ஆறுமாதக் குழந்தையின் அழுகுரல்
ஒர் உண்மைச் சம்பவம் ஏற்படுத்திய பாதிப்பின் பிரதிபலிப்பு. அதிகாலையில் அந்த இந்தோனேசிய பெண்மணி கண்ணீரும் கலவரமுமாய் காவல் நிலையத்தில் நுழைந்தாள். அவளுடைய ஆறுமாத இந்தியக் குழந்தை அஞ்சலியைக் காணவில்லை. முந்திய தினம்தான் தன் கணவன் ஜலீலைப் பார்க்க மகளுடன் சிங்கை வந்திருந்தாள். வழக்கம் போலவே கணவனின் நண்பரான சூசைநாதனின் இல்லத்தில்தான் தங்கினாள். காலையில் எழுந்து பார்த்தால் குழந்தையை காணவில்லை. காவல்துறை விசாரணை தொடங்கிற்று.தாயின் கூற்றுப்படி முந்திய தினம் இரவு நடந்ததானது,
காவலர்கள் உள் நுழைந்து பார்த்த போது அவள் குறிப்பிட்ட இரத்தக் கறை இல்லை, படுக்கை விரிப்பு நீக்கப்பட்டிருந்தது. தலையணைகளில் ஒன்று துணிகளுடன் அலமாரியில் கிடந்தது. குழந்தை வீட்டினுள் எங்கும் இல்லை. பின்னர் அந்த அடுக்கு மாடிக் கட்டிடத்தின் அடியில் ஒரு குப்பைத்தொட்டியில் கைகளும் கால்களும் பின்புறம் வளைத்துக் கட்டப்பட்ட நிலையில் குழந்தையின் பிணம் கிடைத்தது.
சூசைநாதன் மீது கொலை வழக்கு போடப்பட்டது. நீதிமன்றத்தில் அவர் கூறியதாவது,
கணவனிடம் தொலைபேசி வழி நடந்த சண்டையையும், போலி பாஸ்போர்ட் உபயோகித்து சிங்கையில் நுழைந்திருந்ததையும், காவலரை அணுகும் முன் அதை அவசரமாய் அழித்ததையும் அவள் ஒப்புக்கொண்டாள். ஆனால் மற்றவற்றை மறுத்தாள்.
குழந்தையின் உடல் சோதிக்கப்பட்டதில் கிடைத்த தகவல்கள், குழந்தையின் பெண்ணுறுப்பு கிழிபட்டிருந்தது,உள்ளே சதை வழண்டிருந்தது. இவையும் கட்டப்பட்டிருந்த விதமும் பாலியல் தாக்குதல் நடந்திருக்கலாம் என்று காட்டுகிறது. மரணத்துக்கு காரணம் தலையில் பட்ட பலமான அடி. அதாவது குழந்தை பலமான பாலியல் தாக்குதலுக்குப் பின்னும் உயிர் தரித்திருந்திருக்கிறது, வீட்டினுள்ளிருந்தபடியே குப்பையை வீச பயன்படும் அமைப்பின் வழியே திணிக்கப்பட்டு ஒன்பது மாடி உயரத்தில் இருந்து விழுந்தபோது பட்ட அடிகளில்தான் உயிரை விட்டிருக்கிறது.
வழக்கின் இறுதியில் சூசைநாதனுக்கு தூக்குதண்டனை வழங்கப் பட்டது. காவலரிடம் கொடுத்த வாக்குமூலம், வழக்கில் சொன்ன சாட்சியம் இரண்டும் முன்னுக்குப் பின் முரணாக இருந்ததும். தடய ஆய்வாளர்கள் படுக்கை அறைச்சுவர், இரண்டு தலையணைகள், அவன் கை விரல் நகம் ஆகியவற்றில் கண்டெடுத்தது குழந்தையில் இரத்தம் என்பது மெய்பிக்கப் பட்டதும். இந்தோனேசிய பெண்மணியின் சாட்சியமும் காரணங்கள்.
சம்பவம் நடந்தது ஆகஸ்டு ஐந்து இரண்டாயிரத்து இரண்டில் நான் குடியிருக்கும் இதே ஹவ்காங்கில், ஆனால் அதைப்பற்றி இன்று சேனல் ஐந்தில் ஒளிபரப்பான True Files நிகழ்ச்சியில் கண்டபோது அதிலும் குறிப்பாக கைகளும் கால்களும் பின்புறம் கட்டப்பட்ட நிலையில் குழந்தையிநன் பிணத்தை காட்டியபோது, அந்தக் குழந்தையின் ஓலம் காதுகளில் அறைந்து ஒலித்தது, ஒலிக்கிறது.
