உங்கள் திஸ்கி வலைப்பதிவு தமிழ்மணம் வீசவேண்டுமா?

ஏதோ ஒரு காரணத்தால் உங்கள் வலைப்பதிவை திஸ்கியிலேயே (Tscii) அமைத்து விட்டீர்கள். தமிழ்மணம் உங்கள் பதிவையும் மற்றவர்களுக்கு அறிவிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள், ஆனால் தமிழ்மணமோ உங்கள் பதிவை, புரியாத ஆங்கில எழுத்துக்களாக காட்டுகிறதே என்று வருத்தப்படுகிறீர்கள்.

இதோ உங்களுக்கான தீர்வு

உதாரணத்துக்கு இராமகி ஐயாவுடைய வளவு வலைப்பதிவை எடுத்துக்கொள்வோம். இப்பதிவிற்கான Atom ஊட்டின் முகவரி

http://valavu.blogspot.com/atom.xml

இந்த ஊட்டை அப்படியே தமிழ்மணம் தளத்தில் இட்டால் மேற்கண்ட பிரச்சனை வரும்

என்னுடைய திஸ்கி -> யுனிகோடு மாற்றியை அலுவலக தளத்தில் நிறுவியுள்ளேன் அதைக் கீழ்கண்டவாறு பயன்படுத்தி ஊட்டை யுனிகோடு தமிழாக மாற்றிக் கொள்ளலாம்

http://dann.sytes.net:8080/converter/tscii2unicode/?rss=http://valavu.blogspot.com/atom.xml

கிடைக்கும் புதிய முகவரியோடு தமிழ் மணம் தளத்தில் பதிவு செய்துகொண்டால் உங்கள் வலைப்பதிவும் தமிழ் மணம் வீசத்தொடங்கும்

உங்கள் வலைப்பதிவு UTF-8 Encodingஐ உபயோகிக்காவிட்டால் கூட "&utf=false" சேர்த்துக்கொள்ளுங்கள்

இப்படி

http://dann.sytes.net:8080/converter/tscii2unicode/?rss={atom/rss ஊட்டு முகவரி இங்கே}&utf=false

இனி உங்கள் வலைப் பதிவையும் நாங்கள் தமிழ்மணம் ஊடாக படித்து ரசிக்கலாம் அல்லவா?

கருத்துகள்

Kasi Arumugam இவ்வாறு கூறியுள்ளார்…
சபாஷ்! ஆனால், என்னமோ தெரியவில்லை, அந்தத் தொடுப்பு சரியாக வேலை செய்யவில்லையே அருள்:(
Arul இவ்வாறு கூறியுள்ளார்…
அன்பின் காசி,

எனக்கு வேலை செய்கிறதே! தளமே இயங்காதது போல காட்டுகிறதா உங்கள் உலாவி?

மேலும் ஆராய உங்களை யாகு தூதுவனில் பிடிக்க இயலுமா?
என்னுடைய முகவரி r_arul_kumaran
Kasi Arumugam இவ்வாறு கூறியுள்ளார்…
Now it works. I will test it later inside the script and tell you tomorrow. in a hurry.
அன்பு இவ்வாறு கூறியுள்ளார்…
அன்புக்குரிய அருள்,

ஒருபுறம் திஸ்கியை தமிழ்மணம் வீசவைக்கும் தொழில்நுட்ப அறிவு மறுபுறம் யாஹீ "தூதுவன்" (சத்தியமாக அந்த பயன்பாட்டை இன்றுதான், உங்களிடமிருந்துதான் கற்றுக்கொள்கிறேன்...)

உங்களைப்போன்ற தொழில்நுட்பத்துடன் இயைந்த தமிழார்வலர்களால்தான் தமிழ் வளர்கிறது.

வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.

என்றென்றும் அன்புடன்,
அன்பு
Kasi Arumugam இவ்வாறு கூறியுள்ளார்…
அருள்,

'வளவு' இப்போது யுனிகோடில் தெரிகிறது. நன்றி.
Badri Seshadri இவ்வாறு கூறியுள்ளார்…
காசி: மற்றுமொரு தளத்திலிருந்து tscii->unicode செய்யாமல் அருளின் அல்கொரிதத்தை அவரிடமிருந்து வாங்கி, நீங்களே உங்கள் தமிழ்மணம் தளத்தின் php script உடன் சேர்த்து வையுங்களேன்?

if (blog is in tscii)
then output (tscii2unicode(string));

இல்லையா?
Arul இவ்வாறு கூறியுள்ளார்…
அன்பின் பத்ரி,

அந்த Source Code நான் பணி புரியும் நிறுவனத்துக்கு சொந்தமானது (நானே எழுதியிருந்தாலும்). எனவே நீங்கள் விரும்பிய வண்ணம் செய்ய இயலாதோ என அஞ்சுகிறேன். ஆனால் தொடர்ந்து அந்த சேவை கிடைக்கும் வண்ணம் பார்த்துக்கொள்ள இயலும். எனவே சிரமம் இராது
தகடூர் கோபி(Gopi) இவ்வாறு கூறியுள்ளார்…
அருள்,

ப்ரமாதம்! கலக்கறீங்க.
தகடூர் கோபி(Gopi) இவ்வாறு கூறியுள்ளார்…
நேயர் விருப்பம்: RSS feed-ஐ யூனிகோடிக்கு மாற்றுவது போல, ஒரு திஸ்கி தளத்தை உங்கள் URLக்கு உள்ளீடாக அளித்தால் அந்த தளத்தின் Style மற்றும் Layout மாறாமல் அப்படியே யூனிகோடிக்கு மாற்றுவது போல வடிவமைத்தால் நன்றாக இருக்கும்.
Arul இவ்வாறு கூறியுள்ளார்…
அன்பின் கோபி,
முதல்கட்ட சோதனை ஏற்கனவே வெற்றி, அடுத்த கட்ட ஆராய்ச்சிகள் தொடர்கின்றன. அதாவது sessions, cookies ஆகியவற்றை சரியாக கடத்துவது போன்ற சோதனைகள்

அதிகம் பார்க்கப்பட்ட பதிவுகள்

கைப்பேசிக்கான முதல் தமிழ் மின்நூல் வெளியீட்டு விழா!

உங்களோட செல்பேசியை இரண்டுல ஒண்ணு பாத்துடுவோமா?

பிரசவத்தில் கணவனின் பங்கு