இடுகைகள்

ஜூன், 2004 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சிங்கையிருந்து சென்னைக்கு-3

ஒரு பயண அனுபவம் (தொடர்கிறது) முக்கிய அறிவிப்புகள் கணீரென ஒலிக்கவேண்டாமா? தேய்ந்துபோன கிராமஃபோன் தட்டின் முனகல் போல ஒலித்த விமான ஓட்டியின் குரல், "விமானத்தில் * ஹைடிராலிக் சிஸ்டம் * பழுதுபட்டிருப்பதால் நாம் மீண்டும் பேங்காக்குக்கு திரும்புகின்றோம்", என்றது. விமான சிப்பந்திகள் இங்குமங்குமாக நடக்கத்துவங்கினர். விமானத்தில் லேசான பதட்டம் நிலவியது பிரச்சனையின் முழு ஆழம் தெரியாத போதும் நடுக்கடலில் விழவேண்டியதிருக்குமோ என்கிற கவலை எல்லாம் எனக்கு ஏனோ வரவில்லை. என் கவலை வேறு, ஒருமணி நேரத்துக்குமேலே பயணம் செய்தபின் மீண்டும் பாங்காக் திரும்புகிறோம் எனவே பாங்காக் செல்லவே ஒரு மணி நேரமாகும் பிறகு மீண்டும் கிளம்பி சென்னை வரவேண்டும். குறைந்தது மூன்று மணிநேர தாமதம். அங்கே சென்னையில் என்னை வரவேற்க இம்முறை அலுவல் காரணமாக தந்தை வரப்போவதில்லை, எனது தாயோ அல்லது என் மாமியாரோ வரக்கூடும். அவர்கள் வெறுமே காத்துக்கொண்டிருப்பார்கள், விசாரித்து அறியமாட்டார்கள். இதனால் அவர்களுக்கும் நிறைமாத கர்பிணியான என் மனைவிக்கும் ஏற்படக்கூடிய அநாவசிய பதட்டம் குறித்துத்தான் நான் கவலைப்பட்டேன். பின்சீட்டில் அம...

சிங்கையிருந்து சென்னைக்கு-2

ஒரு பயண அனுபவம் (தொடர்கிறது) எனக்கு அருகில் அமர்ந்திருந்தவர்களை கவனித்தேன், ஜன்னலை ஒட்டி நான், எனது பக்கத்து இருக்கையில் ஒரு முஸ்லிம் பெண்மணி, மத்திய இருக்கையில் ஒரு சீக்கியர் எல்லாரும் அவர் அவர் வேலையை மட்டும் பார்த்தபடி. மனிதர்கள் ஒவ்வொருவரும் தங்களை தனித்தீவாக உணர்ந்து சுற்றியிருக்கும் மற்றவர்களோடு ஒட்டாமல் இருக்கும் சூழலைப்பற்றி நினைத்துக்கொண்டேன். இயந்திர வாழ்க்கையில் பெரும்பாலோர் அப்படித்தான் ஆகிவிடுகிறார்கள். உதட்டளவில் சிரித்து உள்ளத்துக்கு திரையிட்டு பட்டும்படாமல் பழகுவர். இந்தத்திரை எப்போது விலகும் என்று நினைத்துக்கொண்டிருந்தபோது, இப்படித்தான் என்று காண்பிப்பது போல முன்வரிசையில் ஒரு வாண்டு (வயது 2 அல்லது 3 இருக்கலாம்) இருக்கையில் எழுந்து நின்றபடி எங்கள் பக்கம் திரும்பி தன் பிரசங்கத்தை ஆரம்பித்தது, தனக்கு மட்டுமே புரியக்கூடிய மொழியில் உலக வாஞ்சை அத்தனையும் குழைத்து, தனக்கென அணிதிரண்ட கூட்டத்தைக்கண்ட தானைத்தலைவனென முழங்கிக்கொண்டிருந்தது. மிகவும் தீவிரமான பாவனைகளுடன் முக்கிய உரையாற்றிக்கொண்டிருக்கும் அந்த சிறுவனின் பக்கம் அனைவரின் கவனமும் திரும்பியது. உள்ளத்திலிருந்து வ...