Men Are from Mars, Women Are from Venus

செவ்வாயிலிருந்து ஆண்களும் சுக்கிரனில் இருந்து பெண்களும் 

 Summary for each chapter from Men Are from Mars, Women Are from Venus book by John Grey1. அறிமுகம்

ஆணும் பெண்ணும் ஒருவருக்கு மற்றவர் வேற்று கிரகவாசி என்று எண்ணும் அளவுக்கு உணர்வு ரீதியாக வேறுபட்டவர்கள். இந்த வேறுபாட்டை புரிந்துகொள்வதும் அதை மதித்து நடப்பதும் அவர்களது உறவை வளர்க்கும்.

2. மதிப்பீடு

ஆண் பெண்
சரி செய்பவர்கள்.                     குடும்ப மேம்பாட்டுத் தலைவி.

ஆண்

ஆண் பொதுவாக தன் வேலையை தானே பார்த்துக்கொள்ள விரும்புகிறான். அழைக்காமல் வழங்கப்படும் உதவியை, தன் செயல் திறன்மீது வைக்கப் பட்ட சவாலாக எடுத்துக்கொள்கிறான். தன் செயலும் திறனும் மதிக்கப்பட வேண்டும், பாராட்டப்பட வேண்டும் என்று விரும்புகிறான். அதனால் அது சம்பந்தப்பட்ட அலட்சியத்தையும் கேலியையும் வெறுக்கிறான். நம்பகமான பலன்களை தராததால் ஆண் உணர்வு அடிப்படையில் முடிவு எடுப்பதை தவிர்க்கிறான்.

பெண்

பெண் ஒத்துழைப்பை விரும்புகிறாள், தனியே செயல்படுவதை முடிந்தவரை தவிர்ப்பாள். அவளுக்கு தனியே வேலை செய்வது, குழுவாக கலந்து செயல்படுவது போன்ற சிறப்புகள் அற்றது. அவள் தன் திறன்மீது மதிப்பு கொள்வதில்லை, அவை ஆறிய, முரட்டுத்தனமான, போட்டிகளை உருவாக்குவதால். மாறாக, அவள் பிறபெண்களுடன் உணர்வு அடிப்படையிலான தொடர்புகளை அமைத்துக்கொள்கிறாள்.

3. மன அழுத்தம்

ஆண் பெண்
குகையை நாடுவர்.            பேசுவர்.

ஆண்

சிரமான சவாலை சந்திக்கும்போது, ஆண் அமைதிகொள்கிறான். அவனே அப்பிரச்சனையை சமாளிக்க முடியும் என்று நம்புகிறான், அடுத்தவரின் தலையீட்டை அவன் விரும்பவில்லை. அவன் பேசினால் அது சுருக்கமாக தான் சொல்ல வந்த தகவலை கடத்துவதாக இருக்கும். முடிந்தவரை கேட்பதை தவிர்ப்பான்.

பெண்

பெண்கள் எப்போதும் மற்றவர்களுக்கு உதவும் பொருட்டு பேச்சை நாடுவாள். அப்போது தன் உணர்வுகளையும் வெளிப்படுத்துவாள். அவர்கள் பேச்சை பேச்சாகவே விரும்புகிறார்கள், கேட்பதில் மகிழ்கிறார்கள்.

4. ஊக்கம்

ஆண் பெண்
தேவைப்படுகிறோம் என்கிற உணர்வு.           நேசிக்கப்படுகிறோம் என்கிற உணர்வு.

ஆண்

பொதுவாக ஆண் உள்ளுணர்வால் தன் நலனில் அக்கறை காட்டுவான். இந்த சுயநல வெளிப்பாடு சுற்றியிருப்போரால் தவறென உணரப்படலாம். உறவில் ஆண் தன் இணையையும் பார்த்துக்கொள்ள பழகவேண்டும்.

தன் கவனம் தேவை என்று உணர வேண்டும்.

ஆண் தன் இணையின் தேவையை நிறைவேற் விரும்புவதை உணர்த்தி, அவளை அதனை ஏற்க வைக்க வேண்டும்.

