இடுகைகள்

தேர்ந்தெடுக்கப்பட்ட பதிவுகள்

Men Are from Mars, Women Are from Venus

படம்
செவ்வாயிலிருந்து ஆண்களும் சுக்கிரனில் இருந்து பெண்களும்   Summary for each chapter from Men Are from Mars, Women Are from Venus book by John Grey 1. அறிமுகம் ஆணும் பெண்ணும் ஒருவருக்கு மற்றவர் வேற்று கிரகவாசி என்று எண்ணும் அளவுக்கு உணர்வு ரீதியாக வேறுபட்டவர்கள். இந்த வேறுபாட்டை புரிந்துகொள்வதும் அதை மதித்து நடப்பதும் அவர்களது உறவை வளர்க்கும். 2. மதிப்பீடு ஆண் பெண் சரி செய்பவர்கள்.                     குடும்ப மேம்பாட்டுத் தலைவி. ஆண் ஆண் பொதுவாக தன் வேலையை தானே பார்த்துக்கொள்ள விரும்புகிறான். அழைக்காமல் வழங்கப்படும் உதவியை, தன் செயல் திறன்மீது வைக்கப் பட்ட சவாலாக எடுத்துக்கொள்கிறான். தன் செயலும் திறனும் மதிக்கப்பட வேண்டும், பாராட்டப்பட வேண்டும் என்று விரும்புகிறான். அதனால் அது சம்பந்தப்பட்ட அலட்சியத்தையும் கேலியையும் வெறுக்கிறான். நம்பகமான பலன்களை தராததால் ஆண் உணர்வு அடிப்படையில் முடிவு எடுப்பதை தவிர்க்கிறான். பெண் பெண் ஒத்துழைப்பை விரும்புகிறாள், தனியே செயல்படுவதை முடிந்தவரை தவிர்ப்பாள். அவளுக்கு தனியே வேலை செய்வது, குழுவாக கலந்து செயல்படுவது போன்ற சிறப்புகள் அற்றது.

செல்பேசியில் தமிழ் நூல்கள் - ஒரு முன்னோட்டம் - பாகம் 1

படம்
(Tamil Mobooks - A preview) சென்ற தமிழ் வருடப்பிறப்பன்று வெளியிடப்பட்ட முதல் மின்நூல் Flash Lite தொழில் நுட்பத்தில் வடிவமைக்கப் பட்டிருந்தது. கணினிகளைப் போலல்லாது செல்பேசிகளில் Flash தொழில்நுட்பம் இன்னும் பரவலாக்கப்படாத நிலையில் இந்த புத்தகம் பலருக்கும் எட்டாக் கனியானது. எனவே ஏற்கனவே பரவலாக பயன்பாட்டில் உள்ள மெபைல் ஜாவா தொழில் நுட்பத்தை பயன்படுத்தி தமிழ் புத்தகங்களை வடிவமைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறேன். அந்த தொழில் நுட்பத்தின் முன்னோட்டத்தை கீழ்க்கண்ட படத்தில் காணவும்.

ஆறுமாதக் குழந்தையின் அழுகுரல்

ஒர் உண்மைச் சம்பவம் ஏற்படுத்திய பாதிப்பின் பிரதிபலிப்பு. அதிகாலையில் அந்த இந்தோனேசிய பெண்மணி கண்ணீரும் கலவரமுமாய் காவல் நிலையத்தில் நுழைந்தாள். அவளுடைய ஆறுமாத இந்தியக் குழந்தை அஞ்சலியைக் காணவில்லை. முந்திய தினம்தான் தன் கணவன் ஜலீலைப் பார்க்க மகளுடன் சிங்கை வந்திருந்தாள். வழக்கம் போலவே கணவனின் நண்பரான சூசைநாதனின் இல்லத்தில்தான் தங்கினாள். காலையில் எழுந்து பார்த்தால் குழந்தையை காணவில்லை. காவல்துறை விசாரணை தொடங்கிற்று.தாயின் கூற்றுப்படி முந்திய தினம் இரவு நடந்ததானது, "குழந்தையை பக்கத்தில் படுக்க வைத்திருந்தேன், நள்ளிரவில் ஏதோ அரவம் கேட்டதால் விழிகளை மெல்லத் திறந்தேன். முகத்துக்கு மிக அருகில் சூசைநாதன் குனிந்திருந்தார். எனக்கு என்ன செய்வதென்றே தோன்றவில்லை. உறக்கத்தை தொடர்பவள் போல கிடந்தேன். அவர் அஞ்சலியை எடுத்துக் கொண்டு தன் படுக்கையறையில் நுழைந்துவிட்டார். மீண்டும் சற்று நேரத்தில் திரும்பிவந்து குழந்தையை பக்கத்தில் கிடத்திவிடுவார் என்று காத்திருந்து அப்படியே சோபாவில் உறங்கிவிட்டேன். காலை ஆறு மணியளவில் விழித்துப் பார்க்கும்போது குழந்தை அருகில் இல்லை. சூசைநாதனின் அறைக்கதவை அறைந்து தட்

