலாம் என்று தீவிரமாக யோசித்தபடி, தங்கள் வருகைக்கும் ஆதரவிற்கும் நன்றி கூறும்
அன்புடன்,
இர.அருள் குமரன்

- Nokia 3600, 3620, 3650, 3660, 6600, 6620, 6630, 6670, 7610, N-Gage, N-Gage QD
- Siemens SX1
- Sendo X
- Sony Ericsson P800, P900, P910
ஃபிளாஷ் லைட் பிளேயர் ஏற்கனவே நிறுவப்பட்டிருக்க வேண்டும் இல்லை எனில் அதை மேற்கண்ட மேக்ரோமீடியா தளத்திலிருந்து பெற்றுக்கொள்ளலாம் (தற்போதைக்கு இதற்கு USD 10 கட்டணம் வசூலிக்கப்படுகிறது, ஆனால் விரைவில் இது கைப்பேசியில் பொதிக்கப்பட்டே கிடைக்கும்)
மின்நூலை நிறுவுவது எப்படி?
53 Kb அளவுள்ள இந்த கோப்பை (Right Click -> Save Target) உங்கள் கணினியில் இறக்கி பின் உங்கள் கைப்பேசிக்கு மாற்றியோ அல்லது நேரடியாக கைப்பேசியில் இறக்கியோ ஃபிளாஷ் லைட் பிளேயர் கொண்டு இயக்கிக்கொள்ளவும். பக்கங்களை திருப்ப அம்புக்குறிகளை பயன்படுத்திக்கொள்ளவும்
மேற்கூறப்பட்ட எந்த வசதியும் இல்லாதவர்கள் இந்நூலைக் காண ஏதும் வழியுண்டா?
உண்டு! இதற்கெனவே கணினியில் இயங்கக்கூடிய பிரத்யேக மொபைல் சிமுலேட்டரை இந்தத் தளத்தில் (கீழே) நிறுவியுள்ளேன். அதன் பொத்தான்களை இயக்கி காணவும்
இனி...
இது குறித்த உங்கள் சந்தேகங்களையும் கேள்விகளையும் பின்னூட்டமாக இட்டால் நான் பதிலளிக்கிறேன்
இப்படிப்பட்ட தமிழ் தொழில்நுட்ப ஆராய்ச்சிகளில் ஈடுபடும் என் போன்றவர்களுக்கு தேவைப்படுவதெல்லாம் உங்களால் கொடுக்க முடிந்த ஊக்கமும், உற்சாகமும், இவை எல்லாம் பயன்பட்டன என்னும் திருப்தியும்தான்
கிடைக்கும்தானே?
அடுத்து என்ன செய்யலாம் என்று தீவிரமாக யோசித்தபடி, தங்கள் வருகைக்கும் ஆதரவிற்கும் நன்றி கூறும்
அன்புடன்,
இர.அருள் குமரன்
கருத்துகள்
நல்ல முயற்சி. எனக்கும் ஆர்வமாகவே இருக்கிறது, என்னைடம் சோனி எரிக்சன் டி610 உள்ளது. அதுவும் பட்டியலில் காணோமே, அட 6 மாதம் கூட ஆகவில்லை, வாங்கி:-( என்ன செய்யலாம்?
ப்லாக்கர் டெம்ப்ளேட்டில்/செட்டிங்கில் எதாவது மாற்றம் செய்தீர்களா? பழையதெல்லாம் வந்து குழப்ப அதுவே ஒரு காரணம்.
நல்ல முயற்சி.. வாழ்த்துக்கள்..
என்னிடம் Sony Ericsson T700i இருக்கிறது.
அதுவும் listல் இல்லையே?
பனசை நடராஜன்
கைப்பேசிக்கான முதல் தமிழ் மின்நூல் வெளியீட்டு விழா!வுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். அன்று நமது இணையநண்பர்கள் சந்திபபின் போதே - எங்களுக்குப் பிரத்யேகமாக அறிமுகம் செய்ததால் அன்றே பார்த்து பிரமித்தேன். உங்கள் அயராத முயற்சியும், தொழில்நுட்பத்திலும் அதேயளவு தமிழ் ஈடுபாடும் வியக்கவைக்கிறது. உங்களைப்போன்ற - தமிழைத் தொழிநுட்பத்துக்கு இழுத்து வந்தவர்களால்தான் இப்போது அதிகம் தமிழ் படிக்க, எழுதப்படுகிறது என்பது சத்தியமான உண்மை. இது தமிழுக்கு நீங்கள் செய்யும் தொண்டு.