பெண்

பெண்ணிடம் இயல்பாகவே மற்றவரைப் பார்த்துக்கொள்ளும் உள்ளுணர்வு இருக்கிறது, அது தனக்கே பாதகமாக இருந்தாலும். ஓர் உறவில், அவள் அன்பை பெற கற்க வேண்டும். அது நடந்தால் தான், இருவரும் மணவாழ்வின் தேவைகள் அனைத்தும் கிடைக்கப் பெறுவர்.

பெண்கள் தம் தேவைகள் பரிசீலிக்கப்படுவதையும், மதிக்கப்படுவதையும் உணர வேண்டும். ஆகவே, அவர்கள் தன் ஆசையை வெளிப்படுத்தி அதை நிறைவேற்றும் அனைத்து தகுகிகளும் இணைக்கு இருப்பதை உணர்த்தி ஊக்கப்படுத்தவேண்டும்

இருவரும்

இணையை பாராட்டவும், ஏற்றுக் கொள்ளவும், மன்னிக்கவும் தயாராக இருக்கவும். தோல்வியின் போது ஒருபோதும் பழிபோடக்கூடாது.

5. மொழி

ஆண் பெண்
நேரடியான, தகவலாக.                 வியப்போடு, கலை நயத்துடன்.

ஆண்

ஆண் பேச்சை விபரங்களை கடத்த மட்டுமே பயண்படுத்துகிறான். அதனால் அவன் பேசும் முன்பே மனதில் திருத்தி அமைக்கிறான். இதனால், அவன் பேசாமல் போவதும் நடக்கலாம். அவன் இணையிடம் யோசனையில் இருப்பதையும் முடிந்தவுடன் திரும்பிவிடுவேன் எனவும் உறுதிப்படுத்த வேண்டும்.

அவன் சிக்கலில் இருக்கும்போது இணை கவலை தெரிவிப்பதையும், இரக்கம் கொள்வதையும் விரும்புவதில்லை. மாறாக, அவன் பிரச்சனைகளை தன்னிடமே சொல்ல அதைத் தீர்க்கும் திறன் அவனிடம் இருப்பதை உறுதிப்படுத்துவதை விரும்புகிறான். இரக்கம், அவன் திறனை குறைத்து மதிப்பிடுவதாகவே அவனுக்கு உணர்த்தும்.

பெண்

பெண்கள் பேச்சை தங்கள் உணர்வுகளை முழுதாக கடத்த பயன்படுத்துகிறார்கள், அவர்களின் பேச்சில் கலைநயமும் வியப்பும் கலந்திருக்கும். அவர்கள் பேசும்போதே தன் சிந்தனை ஊற்றை சீரமைக்கிறார்கள். பெண்கள் தங்களின் கவலைகளை வெளிப்படுத்தும் போதே, இணையின் திறன்,அன்பு மீதான நம்பிக்கையும் வெளிப்படுத்தவேண்டும்.

பெண்கள் சிக்கலில் இருக்கும்போது, இணையின் அக்கரையையும் கவலை வெளிப்பாட்டையும விரும்புகிறார்கள். அவர்களுடைய பிரச்சனை மிகச் சிறிது என்று சொல்லப்படுவதை அவர்கள் விரும்புவதில்லை. அப்படிச்சொல்வது அவளின் உணர்வை அவமதிக்கும் செயல். ஒரு தீர்வு எட்டப்பட பெண்களின் எல்லா உணர்வுகளும் மதிக்கப்பட்டிருக்க வேண்டும்.

இருவரும்

பழிபோடுவதைத் தவிர்த்தல் உத்தமம். இணை சிரமத்திலிருக்கும் போது தன்னையோ அவரையோ காரணியாக்குவது ஒருபோதும் பலன் தராது.

6.நெருக்கம்

ஆண் பெண்
ரப்பர் வளையம்.                   அலை.