உங்களோட செல்பேசியை இரண்டுல ஒண்ணு பாத்துடுவோமா?

செல்பேசிகளிலே(cellphone / handphone) பரவலா பயன்பாட்டுல இருக்கிறது மொபைல் ஜாவா. பல விளையாட்டுக்கள், உபயோகமுள்ள சின்னச் சின்ன செயலிகள், அவ்வளவு ஏன்? தற்போது உபயோகத்துல இருக்கிற இரண்டு தமிழ் குறுச்செய்தி செயலிகள் எல்லாம் இதுல தான் வடிவமைக்கப்பட்டு இருக்கு. உங்க செல்பேசியிலே J2ME (Java 2 Mobile Edition) இருக்கா? MIDP ஒண்ணா இரண்டா? புரியாதவங்களுக்காக இன்னும் கொஞ்சம் விளக்கம் ஜாவாவை செல்பேசி மற்றும் கையடக்க கணினிக்காக மாத்தி எழுதும் போது அவங்களுக்கு இருந்த பெரிய பிரச்சனை கணினி மாதிரி ஒரு தரப்படுத்தல், வரைமுறை அதுகள்ல இல்லாதது தான். ஜாவாவோட வெற்றிக்கு காரணமான அதன் தாரக மந்திரமான ஒரு முறை எழுதிடு எல்லா தளங்களிலும் தடையின்றி இயக்கிடு இங்க தட்டுத்தடுமாறிடக்கூடாதேன்னு MIDP ( Mobile Information Device Profile ) மற்றும் CLDC ( Connected Limited Device Configuration ) அப்படின்னு இரண்டு வரையறை கொண்டுவந்தாங்க. ஒரு செல்பேசியுடைய ஜாவா செயல்பாடுகள் எதுவரைக்கும் போகலாம் அப்படீங்கிறதை அந்த செல்பேசியுடைய MIDP எண்ணும CLDC எண்ணும் சேர்ந்து தீர்மானிக்கும். இப்படிப்பட்ட வரையறைதான் ஜாவாவுக்கு மொபைல் தொழில் நுட்

உள்ளத்தின் அடங்கிய ஓசை

கடந்த ஒரு வருட காலமாக என் உள்ளத்தின் ஒலியற்ற ஓசையை கேட்டிருப்பீர்கள். சிரங்கு அல்லது பேனா பிடித்தவன் கையைப் பற்றி உணர்ந்திருப்பீர்கள் அல்லது கேள்விப்பட்டிருப்பீர்கள். இத்தனைநாள் மௌனத்திற்கும், இப்போதைய தொடக்கத்திற்கும் ஒரு வலுவான காரணம் இருக்கிறது. அதை இன்றே உங்களிடம் பகிர்ந்துகொள்ள செய்த முயற்சி பலிக்கவில்லை. ஆனால் அநேகமாக நாளை ஈடேறும் என்று தோன்றுகிறது. அந்த காரணம் என்ன என்று உங்கள் ஊகத்தை பின்னூட்டமிடுங்கள். ஒரே ஒரு தடயக் குறிப்பு தருகிறேன். என்னுடைய கடைசிப்பதிவு க்கும் இதற்கும் சம்பந்தம் இருக்கிறது :)

கைப்பேசிக்கான முதல் தமிழ் மின்நூல் வெளியீட்டு விழா!

