எண்ணும் எழுத்தும்

இரண்டுமே கண்ணெனத் தகும்தான் ஆனால் சில சமயம் எழுத்துக்களுக்கு பதில் எண்களாக மடலில் வந்தால் என்ன செய்வது?

கீழ்க்கண்ட உதாரணத்தைப் பாருங்கள்

ஓரிரு எண்ணங்கள்

இப்படி HTML encode செய்யப்பட்டு எண்களாக காட்சியளிக்கும் எழுத்துக்களை எப்படி நமக்கு புரியக்கூடிய எழுத்துக்களாக மாற்றுவது?

சுலபமான வழி இருக்கிறது. HTML encodingகுக்கு HTML தான் தீர்வு

முதலில் notepadஐ திறந்து <pre> என்று உள்ளிடவும் பின்னர் மடலிலுள்ள எண்களை ஒத்தி ஒட்டவும் பின்னர் </pre> என்று முடித்து HTML கோப்பாக சேமிக்கவும் (அதாவது .txtக்கு பதிலாக .htm அல்லது .html என்று கோப்பின் பெயர் முடியும் வண்ணம் சேமிக்கவும்)


எடுத்துக்காட்டு

<pre>
&#2963;&#2992;&#3007;&#2992;&#3009; &#2958;&#2979;&#3021;&#2979;&#2969;&#3021;&#2965;&#2995;&#3021;
</pre>

பின்னர் இரட்டைச் சொடுக்கலில் கோப்பை உங்களின் இணைய உலாவியில் திறக்கவும். இப்போது எண்கள் மீண்டும் எழுத்துக்களாகி உங்கள் கண்களுக்கு விருந்தளிக்கும் இப்படி

ஓரிரு எண்ணங்கள்

இனிமேல் எண்களையும் எளிதாக எழுத்துக்கள் ஆக்கிக் கொள்வீர்கள்தானே?

கருத்துகள்

பரணீ இவ்வாறு கூறியுள்ளார்…
மிக்க நன்றி. இன்னும் இது மாதிரி விசயங்கள் இருந்தால் எழுதுங்களேன்.

அதிகம் பார்க்கப்பட்ட பதிவுகள்

கைப்பேசிக்கான முதல் தமிழ் மின்நூல் வெளியீட்டு விழா!

உங்களோட செல்பேசியை இரண்டுல ஒண்ணு பாத்துடுவோமா?

பிரசவத்தில் கணவனின் பங்கு