ஆண்

ஆண் தன்னுணர்வு சோதனைக்கு உள்ளாகும் இடத்தைவிட்டு ஓடிவிடுகிறான். அதன்பிறகு, அவனை தொடர்புகொள்ள முடிவதில்லை. அப்போது அவனுக்கு தனிமையான நேரம் தேவை, அது வழங்கப்பட்டால், அந்த ஆதரவு அவனை சீக்கிரம் மீள வைக்கும். ஆனால், இந்த மனோபாவம் பெண்ணுக்கு பெருஞ்சவாலாக ஆகிவிடுகிறது. இழுக்கப்பட்டிருந்த ரப்பர் பட்டையைப இயல்பு திரும்புவதைபோல அவன் காலப்போக்கில் இயல்பு திரும்புவான்.

பெண் இதை சரியாக கையாளும் போது, ஆணும் தான் திரும்பிவிடுவேன் என்றும் மகிழ்சி திரும்பும் என்றும் உறுதியளிக்க வேண்டும்.

பெண்

பெண் அவ்வப்போது மன அழுத்தத்தில் அமிழ்பவளாக இருக்கிறாள்! அப்போது அவள் தன் உணர்ச்சிகளை வெளிப்படுத்த அவசியம் இருப்பதாக உணர்கிறாள். இவ்வுணர்வுகள் கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே காலப்போக்கில் வளர்ந்து வந்தவை, அவை சமீப அல்லது நீண்டநாள் பிரச்சனைக்களின் காரணமாக இருக்கலாம். அப்படி எதுவும் கிடைக்காவிட்டால் ஒன்றை கண்டடைய அவர்களால் முடியும். இந்த உணர்வு நிலையில் இருக்கும் போது அவர்களால் வழக்கம் போல வழங்க முடியாது. அவள் இந்த உணர்வை வெளிப்படுத்த தன் உரிமையைப் பயன்படுத்ததுவாள். உரிய ஆதரவும் நேரமும் வழங்கப்பட்டால், அவள் சீக்கிரமே தன்னை மீட்டெடுத்து இயல்பாகி விடுவாள். இது ஆண்களுக்கு புரிந்துகொள்ள கடினமானது.

பெண்கள் தங்கள் இணை கவலை கொள்ள இடம் கொடாமல், இது அவர்களால் நடப்பது அல்ல என்று தெளிவுபடுத்த வேண்டும்

சில நேரங்களில் ஆணின் தன்ணுணர்வு நேரமும் பெண்ணின் பகிரும் நேரமும் ஒரே நேரத்தில் வரலாம். அந்த சமயத்தில் பெண் தன் நண்பர்களை நாடலாம்.

7. உணர்ச்சித் தேவைகள்

ஆண் பெண்
நம்பிக்கை, ஏற்பு, பாராட்டு, போற்றுதல், ஒப்புதல்மற்றும் ஊக்கம் கவனிப்பு, புரிதல், மரியாதை, பக்தி, சரிபார்ப்பு மற்றும் உறுதியளித்தல்

ஆண்

ஒவ்வொரு ஆணுக்குள்ளும் ஒரு கவசமணிந்த போர்வீரன் தான் காப்பாற்றப்போகும் அபலைப் பெண்ணை தேடியபடியே இருக்கிறான். அவள் அவனை நேசிப்பாள், நம்பிக்கையோடு ஏற்றுக்கொண்டு போற்றி பாராட்டி தன்னை ஒப்படைத்து உற்சாகமூட்டுவாள்.

ஆண் பெண்களின் தேவையறிந்த காதுகொடுத்து கேட்கவேண்டும். கோபப்படுவதோ, காரணம் சொல்வதோ ஆகாது!

பெண்

ஒவ்வோரு பெண்ணின் ஆழ் மனதிலும் ஓர் அபலை இருக்கிறாள், அவள் ஒரு மாவிரன் தன் தேவைகள் அறிந்து பார்த்துக்கொள்வான், மரியாதையாக நடத்துவான், தனக்கே தனக்கென்று இருப்பான், என் செயல்களை சரிபார்த்து உறுதியளிப்பான்.