எந்தனையோ கவிஞர்கள், இலக்கியவாதிகள், கதாசிரியர்கள், இன்னபிறர் வரலாம் போகலாம். ஆனால் வருங்காலத்தில் தமிழ் வாழ்வதும், அவர்களுடைய எழுத்துக்கள் வாழ்வதும் - நா.கோ, முத்து, காசி, சுரதா, உமர், அருள் போன்ற தொழில்நுட்பர்களிடம்தான் இருக்கிறது என்பது என்னுடைய அசைக்கமுடியாத நம்பிக்கை.
நேற்றிரவுதான் உங்களுடைய கனவுலகை, என் 5 வயது மகளுக்கு அறிமுகம் செய்தேன். இதுவரை அவள் பார்த்துவந்த தொலைக்காட்சி கேலிச்சித்திரம் போன்றவற்றை அவளே செய்யமுடிவது கண்டு அவள் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையில்லை. அம்மாவிடம் கூப்பிட்டு காட்டி மகிழ்ந்தாள். (எனக்கே பின்புலம் என்ற சொல் ஈழநாதன் பயன்படுத்தித்தான் தெரியும். நேற்று அவள் கூறியது, அந்த பின்புலம் மாத்தலாம்பா. சேஞ் பண்ணிட்டு ஆழ்கடல் வைக்கலாம்:)
அதனால் உங்கள் முயற்சியை என்றும் தொடருங்கள், எங்கள் முழு ஆதரவும் உங்களுக்குண்டு.
அதுபோக கொஞ்சம் நகைச்சுவைக்கு - ஏற்கனவே அங்கு பகிர்ந்துகொண்டது:
அ) புதிதாக கவிதை எழுத முயற்சி செய்பவர்களுக்கு இது இன்னும் வசதி. நாம் உரைநடையாக இட்டாலே, மடக்கி மடக்கிப்போட்டு கவிதையாக்கிவிடும்:)
ஆ) ஃபிளாஷ் இதுவரை சும்மா படம் காட்டுவதற்குத்தான் என்றெண்ணியிருந்தேன். நீங்கள் அதையே (ஃப்ரெஞ் ஆயில், சர்வரோக நிவாரணி போல்) எல்லாவற்றுக்கும் பயன்படுத்த இயலும் என்பதை சாதித்துக்காட்டி வருகிறீர்கள்.
உங்களின் அன்பும் வாழ்த்துக்களும்தான் நான் மேலும் இயங்கத்தேவைப்படும் உந்துசக்தி.
ஊக்கம் பெற்றேன் நன்றி
குறிப்பாக அன்பு, நீங்கள் கனவுலகை மகளுக்கு அறிமுகப்படுத்தி அது பயன்பட்ட சேதி, தமிழ் வார்த்தைகள் புழக்கத்துக்கு வந்தது எல்லாமாக இரட்டிப்பு மகிழ்ச்சி!
காசி, ஆம் என் வலைத்தளத்தை வேறு சேவையருக்கு மாற்றியபின் வந்த குழப்பம் தான் அத்தனையும்
அவசரப்பட்டு செல்பேசியை மாற்ற வேண்டாம். மேலும் மேம்படுத்தப்பட்ட செல்பேசிகள் இன்னும் கொஞ்ச காலத்தில் வெளிவரும் என்று பட்சி சொல்கிறது.