வலைப்பதிவாளர்களும் வாசகர்களுமாகிய உங்களை வருக வருக என வரவேற்கிறேன். தங்கள் முன்னிலையில், ஒலிப்பெருக்கி முழக்கமோ மேடையோ அலங்காரமோ இன்றி மெல்ல ஒரு வெளியீட்டு விழா. என்ன வெளியிடப்போகிறோம்? தற்போது வெளிவரும் புதிய கைப்பேசிகள் கைக்கணினியின் பெரும்பாலான அம்சங்களை தன்னகத்தே கொண்டிருக்கின்றன. அவைகளின் வசதிகளைக் கொண்டு தமிழில் குறுந்தகவல் அனுப்பும் செயலி சமீபத்தில் சிங்கையில் வெளியீடு கண்டதை அறிந்திருப்பீர்கள். குறுந்தகவல்களையும் சிறுகவிதைகளையும் தாண்டி கதைகளையும் நாவல்களையும் கைப்பேசியிலேயே எடுத்துச்செல்லும் வண்ணம் வடிவமைத்தால் நமது பேருந்து மற்றும் இரயில் பயண நேரத்தை மேலும் பயனுள்ள வகையில் செலவழிக்கமுடியும் அல்லவா? அதற்கான முதல் படியில் காலை எடுத்து வைத்திருக்கிறோம். எழுத்தின் காப்புரிமை பிரச்சனைகளை தவிர்க்கும் விதமாக (மற்றும் என் சுயநலம் காரணமாக) நான் எழுதிய மரத்தடி போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற பாதுகாவல் என்னும் சிறுகதையின் இரண்டாம் பதிப்பை கைப்பேசிக்கான இலவச மின்நூலாக தற்போது வெளியிடுகிறோம். என்னுடைய கைப்பேசியில் இந்த நூலை தரவிறக்கி படிக்க முடியுமா? மேக்ரோ மீடியாவின் ஃபிளாஷ் லைட்டை ஏற்கக

சுனாமி அரங்க உரையாடல்கள்-4

ஜனவரி 12, 2005 புதன் அன்று சுனாமி மீட்பு உதவி அரங்கத்தில் நடந்த உரையாடல்கள் இர.அருள்குமரன்(11:16:51am): சந்திப்பதில் உள்ள சிக்கல்கள் ---------------------- அரங்கு இருபத்தி நான்கு மணி நேரமும் திறந்திருக்கும். ஒரு நிமிட இடைவெளிக்குள் அரங்குக்குள் கிட்டத்தட்ட நான்குபேர் நுழைந்து யாருமில்லை என்று வெளியேறிவிடுவது அடிக்கடி நடக்கிறது. பலமுறை முயன்று பார்த்தேன் யாருமே இல்லை என்று பலரும் அலுப்படைகிறார்கள். சிறிது நேரம் அரங்கினுள் காத்திருங்கள் என்று சொன்னால் அதிலும் சிக்கல், கணினியில் ஒன்றுக்கும் மேற்பட்ட சாளரங்களை திறந்துவிடுவதால் மற்ற நபர்கள் வந்து அழைப்பதே நமக்கு தெரிவதில்லை. இப்படியும் சந்திப்புகள் நிகழாமல் போகின்றன யார் எப்போது வருவார்கள்? யாருக்கும் தெரிவதில்லை. சில எளிய தீர்வுகள் --------------- ஒவ்வொருமுறை உள்ளே வந்து வெளியேறும் போதும் நீங்கள் வந்த நேரத்தை (இந்திய நேரப்படி) மறக்காமல் குறிப்பிடுங்கள். இன்ன நேரத்தில் நீங்கள் வருகிறீர்கள் என்பதை மற்றவர்கள் உணர்ந்து அந்த நேரத்திற்கு வர முயற்சிக்க ஏதுவாக இருக்கும் அடுத்து நீங்கள் வர இருக்கும் நேரத்தையும்