பெண் இணையின் திறன் மீதும், தன் தேவைக்காக முழு முயற்சி செய்வான் என்றும் நம்பிக்கை வைக்க வேண்டும். அவனை மாற்றவோ ஆட்டுவிக்கவோ முயற்சிக்க கூடாது.

8. கருத்து வேறுபாடுகள்

ஆண் பெண்
தான் சொல்வதே சரி கருத்து.                     வேறுபாடு மறுப்பாக வெளிப்படுவது.

விவாதங்கள் சொல்லால் குறைவாகவும், குரல் மற்றும் உடல் மொழியின் தொனியால அதிகமாகவும் எற்படுகின்றன. பேச்சு எப்போதும் அன்பாகவும் மரியாதையாகவும் இருக்க வேண்டும்.

ஒரு வாதத்தின் போது பெண்களின் உணர்வுகளுக்கு போதுமான கவனம் செலுத்த இயலாமை ஆண்களின் மிக முக்கியமான குறைபாடுகளில் ஒன்றாகும். மறுபுறம், பெண்களின் மிக முக்கியமான குறைபாடுகளில் ஒன்று ஆண்களை அதிகமாக விமர்சிப்பது. இந்த குறைபாடுகளில் ஏதேனும் ஒரு வாதத்திற்கான தூண்டுதலாக இருக்கலாம். இந்த குறைபாடுகள் ஒவ்வொன்றும் இணையின் குறைகளைத் தூண்டலாம், இது வாதத்தை மேலும் வளர்க்கிறது.

ஆண்கள் தவறுகள் செய்யும்போது, அவர்கள் விரக்தியும் கோபமும் அடைகிறார்கள். இந்த நேரத்தில், பெண்கள் அமைதியாக இருந்தது, அவரைத தனியாக விட்டுவிட வேண்டும்.

மன்னிப்பு ஆணாலும் பெண்ணாலும் வெவ்வேறு விஷயங்களாக பார்க்கப்படுகிறது. ஆண்கள் மன்னிப்பை குற்றத்தை ஒப்புக்கொள்வதாக கருதுகின்றனர். பெண்கள் மன்னிப்பை இரக்கத்தின் வெளிப்பாடாக கருதுகின்றனர். இந்த வேறுபாடு பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது, ஏனெனில் ஆண்கள் மன்னிப்பு கேட்க மிகவும் குறைவாகவே விரும்புகிறார்கள்.

வாதங்களுக்குள், பாலினங்களிடையே தொனி பெரும்பாலும் வேறுபடுகிறது. ஆண்கள் பொதுவாக வாதத்தை வெல்வதை உறுதி செய்ய ஆக்ரோஷமான வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்கள். இந்த ஆக்ரோஷமான விவாதத்தில் ஈடுபட விரும்பாத பெண்கள் பொதுவாக வாதங்களின் போது பின்வாங்குகிறார்கள்.

கூடுதலாக, ஆண்களும் பெண்களும் வாதங்களைத் தவிர்ப்பதற்காக வெவ்வேறு அணுகுமுறைகளை பின்பற்றுகிறார்கள். இதைச் செய்ய, ஆண்கள் விலகி பேச மறுப்பார்கள். மறுபுறம், கருத்து வேறுபாடு மறந்துவிட்டதாக பெண்கள் பாசாங்கு செய்வார்கள். அமைதி பனிப்போராய் நிலவும். எனவே, ஆண்கள் தற்காப்பு இன்றி கேட்க வேண்டும். பெண்களளும் விமர்சிக்காமல் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த முயற்சிக்க வேண்டும்.

9. நன்மதிப்பு பெறுவது

ஆண் பெண்
முடிவுகளின் அடிப்படையில்.                          எண்ணங்களின் அடிப்படையில்.

ஆண்கள் முடிவுகளின் அடிப்படையில் மதிப்பிடுகிறார்கள் மற்றும் பெண்களின் சிந்தனையை மதிப்பிடுகிறார்கள். மதிப்புகளின் இந்த வேறுபாட்டிலிருந்து பிரச்சினைகள் எழலாம்.