அன்புடன்,
இர.அருள் குமரன்
- விஷி (CEO, www.azhagi.com)
நிராகரிக்கப்படுபவர்களின் வலி எனக்கு தெரியும். ஒரு சபையில் உங்களின் குரலுக்கு சரியான வரவேற்பு கிடைக்கவில்லை என்று அன்று நீங்கள் எங்களுடன் பகிர்ந்துக் கொண்டே போதே புரிந்துக் கொண்டேன்.சிறார்கள் ஓங்கிக் கத்த வேண்டும், பெரியவர்கள் மெதுவாக கத்தினாலே போதும். சிறார்கள் என்று சொன்னது தமிழின் பெயரில் கண்டுபிடிப்புகளை நிகழ்த்திக் கொண்டே இருந்தும் அறியப்படாதவர்கள். தமிழ் மென்பொருள் உலகத்திலும் தாதாக்கள் இருக்கத் தான் செய்கிறார்கள்.அவர்களுக்கு சிறார்கள் கண்டுபிடிக்கும் விசயங்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்ற எண்ணமோ, பாராட்ட வேண்டும் என்ற எண்ணமோ இருப்பதில்லை என்பது வேதனையான விசயம். அவர்களின் ஈகோவும் விட்டுக் கொடுக்காது.
"சந்திரமுகி"யை பற்றி பதிவு போட்டால் விழுந்தடித்துக் கொண்டு வந்துப் பார்க்கும் மக்களுக்கு தனது கண்டுபிடிப்புகளை போட்டு கூவி கூவி வலைப்பதிவுகளை பார்க்க வைப்பது தான் கொடுமையான விசயம். இந்த மாதிரி சில பலரின் கண்டுபிடிப்புகள் சேரப் போய் தான் இன்று வலைப்பதிவுகளையும் தாண்டி தமிழ் மென்பொருளில் எங்கோ போய் கொண்டிருக்கிறோம்.இது மிகவும் மெதுவான வளர்ச்சி என்பது என் கருத்து. உங்களை போன்றோரின் கடின உழைப்பையும் கண்டுக்கொள்ளப்பட்டு ஊக்குவிக்கப்பட்டால் ராக்கெட் வேகத்தில் தமிழ் கணியம் செல்லும் என்பதில் ஐய்யமில்லை.
தடைபல வந்தாலும் துவண்டு விடாதீர்கள். கூவிக் கொண்டே இருங்கள். ஒரு நாள் எல்லோர் காதிலும் விழும் அருள்.
--------------
அட்டஹாசமான வெளியீட்டு விழா அருள். அதுவும் நாங்களேல்லாம் பார்த்த preview பிரமிக்க வைத்தது. அமைதியாக இவ்வளவு பெரிய விஷயத்தை செய்திருக்கும் உங்களிடம் இனி எப்படி font பிரச்சனை போன்ற ஜுஜுபி விஷயங்களை கேட்பது??!! உங்களிடம் கேட்க சில புத்திசாலித்தனமான சந்தேகங்களை யோசிக்க ஆரம்பிக்கிறேன்!! :-)
-----------------------------
நல்ல முயற்சி . வாழ்த்துக்கள். ஸோனி எரிக்ஸனின் V800 மூலம் முயற்சி செய்ததில் தமிழைக் காண முடிகிறது. ஆனால் எழுத்துரு சற்றுத் தெளிவில்லாமல் உள்ளது. தாங்கள் பயன்படுத்திய எழுத்துருவின் (font size) அளவைச் சற்றே சுருக்கி மற்றுமொரு கோப்பாகத்தரமுடியுமா?
நன்றி
எழில்.
என்னுடைய கதை இன்னொரு கைப்பேசியை எட்டியதில் பெருமகிழ்ச்சி (உண்மையில் இவ்வளவு சீக்கிரமாக இது நடக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை)
கட்டாயம் உங்கள் கைப்பேசியின் பரிமாணங்களில் கச்சிதமாக பொருந்தும் வண்ணம் இன்னொரு பதிப்பு வெளியிடுவேன். தாங்கள் சோதித்துச் சொல்லவேண்டும்
அன்புடன்,
இர.அருள் குமரன்
(என்னுடைய 3620 சென்ற வாரம் தான் களவு போனது. வேறு செல்பேசிக்காக காத்திருக்கிறேன். வந்ததும் முயற்சி செய்து பார்க்கிறேன்.).
உங்கள் மற்ற முயற்சிகளும் வெற்றியடைய வாழ்த்துக்கள்.
அன்புடன்
நவன் பகவதி
எம்.கே.குமார்.
ஏலே மக்கா அல்வா,
நீதானா சொல்லுறது?
நீ சொன்னா சரிவெ! நியாந்தான்வெ! :-)
எம்.கே.