இதோ தொனின ஒரே ஒரு விஷயத்தை செயல்படுத்தியாச்சு, உங்களுக்கு ஏதும் தோணுதுங்களா?
"குழந்தையை பக்கத்தில் படுக்க வைத்திருந்தேன், நள்ளிரவில் ஏதோ அரவம் கேட்டதால்
விழிகளை மெல்லத் திறந்தேன். முகத்துக்கு மிக அருகில் சூசைநாதன் குனிந்திருந்தார்.
எனக்கு என்ன செய்வதென்றே தோன்றவில்லை. உறக்கத்தை தொடர்பவள் போல கிடந்தேன். அவர்
அஞ்சலியை எடுத்துக் கொண்டு தன் படுக்கையறையில் நுழைந்துவிட்டார். மீண்டும் சற்று
நேரத்தில் திரும்பிவந்து குழந்தையை பக்கத்தில் கிடத்திவிடுவார் என்று காத்திருந்து
அப்படியே சோபாவில் உறங்கிவிட்டேன். காலை ஆறு மணியளவில் விழித்துப் பார்க்கும்போது
குழந்தை அருகில் இல்லை. சூசைநாதனின் அறைக்கதவை அறைந்து தட்டினேன். வழியை
மறைத்துக்கொண்டு வெளியே வந்த அவர் குழந்தை தன்னுடன் இல்லை என்றும் யாரோ தூக்கிச்
சென்று விட்டதாக சொன்னார். அறைக்குள் தென்பட்ட இரத்தக் கறை பதட்டத்தை
அதிகப்படுத்தியது. உடனே உங்களிடம் வந்துவிட்டேன்"
காவலர்கள் உள் நுழைந்து பார்த்த போது அவள் குறிப்பிட்ட இரத்தக் கறை இல்லை, படுக்கை விரிப்பு நீக்கப்பட்டிருந்தது. தலையணைகளில் ஒன்று துணிகளுடன் அலமாரியில் கிடந்தது. குழந்தை வீட்டினுள் எங்கும் இல்லை. பின்னர் அந்த அடுக்கு மாடிக் கட்டிடத்தின் அடியில் ஒரு குப்பைத்தொட்டியில் கைகளும் கால்களும் பின்புறம் வளைத்துக் கட்டப்பட்ட நிலையில் குழந்தையின் பிணம் கிடைத்தது.
சூசைநாதன் மீது கொலை வழக்கு போடப்பட்டது. நீதிமன்றத்தில் அவர் கூறியதாவது,
"அன்று ஜலீலுக்கும் அவளுக்கும் தொலைபேசியில் பலமான வாக்குவாதம், உடனே இங்கே
வாருங்கள், உங்கள் பணக் கஷ்டத்தைப் பற்றி எனக்கு அக்கறையில்லை என்று இரைந்தாள்.
ஆனால் ஜலீல் செவிசாய்க்கவில்லை, இதன் காரணமாக மிகுந்த வெறுப்புற்றிருந்த அவளிடம்
குழந்தையை விட வேண்டாம் என்று நினைத்து அவளிடம் சொல்லிவிட்டு குழந்தையை என்னுடன்
இருத்திக் கொண்டேன். ஆனால் நள்ளிரவில் என்னுடைய அறைக்குள் அவள் நுழைந்து குழந்தையை
எடுத்துக்கொண்டாள். அவளுடன் புதிதாக இன்னொரு ஆடவனும் இருந்தான். அவனுடைய முகம்
எனக்கு தெளிவாக தெரியவில்லை. இருவரும் வீட்டை விட்டு வெளியேறினார்கள். சற்று
நேரத்தில் அவள் மட்டும் உள்ளே நுழைந்தது தெரிந்தது. என் அறைக்குள் மீண்டும்
நுழைந்தவள் தலையணையை ஒளிப்பது, இன்னும் சில மாற்றங்களை ஏன் செய்தாள் என்பது எனக்கு
புரியவில்லை. காலையில் அவள் குழந்தையைக் காணோம் என்றதும் நான் தான் போலீசிடம்
போவோம் என்றேன். பின்னர் போலீஸ் ஸ்டேஷனை நோக்கி நடந்து கொண்டிருந்த போது
போலீசிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது உடனே வீடு திரும்பு என்று அதனால்
திரும்பிவிட்டேன்"
கணவனிடம் தொலைபேசி வழி நடந்த சண்டையையும், போலி பாஸ்போர்ட் உபயோகித்து சிங்கையில் நுழைந்திருந்ததையும், காவலரை அணுகும் முன் அதை அவசரமாய் அழித்ததையும் அவள் ஒப்புக்கொண்டாள். ஆனால் மற்றவற்றை மறுத்தாள்.
