ஒரு AI தொடர் எழுத


முதலில் ஏ.ஐ. பற்றிய சிறு குறிப்புகளாகத்தான் எழுத உத்தேசம். அப்படி எழுதவும் தொடங்கிவிட்டேன். பிறகுதான் எடுத்துக் கொண்ட பொறுப்பு மெல்ல உறைத்தது!


தெளிவான திட்டமிடலும் பெரும் உழைப்பும் கோரும் வேலை அது!

தீவிர எழுத்தை விட்டு நான் விலகி கிட்டத்தட்ட 20 வருடங்கள் ஆகின்றது. நண்பர்கள் பலருக்கு நான் முன்னொரு காலத்தில் அறிவியல் புனைகதைகள் எழுதியவன் என்பதே புதிய தகவலாக இருக்கக் கூடும்!

பேசுவதிலேயே கூட ஆர்வம் பெரிதும் மங்கிவிட்டது! பெரும்பாலும் ஓரிரு வரிகளிலேயே முடித்துக்கொள்ளுவேன். அதற்காக கூட்டத்தை விட்டு விலகுவது இல்லை, கேட்பதே பெரும் நிறைவு!

உறவினர்கள்களால் என் அமைதியை ஏற்க முடியவில்லை! ஓயாமல் நான் பேசுவதை கேட்டு வளர்ந்தவர்கள் பலர்! தம்பியொருவன் என் வாழ்க்கையை இரு கூறாக பிறித்துச் சொன்னான், "first half செம, second half ரொம்பத் தொய்வு".

சுய புராணம் ஒரு பக்கம் இருக்கட்டும்! எனக்கு மிகவும் ஆர்வமூட்டிய துறை இது! என்னை மிகவும் மிரட்டிய, வெருண்டு ஓடச்செய்த துறையும் இதுதான்.

அல்ஜீப்ரா (Algebra), டிரிக்னாமெட்ரி (Trigonometry) இதெல்லாம் கணித பாடத்தில் ஏன் வைத்துத் தொலைக்கிறார்கள். இதையெல்லாம் நாம் பின்னாளில் எதிர்கொள்ளவே போவதில்லை என்று உங்களைப்போலவே நானும் நினைத்திருதேன்.

ஏ.ஐ. ரூபத்தில் அவை எனக்காக காத்திருந்தது அப்போது எனக்கு தெரிந்திருக்கவில்லை.

செயற்கை நுண்ணறிவு பற்றி எவரும் எளிதாக புரிந்து கொண்டு பயன்படும் வகையில் ஒரு அறிமுகம் கொடுக்க வேண்டும் என்பதே நோக்கம்!

நோக்கம் பெரிது! இது இன்னும் பலரைச் சென்றடைய வேண்டும் என்கிற ஆசையும் இருக்கிறது!

நண்பர்கள் ஆவன செய்வீர்கள் என்ற நம்பிக்கையும்!

உடன் வாருங்கள், துணை நில்லுங்கள்!

பிரம்மாண்டமான பல விஷயங்கள் அப்படித்தான் சாத்தியப்பட்டன!

முதல் அத்யாயத்திற்கான இணைப்பு முதல் பின்னூட்டத்தில், படித்துப்பார்த்து கருத்துகளை பகிருங்கள், தேர் நகரட்டும் ...

#ஏஐ #சாத்தியங்கள்
#AI #possibilities
#ai_possibilities

கருத்துகள்

Arul இவ்வாறு கூறியுள்ளார்…
முகநூலில் பகுதி 1

அதிகம் பார்க்கப்பட்ட பதிவுகள்

கைப்பேசிக்கான முதல் தமிழ் மின்நூல் வெளியீட்டு விழா!

உங்களோட செல்பேசியை இரண்டுல ஒண்ணு பாத்துடுவோமா?

பிரசவத்தில் கணவனின் பங்கு