-அண்ணாகண்ணன்
நெஜமாவே சூப்பர். கலக்கறீங்க போங்க.
தரதிர்ஷ்டவசமா என்கிட்ட Philips 355. :-( அதனால ப்ரௌசர்லயே பாத்தேன்swf கோப்பை.
ஜாவா மட்டும்தான் தமிழுக்கு ஒரே வழி கைத்தொலைபேசியிலன்னு நெனச்சேன். இது நல்லா இருக்கே! இப்போதைக்கு உடனடியா பயனர்கள் இல்லைனாலும், தொடர்ந்து ப்ளாஷ் கோப்புக்கள் உருவாக்கி வெச்சீங்கன்னா, சில நாட்களுக்குப் பிறகு "mobile content" தமிழ்ல தேடறவங்களுக்கு உங்கள் archive ரொம்ப இன்பமான ஒரு அதிர்ச்சியா இருக்கும்.
தொடர்ந்து வெளியிடவும், இன்னும் சில மாதங்கள் கழித்து நானும் வாசகர் உங்கள் ஜோதியில் (அதாங்க, Flash வாசகர் ஜோதி) ஐக்கியமாகிறேன். :-)
இப்பத்தான் படிச்சேன். ரொம்ப லேட்டோ. பரவாயில்ல. இப்பவாவது பார்த்து வாழ்த்த வந்தியேன்னு சொல்றீங்களா,.. அதுவும் சரிதான்.
தொழில் நுட்பத்துல ரெண்டு படி முன்னாடி போறீங்க,.. வெரி குட். ஆனா, என் கிட்ட மொபைல் இல்ல. இருந்தாலும்,. அன்னிக்கு உங்க போன்ல பார்த்தப்போ பிரமிப்பாவும் ஆர்வமாவும் இருந்துது.
மின்நூல் வெளியீடு கோலாகலமாக நடைபெறுகிறது. மேலும் பலர் வந்து கலந்துகொள்ளுங்கள்.
என்றும் அன்புடன், ஜெ
என்னுடைய சமீபத்திய பதிவாகிய "உங்களோட செல்பேசியை இரண்டுல ஒண்ணு பாத்துடுவோமா?" ஐ பார்த்து அதில் நீங்கள் வாங்க விரும்பும் கைப்பேசியில் MIDP 2 இருக்கிறதா என்று உறுதி செய்துகொள்ளுங்கள்.
யூனிகோட், கைபேசிக்கும் வந்தால் சுகமாயிருக்கும்.
தங்களது மின்நூலை அனைவரும் பெறஇயலாது என்பது எனது எண்ணம், ஏனெனில் நம்மவர்கள் பலரிடம் இன்னமும், அந்த தொழில்நுட்பத்தினை ஏற்கக்கூடிய வசதியுள்ள கைபேசி இல்லை.
மற்றபடி தங்களின் முயற்சிக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.
அன்பின் நாகு, நீங்கள் சொல்வது உண்மைதான் இந்த முயற்சி பலரையும் சென்றடைவது கடினம். இந்த நூல் போன வருடம் வெளியிடப்பட்டது. மேம்பட்ட, பலரும் பயன்படுத்த உகந்த சேவை விரைவில் :)
அருள் குமரனுக்கு!
தமிழை காலஓட்டத்திற்கேற்புடையதாக்கும் தங்கள் பணிக்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும். என்னிடம் Qteg100 உள்ளது. அதில் முயற்சிசெய்தேன் முடியவில்லை.மேலும் தமிழ்குறுஞ் செயலி எங்கே பதிவிறக்கம் செய்யலாம் என்பதை அறியத்தருவீர்களா?
நன்றி!
மேற்கொண்டு நீங்கள் தொடரப்போவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். நன்றி.
வாழ்த்துகள். என் செல்பேசியில் பார்க்க முடியாது. உங்கள் முயற்சிகளுக்கு என்றும் அனைவரின் ஆதரவும் உண்டு
அருள் செல்வன்
தற்பொழுதுதான் இதைப் படித்தேன். அருமையான முயற்சி!
தங்களின் முயற்சி மென்மேலும் வெற்றிபெற எனது வாழ்த்துகள்!
நன்றி - சொ. சங்கரபாண்டி