குழந்தையின் உடல் சோதிக்கப்பட்டதில் கிடைத்த தகவல்கள், குழந்தையின் பெண்ணுறுப்பு கிழிபட்டிருந்தது,உள்ளே சதை வழண்டிருந்தது. இவையும் கட்டப்பட்டிருந்த விதமும் பாலியல் தாக்குதல் நடந்திருக்கலாம் என்று காட்டுகிறது. மரணத்துக்கு காரணம் தலையில் பட்ட பலமான அடி. அதாவது குழந்தை பலமான பாலியல் தாக்குதலுக்குப் பின்னும் உயிர் தரித்திருந்திருக்கிறது, வீட்டினுள்ளிருந்தபடியே குப்பையை வீச பயன்படும் அமைப்பின் வழியே திணிக்கப்பட்டு ஒன்பது மாடி உயரத்தில் இருந்து விழுந்தபோது பட்ட அடிகளில்தான் உயிரை விட்டிருக்கிறது.
வழக்கின் இறுதியில் சூசைநாதனுக்கு தூக்குதண்டனை வழங்கப் பட்டது. காவலரிடம் கொடுத்த வாக்குமூலம், வழக்கில் சொன்ன சாட்சியம் இரண்டும் முன்னுக்குப் பின் முரணாக இருந்ததும். தடய ஆய்வாளர்கள் படுக்கை அறைச்சுவர், இரண்டு தலையணைகள், அவன் கை விரல் நகம் ஆகியவற்றில் கண்டெடுத்தது குழந்தையில் இரத்தம் என்பது மெய்பிக்கப் பட்டதும். இந்தோனேசிய பெண்மணியின் சாட்சியமும் காரணங்கள்.
சம்பவம் நடந்தது ஆகஸ்டு ஐந்து இரண்டாயிரத்து இரண்டில் நான் குடியிருக்கும் இதே ஹவ்காங்கில், ஆனால் அதைப்பற்றி இன்று சேனல் ஐந்தில் ஒளிபரப்பான True Files நிகழ்ச்சியில் கண்டபோது அதிலும் குறிப்பாக கைகளும் கால்களும் பின்புறம் கட்டப்பட்ட நிலையில் குழந்தையிநன் பிணத்தை காட்டியபோது, அந்தக் குழந்தையின் ஓலம் காதுகளில் அறைந்து ஒலித்தது, ஒலிக்கிறது.
"முடியலீங்க! மனசு ரொம்ப வலிக்குதுங்க, அந்த சின்னக் குழந்தையை எப்படிங்க
இப்படியெலாம் செய்ய எப்படி மனசு வந்தது, ஒரு வேளை நமக்கும் சின்னக் குழந்தை
இருக்கறதால வலி அதிகமா இருக்கோ!", புலம்பிய மனைவியை சமாதானம் செய்ய முடியவில்லை.
"தகப்பனே ஐந்து பெண்களையும் பலகாலமா கற்பழிச்ச சேதியெல்லாம் சொன்னாங்களே! அப்பக்கூட
இவ்வளவு கஷ்டமா இல்லையே. எப்படி அப்படி நடக்கலாம், அவனுக்கு அரிப்பெடுத்தா
அதுக்குன்னு எங்கெயாச்சும் போகவேண்டியதுதானே? ஆம்பளைங்களுக்கு இப்படியெல்லாம்
தோணுமா!", ஆண்களைப் பொதுப்படுத்தியதால் விளக்க வேண்டியது என் கடமையானது.
"அந்த மாதிரி இடங்களுக்கு அவன் போகிறவனாகவே கூட இருக்கலாம், இல்லை அவனுடைய
பொருளாதாரம் இடம் கொடுக்காமலிருக்கலாம். அந்த நேரத்தில் அவனுக்கு அந்த விபரீத யோசனை
தோன்றியிருக்கிறது, அப்போதைக்கு அவசரமாக தேவைப்பட்டிருக்கிறது. அம்மா நண்பனின்
மனைவி, மனது இடம் கொடுக்காமல் போயிருக்கலாம், அல்லது எதிர்காலம் சிக்கலாகலாம் என்று
தோன்றியிருக்கலாம். குழந்தை சிக்கலில்லாதது, தனக்கு என்ன நடக்கிறது என்பதை
புரிந்துகொள்ள முடியாது, யாரிடமும் போய் சொல்லாது என்று நினைத்திருப்பான். அதன்
வலியையும் அதன் உயிருக்கே ஆபத்தாகலாம் என்பதையும் துளியாவது யோசித்திருந்தால்
இரண்டு உயிர்பலி தவிர்க்கப் பட்டிருக்கும்"
"அவனை விடுங்க அவன் பண்ணுன தப்புக்கு அனுபவிக்கிறான், அந்த குழந்தை என்ன பாவம்
பண்ணுச்சு! மலர்ந்து சிரிக்கவேண்டிய வயசுல அதுக்கு ஏன் இந்தக் கொடுமையெல்லாம்?"
