கைப்பேசிக்கான முதல் தமிழ் மின்நூல் வெளியீட்டு விழா!
வலைப்பதிவாளர்களும் வாசகர்களுமாகிய உங்களை வருக வருக என வரவேற்கிறேன். தங்கள் முன்னிலையில், ஒலிப்பெருக்கி முழக்கமோ மேடையோ அலங்காரமோ இன்றி மெல்ல ஒரு வெளியீட்டு விழா. என்ன வெளியிடப்போகிறோம்? தற்போது வெளிவரும் புதிய கைப்பேசிகள் கைக்கணினியின் பெரும்பாலான அம்சங்களை தன்னகத்தே கொண்டிருக்கின்றன. அவைகளின் வசதிகளைக் கொண்டு தமிழில் குறுந்தகவல் அனுப்பும் செயலி சமீபத்தில் சிங்கையில் வெளியீடு கண்டதை அறிந்திருப்பீர்கள். குறுந்தகவல்களையும் சிறுகவிதைகளையும் தாண்டி கதைகளையும் நாவல்களையும் கைப்பேசியிலேயே எடுத்துச்செல்லும் வண்ணம் வடிவமைத்தால் நமது பேருந்து மற்றும் இரயில் பயண நேரத்தை மேலும் பயனுள்ள வகையில் செலவழிக்கமுடியும் அல்லவா? அதற்கான முதல் படியில் காலை எடுத்து வைத்திருக்கிறோம். எழுத்தின் காப்புரிமை பிரச்சனைகளை தவிர்க்கும் விதமாக (மற்றும் என் சுயநலம் காரணமாக) நான் எழுதிய மரத்தடி போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற பாதுகாவல் என்னும் சிறுகதையின் இரண்டாம் பதிப்பை கைப்பேசிக்கான இலவச மின்நூலாக தற்போது வெளியிடுகிறோம். என்னுடைய கைப்பேசியில் இந்த நூலை தரவிறக்கி படிக்க முடியுமா? மேக்ரோ மீடியாவின் ஃபிளாஷ் லைட்டை ஏற்கக...