ஆண்கள் அவர்கள் விரும்புவதைப் பெறவில்லை என்றால், அவர்கள் கொடுப்பதை நிறுத்தி வைக்க வாய்ப்பு உள்ளது. இப்படி நடக்கும் போது, பெண்கள் அதிகமாகக் கொடுப்பதாக உணர்ந்தாலும் தொடர்ந்து கொடுப்பார்கள். ஆனால், அந்தப் பெண் அன்புக்கு அருகதையற்றவளாகவும், பாராட்டப்படாதவளாகவும், வெறுப்பாகவும் உணரத் தொடங்குவாள்.

இந்த வேறுபாடுகளை சமாளிக்க ஆண்களும் பெண்களும் செய்யக்கூடிய சில விஷயங்கள் உள்ளன. ஆண்கள் கேட்கப்படாமலே தங்கள் இணையின் மேல் தங்களுக்கு உள்ள மதிப்பை உணர்த்த வழிகளை அடையாளம் காண வேண்டும். ஆண்களும் எதையும் திரும்பப் பெறாமலே தன் இணை மகிழ்ச்சியாக கொடுப்பதாகக் கருதக்கூடாது.

மறுபுறம், கொடுக்கும் சமத்துவமின்மையால் பெண்கள் மகிழ்ச்சியாக இருப்பதாகப் பாசாங்கு செய்வதைத் தவிர்க்க வேண்டும். பெண்கள் வெறுப்படையத் தொடங்கினால், அவர்கள் கொடுப்பதை மெதுவாகக் குறைக்கத் தொடங்கி பதிலுக்கு விஷயங்களைக் செய்யச சொல்ல கற்றுக்கொள்ள வேண்டும். மேலும், பெண்கள் தங்கள் இணை அன்பாக ஏதாவது செய்யும்போது பாராட்ட வேண்டும். அது அவரை ஊக்குவிக்கும்.

10. உரையாடல்கள்

எப்படி சொல்லலாம், சொல்லக் கூடாது. காதல் கடிதமும், பதில் கடிதமும்.

எதிர்மறை உணர்வுகளைத் தவிர்ப்பதால் அவை விட்டு விலகாது. நாம் எதிர்மறை உணர்வுகளை இரக்கத்துடன் ஏற்றுக்கொள்ள வேண்டும், பின்னரே இந்த உணர்வுகளை குணப்படுத்த முடியும்.

வலி மற்றும் பயத்தைத் தவிர்க்க, ஆண்கள் கோபத்தையும் ஈகோவையும் காட்ட முனைகிறார்கள். அவர்கள் எப்போதுமே வெற்றியைத் தேடுவதால் இதைச் செய்கிறார்கள். இதே உணர்வுகளைத் தவிர்ப்பதற்கு, பெண்கள் மனச்சோர்வுக்கு ஆளாகிறார்கள்.

ஆக்கபூர்வமான உரையாடல் கற்றுக்கொள்வதற்கான முக்கியமான கலை. இதில் ஈடுபட, எதிர்மறை உணர்வுகளின் அழுத்ததிலிருந்து நாம் விடுபட கற்றுக்கொள்ள வேண்டும். இதைச் செய்வதற்கான ஒரு வழி, நம் உணர்வுகளை எழுதத் தொடங்குவது. நம் உணர்வுகளை எழுதுவது நம் எதிர்மறை உணர்ச்சிகளை வெடிக்க விடாமல், கட்டுப்படுத்தப்பட்ட முறையில் வெளிப்படுத்த அனுமதிக்கிறது. இதற்குப் பிறகு, நாம் நம்மை அமைதியாக விளக்க ஒரு சிறந்த நிலையில் இருப்போம்.

11. ஆதரவைப் பெறுதல்

ஆண் பெண்
பொதுவாகவே வேண்டுகோள்களை தவிர்ப்பர்.          ஆதரவு கேட்டுப் பெற விரும்ப மாட்டார்கள்.