"இந்தக் கேள்விக்கு எங்கிட்ட பதில் இல்லைம்மா! எனக்கும் இது கேள்வி மட்டுந்தான்.
இதையெல்லாம் நாம கேள்விப்படறதும் சிந்திக்கிறதும் இப்படிப்பட்ட கொடுமைங்களில்
சிக்கிக்காம எச்சரிக்கையா இருக்கத் தான், ஹார்மோன் தொந்திரவால கண்டதையும் யோசிச்சு
செயல் படுத்தறதுக்கு முன்னால அவனவனை யோசிக்க வைக்கத்தான். உனக்கு ஒரு எச்சரிக்கை
உணர்வு வந்திருக்கில்லையா, அது போதும். இதை விட்டு வேற பக்கம் மனசைத் திருப்பு",
ஒரு வழியாக படிப்படியாக மனைவியை உறங்க வைத்துவிட்டேன், எனக்குள் இன்னும் அலை
அலையால் அதே விஷயம் முட்டி மோதி அலைக் கழிக்கிறது. என்னால் ஏதும் செய்ய இயலுமா!
நான் என்ன செய்ய வேண்டும்?
இதோ தொனின ஒரே ஒரு விஷயத்தை செயல்படுத்தியாச்சு, உங்களுக்கு ஏதும் தோணுதுங்களா?
கருத்துகள்
எதுக்கும் உங்க ஊர்க்காரரு மாதிரி கடைசில ஒரு 'ஜெய்ஹிந்த்' போட்டுக்குங்க. (அந்த சூசை இந்தியர் தானே?)
இப்படியெல்லாம் கொடுமை செய்ய எப்படி மனசு வருது?
ஐய்யோ, அந்தப் பிஞ்சு என்ன பாடு பட்டிருக்கும்?
மனசைப் பிழியுதுங்க.
இப்படியானவர்கள் மனநோயாளிகள்.
இவர்களை இனம் காண முன் இப்படியான கொடுமைகள் நடந்து விடுகின்றன.
சாதரணமான எவனாலும் ஒரு குழந்தையை இப்படியொரு நோக்கோடு அணுக முடியாது.
லட்சத்தில்; ஒருவர் இப்படியும் கொடூரியாக உருவாகிறார். இவர்களும்" மூடனுக்கும் மனிதனைப் போல்
முகமிருக்குதடா!!!"என நம்மூடே உலாவுகிறார்கள். இலை மறை காயாகக் நடந்து ,நமக்கு தெரியாமலே போவது; நவீன ஊடக வசதியால் ; தெரியவருகிறது. எனினும் கொடுமையே!
யோகன்
பாரிஸ்
வலைப்பதிவுகளை தொடர்ந்து வாசிக்காமல் இருப்பதால் நீங்கள் குறிப்பிடும் ஜெய்ஹிந்த் விஷயம் புரியவில்லை. ஆமாம்! அந்த சூசை இந்தியர்தான். ஆனால் இப்படிப்பட்ட நபர்கள் மதம் இனம் நாடு என்ற பாகுபாடில்லாமல் எங்கும் தென்படுகிறார்கள்
இந்தத்தண்டனை கொடுமையாகத் தெரிந்தாலும் பாதிக்கப்பட்டவன் கண்டிப்பாக இப்படித்தான் சிந்திப்பான்..
/*ஐய்யோ, அந்தப் பிஞ்சு என்ன பாடு பட்டிருக்கும்?*/
அதை நினைச்சாதான் மனசே ஆற மாட்டேங்குது. நம்ம பையனுக்கு கொஞ்சம் ஓடம்பு சொகமில்லைன்னாலே அன்னிக்கெல்லாம் மனசு ஒரு மாதிரி இருக்கும். தொல்லை தாளாமெ அடிச்சுட்டாலோ கேக்கவே வேண்டாம். அவனுக்கு சமாதானம் ஆகுதோ இல்லியோ நமக்கு ஆகாது. இவனுங்கள்ளாம் கொஞ்சம் முன்ன பின்ன யோசிக்கமாட்டானுங்களா!
இன்னும் பல இரவுகள் தூங்க முடியாதுன்னு நினைக்கிறேன்.....ரொம்ப மனசு வலிக்கிறது...இன்னும் ரொம்ப நாளைக்கும் வலிக்கும்...நீங்களோ நானோ ஒண்ணும் பண்ண முடியாது........
அருணா