செயல்களின் மூலம் ஆண்கள் தங்கள் மதிப்பை நிரூபிக்கிறார்கள். அவர்கள் பொதுவாக கேட்கப்படுவதற்கு காத்திருக்கிறார்கள் இருப்பினும்,விலதங்கள் சேவைகளை வழங்க மறந்துவிடுகிறார்கள். எனவே, பெண்கள் தங்கள் எதிர்பார்ப்புகளைக் கட்டுப்படுத்த கற்றுக்கொள்ள வேண்டும். ஆண்கள் பெண்களின் தேவைகளை உணர்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. பெண்கள் அவர்களுக்குத் தேவைப்படும்போது உதவி கேட்க வேண்டும், ஆனால் அது ஒரு உத்தரவைப் போல் ஒலிக்காமல் இருக்க வேண்டும்.

‘உன்னால் முடியுமா’என்று முடியும் கேள்விகள் பெரும்பாலும் ஆண்களால் அவர்களின் திறன்களைக் கேள்விக்குட்படுத்துவதாக உணரப்படுகின்றன. ஆகையால், அதே கேள்விகளுக்குப் பதிலாக ‘செய்து தருவீர்களா’ என்று முடித்தால் அவர்கள் நேர்மறையாக பதிலளிப்பார்கள்.

ஆணை, அவனுக்கு வசதியான முறையிலும், நேரத்திலும் வேலை செய்ய விடுவது சிறந்தது. அவன் கோரிக்கையைப் பற்றி புகார் செய்தால், இது பொதுவாக ஒரு நல்ல விஷயம். அவர் அதை செய்ய பரிசீலனை செய்கிறார் என்பதே இதன் பொருள், அவர் ஒரு முடிவுக்கு வரும் வரை காத்திருப்பதுதான் சிறந்த அணுகுமுறை.

12. தொடர்ந்து காதலித்தல்


காதலின் நான்கு பருவங்கள்

உறவுகளில், தீர்க்கப்படாத எதிர்மறை உணர்வுகள் எச்சரிக்கை இல்லாமல் திடீரென மேல்தோன்றும், நாம் திடீரென்று வருத்தமடைகிறோம், அல்லது உணர்ச்சிவசப்பட்டு அல்லது தொலைவாய் உணர்கிறோம். நம் இணைக்கு இது நிகழும்போது, அவர்கள் வெளிவர நாம் அவரை ஊக்குவிக்க வேண்டும், அதற்கு சிறிது நேரம் ஆகலாம், அவர்களுக்கு வெளியில் இருந்தும் நம்மிடமிருந்தும் ஆதரவு தேவைப்படலாம். இந்த நேரங்களில், நாம் பொறுமையின்மை அல்லது மனக்கசப்பையும் வெளிப்படுத்தாமல் இருக்க நம்மால் முடிந்த அனைத்தையும் செய்யவேண்டும்.

காலப்போக்கில் காதல் தவிர்க்க முடியாமல் மாறுகிறது: நாம் முதலில் காதலிக்கும்போது நாம் உணரும் அழகிய ஆனந்தம் என்றென்றும் கூடவராது, காலப்போக்கில் நம் தனிப்பட்ட தவறுகள் மற்றும் எதிர்மறை உணர்வுகள் தவிர்க்க முடியாமல் வெளிப்படும். ஆனால் நாம் வாழ்க்கையின் ஏற்ற தாழ்விலும் ஒருவருக்கொருவர் இறுக்கமாக ஒட்டிக்கொண்டால், நம் ஆரம்ப பேரின்பம் படிப்படியாக முதிர்ந்த அன்பின் வடிவமாக மாறும், இது ஒவ்வொரு வருடமும் வலுவாகவும் முழுமையாகவும் மாறும்.

கருத்துகள்

அதிகம் பார்க்கப்பட்ட பதிவுகள்

கைப்பேசிக்கான முதல் தமிழ் மின்நூல் வெளியீட்டு விழா!

உங்களோட செல்பேசியை இரண்டுல ஒண்ணு பாத்துடுவோமா?

பிரசவத்தில் கணவனின் பங்கு